|
|
|
மருத்துவமனையில் ஜோதிபாசு அனுமதி
|
|
ஜூலை 13,2009,03:06 IST
|
|
|
|
|
கோல்கட்டா: உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிபாசுவுக்கு 96 வயதாகிறது. மூன்று மாதங்களுக்கு முன் அவர், தனது வீட்டில் வழுக்கி விழுந்தார். அது முதல் சில உடல் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார். இந்நிலையில், அவருக்கு உடல் நலம் குன்றியது. இதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்க்கும் படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். கோல்கட்டாவில், சால்ட் லேக் பகுதி இல்லத்திலிருந்து ஜோதிபாசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். |
|
|
|
|
சர்வதேச நீச்சல்: இந்தியாவுக்கு தங்கம்
|
|
ஜூலை 13,2009,02:16 IST
|
|
|
|
|
புதுடில்லி: ஜெர்மனியில் நடந்த சர்வதேச நீச்சல் போட்டியில் இந்திய வீரர் விர்தவால் காதே 50 மீ., "பிரிஸ்டைல்' பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். ஜெர்மனியில் சர்வதேச நீச்சல் போட்டிகள் நடந்தது. இதில் 50 மீ., "பிரிஸ்டைல்' பிரிவில் இந்தியாவின் விர்தவால் காதே முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். இவர் பந்தய தூரத்தை 22.96 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இத்தொடரில் நடந்த 50 மீ., "பிரஸ்ட் ஸ்ட்ரோக்' பிரிவில் மற்றொரு இந்திய வீரர் சந்தீப் செஜ்வால் பந்தய தூரத்தை 28.65 வினாடிகளில் கடந்து இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். தவிர, சமீபத்தில் பிரான்சில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இதேபிரிவில் இவர் பந்தய தூரத்தை 28.77 வினாடிகளில் கடந்துள்ளார். இதன்மூலம் தனது பழைய சாதனையை முறியடித்துள்ளார். இதன்மூலம் வரும் 16ம் தேதி துவங்கவிருக்கும் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் சாதிக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தற்போது ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியாவின் காதே, செஜ்வால் மற்றும் அக்னீஸ்வர் மூவரும் இத்தொடருக்காக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். |
|
|
|
|
சட்டீஸ்கரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் கோரிக்கை
|
|
ஜூலை 13,2009,01:16 IST
|
|
|
|
|
ராய்பூர் : சட்டீஸ்கரி மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 30 பேர் பலியானதையடுத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் தனேந்திர சாகு மற்றும் சட்டீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் அஜித் ஜோகி செய்தியாளர்களிடம் கூறுகையில் மாநிலத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. இது மாநில அரசின் தோல்வியை காட்டிகிறது. எனவே மாநில அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும், தாக்குதலில் போலீஸ் சூப்ரிடெண்ட் பலியாகையில் மாநில அரசால் பொது மக்களை எவ்வாறு பாதுகாக்க முடியுமென்று அவர்கள் கேள்வி எழுப்பினர். |
|
|
|
|
சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட் தாக்குதல் : பலி 30 ஆக உயர்வு
|
|
ஜூலை 13,2009,00:58 IST
|
|
|
|
|
ராய்பூர் : சட்டீஸ்கரின் ராஜ்நந்தகோன் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் நடத்திய இருவேறு தாக்குதல்களில் போலீஸ் சூப்ரீடெண்ட் உட்பட இறந்த போலீசாரின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. |
|
|
|
|
மார்க்சிஸ்ட் பொலிட் பிரோவிலிருந்து அச்சுதானந்தன் நீக்கம்
|
|
ஜூலை 13,2009,00:55 IST
|
|
|
|
|
புதுடில்லி: மார்க்சிஸ்ட் பொலிட் பிரோவிலிருந்து கேரள முதல்வர் அச்சுதானந்தன் நீக்கப்பட்டுள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விஜயன் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை. கேரளாவின் மாநில செயலாளராக பினரயி விஜயன் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற தேர்தல் வரும் வரை அச்சுதானந்தன் கேரள முதல்வராக நீடிப்பார் எனவும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. |
|
|
|
|
பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிரான்ஸ் பயணம்
|
|
ஜூலை 13,2009,00:54 IST
|
|
|
|
|
புதுடில்லி : பிரதமர் மன்மோகன் சிங் இன்று பிரான்ஸ் செல்கிறார். அங்கு நடக்கும் பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்ட த்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். பிரான்ஸ் பயணத்தை முடித்து கொண்டு மன்மோகன் சிங் 15ம் தேதி எகிப்து செல்கிறார். எகிப்தில் நடக்கும் அணிசேரா நாடுகளின் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர், அங்கு பாகிஸ்தான் பிரதமர் யூசூப் ரசா கிலானியையும் சந்தித்து பேச உள்ளார். |
|
|
|
|
குற்றாலத்தில் இருந்து பைக்கில் வந்த மூவர் விபத்தில் பலி
|
|
ஜூலை 13,2009,00:53 IST
|
|
|
|
திருநெல்வேலி : குற்றாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திரும்பிய மூன்று பேர் வெவ்வேறு விபத்துகளில் பலியானார்கள். நெல்லை மாவட்டம் புளியங்குடியை அடுத்துள்ள டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர்கள் செல்வம்(18), கருப்பசாமி(18). உறவினர்களான இருவரும் கட்டட வேலை செய்பவர்கள். நேற்று மாலையில் குற்றாலம் சென்றுவிட்டு புளியங்குடிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தனர். கடையநல்லூர், சிங்கிலிபட்டி அருகே வரும்போது பின்னால் வந்த வேன் இவர்களது பைக் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவருமே ஹெல்மெட் அணியவில்லை.
இன்னொரு விபத்து :தூத்துக்குடியை சேர்ந்த லிங்ககுமார்(22), மகராஜன்(27) ஆகியோர் நேற்று குற்றாலம் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் நெல்லை திரும்பிக்கொண்டிருந்தனர். ஆலங்குளம் மாறாந்தை அருகே வந்தபோது ரோட்டோர மரத்தில் பைக் மோதியது. இதில் லிங்ககுமார் பலத்த காயமுற்று பரிதாபமாக இறந்தார். மகராஜன் பலத்த காயமுற்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. விபத்து குறித்து ஆலங்குளம் போலீசார் விசாரித்தனர். |
|
|
|
|
ஆஷஸ் தொடர் : முதல் டெஸ்ட் டிரா
|
|
ஜூலை 13,2009,00:30 IST
|
|
|
|
|
கார்டிப் : கார்டிப்பில் நடந்த ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 435 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்களுக்கு 674 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 239 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி 9 விக்கெட்களுக்கு 252 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிவதாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். |
|
|
|
|
பட்டாசு ஆலை விபத்து: காயமடைந்த இரண்டு வயது சிறுவன் பலி
|
|
ஜூலை 13,2009,00:29 IST
|
|
|
|
உசிலம்பட்டி :கருமாத்தூர் அருகே வடக்கம்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 18 பேர் பலியாகினர். 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தனர். பட்டாசு ஆலை உரிமையாளர் துரைப்பாண்டியின் தம்பி வெள்ளையப்பன் என்பவரின் இரண்டு வயது மகன் தருணுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தருண் சிகிச்சை பலனின்றி இறந்தான். இதைத் தொடர்ந்து பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
பாதிப்படைந்தவர்களுக்கு நிதியுதவி:பட்டாசு ஆலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை சதர்ன் ரெயில்வே சுமை ஏற்றுவோர் மற்றும் இறக்குவோர் தொழிலாளர் தொழில் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தினர் 25 ஆயிரத்து 500 ரூபாய் நிதியுதவி வழங்கினர். ஊராட்சித் தலைவர் ஜெயராமன் முன்னிலையில் பாதிப்படைந்தவர்களுக்கு இந்த பணத்தை வழங்கினர். |
|
|
|
|
|
|
ஸ்ரீதரன் ராஜினாமாவை ஏற்க மறுப்பு
|
|
ஜூலை 12,2009,23:22 IST
|
|
|
|
|
புதுடில்லி: டில்லியில் மெட்ரோ ரயிலுக்காக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில், இன்ஜினியர் ஒருவர் உட்பட ஆறு பேர் பலியாயினர். இந்தச் சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, டில்லி மெட்ரோ ரயில் கழகத்தின் தலைவர் ஸ்ரீதரன் தன் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், இவரது ராஜினாமாவை ஏற்க டில்லி மாநில அரசு மறுத்து விட்டது. |
|
|
|
|
பழநி ரோப் கார் அருகே தீ விபத்து
|
|
ஜூலை 12,2009,23:03 IST
|
|
|
|
|
பழநி : பழநி மலை அடிவாரத்தில் தீ விபத்து ஏற்பட்டது. பழநி மலை அடிவாரத்தில் மலையைச் சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கிழக்கு கிரிவீதி ரோட்டில் சென்ற யாரோ ஒருவர், தீ அணைக்கப்படாத பொருளை சுற்றுச்சுவரின் வெளியே இருந்து வீசியதால், ரோப் கார் கீழ்தளத்தில் இருந்து 300 மீட்டர் தூரத்தில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் தீப்பிடித்தது. கீழே கிடந்த இலைச் சருகுகளில் பரவலாக தீப்பிடித்து புகை கிளம்பியது. தகவலறிந்த பழநி தீயணைப்பு அலுவலர் கோதண்டராமன் தலைமையில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைத்தனர். |
|
|
|
|
உலக நன்மை வேண்டி மிளகாய் சாந்து அபிஷேகம்
|
|
ஜூலை 12,2009,22:26 IST
|
|
|
|
|
புதுச்சேரி :இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவில் தீ மிதி திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு மிளகாய் சாந்து அபிஷேக ஆராதனை நடந்தது.விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த இடையன்சாவடி வர்ணமுத்து மாரியம்மன் கோவிலில், முக்கிய விழாவான மிளகாய் சாந்து அபிஷேகம் உட்பட 108 அபிஷேகம் நடந்தது.மாலை 4.30 மணிக்கு மூன்று பக்தர்களுக்கு மாலை சூடி தீபாராதனை செய்து, கையில் சூலாயுதங்களுடன் கோவில் வளாகத்தில் அமர வைத்து, பால், தயிர், மஞ்சள், பாசிப்பயிறு, மிளகு, சந்தனம், மல்லி உள்ளிட்ட அபிஷேகங்களுக்குப் பிறகு மிளகாய் சாந்து அபிஷேகமும், ஆராதனையும் செய்தனர். அபிஷேகத்தின் போது, மூன்று பக்தர்களும் மிளகாய் சாந்து வாங்கி சாப்பிட்டனர்.உலக நன்மை வேண்டி சிறப்பு மிளகாய் சாந்து அபிஷேகம் செய்ததாக பக்தர்கள் கூறினர். |
|
|
|
|
ஒரே நாளில் 154 கிளைகள் திறந்து வைத்தார் பிரணாப்
|
|
ஜூலை 12,2009,21:03 IST
|
|
|
|
|
முர்ஷிதாபாத் : நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 154 கிளைகளை ஒரே நேரத்தில் டெலிகான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். நாடு முழுவதும் அதிக கிளைகளை திறக்க வேண்டுமென ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா திட்டமிட்டது. இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகமான கிளைகள் அமைக்கப்பட்டன.மேற்கு வங்கம், முர்ஷிதாபாத்தில் நடந்த விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடு முழுவதும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் 154 கிளைகளை ஒரே நேரத்தில் டெலிகான்பரன்சிங் நிகழ்ச்சி மூலமாக செயற்கைக் கோள் உதவியுடன் திறந்து வைத்தார். இதேபோல் 2,151 ஏ.டி.எம்., மையங்களும் நேற்று திறந்து வைக்கப்பட்டன. திறக்கப்பட்ட புதிய கிளைகளையும் சேர்த்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் மொத்த கிளைகள் 11 ஆயிரத்து 849 ஆக அதிகரித்துள்ளது.இந்த விழாவில் சிறுபான்மை நல அமைச்சர் சல்மான் குர்ஷித், எஸ்.பி.ஐ., தலைவர் ஒ.பி.பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். |
|
|
|
|
ஒரே மாதிரியான சுங்க வரி : லாரி உரிமையாளர்கள் கோரிக்கை
|
|
ஜூலை 12,2009,20:20 IST
|
|
|
|
|
சேலம் : தேசிய நெடுஞ்சாலைகளில் ஒரே மாதிரியான சுங்க வரி வசூலிக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதன் மீது 21 நாட்களுக்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , தவறினால் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்றும சேலத்தில் நடந்த தென் மாநில லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. |
|
|
|
|
சுனாமி வந்தால் எத்தனை வீடுகள் பாதிக்கும்* கணக்கெடுக்க அரசு உத்தரவு
|
|
ஜூலை 12,2009,19:45 IST
|
|
|
|
|
ராமநாதபுரம் :சுனாமி பேரலை ஏற்படும் பட்சத்தில் அதனால் பாதிக்கப்படும் வீடுகள் குறித்து கணக்கெடுக்குமாறு கடலோர மாவட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த சுனாமி பேரலையால் பாக்ஜலசந்தியை ஒட்டிய தமிழக கடற்கரை பகுதிகள் பாதிக்கப்பட்டன. சுனாமி பேரலையால் நிவாரண பணியை மேற்கொள்ள அரசிற்கு நெருக்கடிகள் ஏற்பட்டது. வருங்காலத்தில் இதுபோல நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு கடலோர கிராமங்களில் கடல் அலை ஏற்றத்தில் இருந்து 200-1000 மீட்டர் வரை உள்ள இடங்களில் மட்டும் சுனாமியால் பாதிப்பு ஏற்படக்கூடிய வீடுகள் குறித்தும் குடியிருப்பவர்கள் குறித்தும் கணக்கெடுக்க கடலோர மாவட்டங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.குடியிருப்பவர்கள் தகுந்த ஆவணங்களை கொடுத்து பயன்பெறுமாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் ஒட்டிய திருவாடானை, ராமேஸ்வரம், கடலாடி, ராமநாதபுரம் தாலுகாக்களில் உள்ள மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. |
|
|
|
|
இலங்கையின் ராணுவ தளபதிக்கு பதவி உயர்வு
|
|
ஜூலை 12,2009,19:18 IST
|
|
|
|
|
கொழும்பு : இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இலங்கை ராணுவ தலைமை தளபதியாக அவர் பதவி உயர்த்தப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான சண்டையில் ராணுவத்துக்கு வெற்றி தேடித் தந்ததை அடுத்து, அவரை தலைமை தளபதியாக அதிபர் ராஜபக்ஷே நியமித்துள்ளார். |
|
|
|
|
கல்குவாரி வெடி விபத்தில் தொழிலாளி உடல் சிதறி பலி *திண்டுக்கல் அருகே பரிதாபம்
|
|
ஜூலை 12,2009,18:47 IST
|
|
|
|
|
திண்டுக்கல் : கல்குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் பலியானார். திண்டுக்கல் அருகேயுள்ள கள்ளிப்பட்டியில் கல்குவாரியை சுந்தரவடிவேல் என்பவர் குத்தகைக்கு எடுத்துள்ளார்.இந்த குவாரி யில் வேலை பார்க்கும் தோட்டனூத்தைச் சேர்ந்த கணேசன்(38),மனைவி வாணியுடன் அருகில் குடிசை அமைத்து தங்கியிருந்தார்.மனைவி வெளியூர் சென்று விட்டார். கணேசன் பாறைகளை உடைக்க வெடிமருந்தை வாங்கி குடிசையில் வைத்துள்ளார். குடிசையில் வைத்திருந்த வெடி மருந்து திடீரென வெடித்தது.இதில் கணேசன் உடல் சிதறி இறந்தார்.சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். |
|
|
|
|
இலங்கை பாகிஸ்தான் 2வது கிரிக்கெட் டெஸ்ட் : இலங்கை 164/3
|
|
ஜூலை 12,2009,18:43 IST
|
|
|
|
|
கொழும்பு : கொழும்புவில் நடக்கும் இலங்கை பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது. சங்ககாரா 81 ரன்களுடனும், சமரவீரா 13 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர் .முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. பாகிஸ்தான் அணியின் சோயிப் மாலிக் அதிக பட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இலங்கையின் குலசேகரா 4, துஷ்ஹாரா 2, மெண்டிஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். |
|
|
|
|
துரைமுருகனிடம் இருந்து பொதுப்பணித்துறை மாற்றம்
|
|
ஜூலை 12,2009,15:30 IST
|
|
|
|
|
சென்னை: அமைச்சர் துரைமுருகனிடம் இருந்து பொதுப் பணித்துறை முதல்வர் பொறுப்பின் கீழ் மாற்றப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சராக தொடர்ந்து துரைமுருகன் நீடிப்பார். முதல்வரின் கருணாநிதியின் ஆலோசனையை ஏற்று தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். |
|
|
|
|
|
|
டில்லியில் பாலம் இடிந்தது தொடர்பாக விசாரணை நடத்த 5 நபர் குழு
|
|
ஜூலை 12,2009,15:03 IST
|
|
|
|
|
புதுடில்லி: டில்லியில் மெட்ரோ பாலம் இடிந்து 6 பேர் பலியானதுடன், 20 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த 5 நபர் குழு ஒன்றை அமைக்க டில்லி முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்துக்கு காரணமான 67 வது தூணை சிதைவடைய செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். பாலத்தை சரியாக கட்டாத கான்ட்ராக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முதல்வர் ஷீலா தீட்சித் உத்தரவிட்டுள்ளார். |
|
|
|
|
குஜராத்தில் 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
|
|
ஜூலை 12,2009,14:44 IST
|
|
|
|
|
ஆமதாபாத் : குஜராத்தில் 2 பெண் குழந்தைகளுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் கல்வி கலாச்சார நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்று வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவருக்கும் 16 முதல் 20 வயதிற்கு உட்பட்டவர்கள் ஆவர். |
|
|
|
|
முதல்வர் பிரிவிற்கு மிரட்டல் இ-மெயில் அனுப்பியவர் கைது
|
|
ஜூலை 12,2009,13:55 IST
|
|
|
|
|
சென்னை : சென்னையில் முதல்வர் பிரிவு, செயலாளர் மற்றும் முக்கிய போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜூலை 16ம் தேதியன்று வெடிகுண்டு வைத்து சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள முக்கிய கட்டிடங்களை தகர்க்கப் போவதாக இ-மெயில் அனுப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த இ-மெயில் ஜெயசீலன் என்பவரது பெயரில், சென்னையில் உள்ள பிரவுசிங் சென்டரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இ-மெயிலில் தரப்பட்டிருந்த தொலைப்பேசி எண் யாருடையது எனவும் விசாரணை நடத்தப்பட்டது. இ-மெயில் அனுப்பியவரை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். |
|
|
|
|
சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பிறகு சேது சமுத்திர திட்ட பணிகள் : வாசன்
|
|
ஜூலை 12,2009,13:23 IST
|
|
|
|
|
சேலம் : சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு பிறகு சேது சமுத்திரத் திட்ட பணிகள் நடைபெறும் என மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வாசன் செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது : சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவிற்கு பிறகு சேது சமுத்திரத் திட்டப் பணிகள் நடைபெறும்; மத்திய, மாநில அரசுகளின் முழு முயற்சியுடன் சேது சமுத்திரத் திட்டம் வெற்றி பெறும்; துறைமுகங்களில் தேவைக்கேற்ப விரிவாக்கப் பணிகள் நடத்தப்படுவதுடன் பெரிய கப்பல்கள் வந்து செல்வதற்கு வசதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்; சோமாலியா கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டிருக்கும் இந்திய சரக்குக் கப்பலை மீட்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். |
|
|
|
அனைத்து இந்திய தமிழ்ச் சங்கங்களுக்கும் அன்பான வேண்டுகோள்
இந்தியாவில் உள்ள அனைத்து தமிழ்ச் சங்கங்கள் தொடர்பாகவும் தினமலர் இணைய தளத்தில் செய்திகள் வெளியிட இருக்கிறோம். எனவே டில்லி, மும்பை, புனே, நாக்பூர், கோல்கட்டா, திருவனந்தபுரம், பெங்களூர், ஐதராபாத், புவனேஸ்வர், போபால், இந்துார், ராஞ்சி, ராய்ப்பூர், ஜெய்ப்பூர், ஆமதாபாத், பரோடா, சூரத், சண்டிகர், லக்னோ, டேராடூன், சிம்லா, கவுகாத்தி, இம்பால், காங்க்டாக், ஷில்லாங், இடாநகர், அய்ஜால், அகர்தாலா, கொகிமா மற்றும் இதர முக்கிய நகரங்களில் அமைந்துள்ள தமிழ்ச்சங்கங்கள் தங்கள் செய்திகளை எங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம். சங்கங்களின் நிர்வாகிகள் விவரம், சங்க நடவடிக்கைகள், உங்கள் பகுதிகளில் உள்ள தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் போன்ற செய்திகளை படத்துடன் அனுப்பி வையுங்கள். தமிழர்களுக்கு இடையேயான ஒரு இணைப்பு பாலமாக விளங்க தினமலர் இணைய தளம் விரும்புகிறது. அதற்கு உங்களுடைய முழு ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.உங்கள் செய்திகள் மற்றும் படங்களை (
ost@dinamalar.in ) என்ற முகவரிக்கு இமெயில் செய்யவும்.
| |
வெளிநாடு வாழ் தமிழர்கள் பார்வைக்கு
வெளிநாடுவாழ் தமிழர்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை தினமலர் வெப்சைட் உடனுக்குடன் வெளியிட்டு வருவதை அறிவீர்கள். உங்கள் பகுதியில் நடைபெறும் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் தொடர்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளை உரிய படங்களுடன் அனுப்பி வைத்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம்.
அதேபோல் வெளிநாடுகளில் நீங்கள் பணி புரியும் இடங்களில் உள்ள நிறை, குறைகளையும் எழுதி அனுப்புங்கள். தமிழ்நாட்டிலிருந்து வேலை தேடி வருபவர்களுக்கு, உங்கள் அனுபவத்திலிருந்து கூற விரும்பும் யோசனைகளையும் எழுதி அனுப்புங்கள். அத்தகைய தகவல்கள் புதிதாக வருபவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும்.
செய்திகளை ஆங்கிலத்திலேயே இ- மெயிலில் அனுப்பலாம். தமிழில் அனுப்புவதென்றால் பிடிஎப் பார்மேட்டில் அனுப்பி வைக்கவும். படங்களை ஜெபெக் பார்மேட்டில் மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம்.
இதற்கான இ-மெயில் முகவரி :
nrireaders@dinamalar.in
| |
வெளிநாடு வாழ் தமிழ்ச் சங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள்
வெளிநாடுவாழ் தமிழ்ச்சங்கத்தினர் நடத்தும் நிகழ்ச்சிகளை தினமலர் வெப்சைட் உடனுக்குடன் வெளியிட்டு வருவதை அறிவீர்கள். உங்கள் சங்க நிர்வாகிகள், நீங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் ஆகியவை குறித்து எங்களுக்கு உரிய படங்களுடன் அனுப்பி வைத்தால் அதை வெளியிடத் தயாராக இருக்கிறோம். செய்திகளை ஆங்கிலத்திலேயே இ- மெயிலில் அனுப்பலாம். தமிழில் அனுப்புவதென்றால் பிடிஎப் பார்மேட்டில் அனுப்பி வைக்கவும். படங்களை ஜெபெக் பார்மேட்டில் மெயில் மூலம் அனுப்பி வைக்கலாம். இதற்கான இ-மெயில் முகவரி : nrireaders@dinamalar.in
|
|
|
|
|
| |
முதல் பக்கம்
|
|
| |
|