Advertisement
குறள் அதிகாரம் : சூது
எழுத்தின் அளவு:   A+  A-

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.

( குறள் எண் : 937 )

மு.வ : சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால் அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும்.

சாலமன் பாப்பையா : சூதாடு களத்துக்குள் காலம் கழிக்கப் புகுந்தால், அது பழஞ்செல்வத்தையும் அழிக்கும். நல்ல குணங்களையும் கெடுக்கும்.

Share  
Bookmark and Share
Advertisement
Advertisement