தினமலர் முதல் பக்கம் »மதுரை  மாவட்டத்தை மீட்போம்

சாக்கடையால் நாறுது சாப்டூர்!

பேரையூர், சேடபட்டி ஒன்றியத்துக்குட்ட சாப்டூரில் 7 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக சுகாதார வளாகம் பராமரிக்கப்படாமல் உள்ளதால், ரோட்டோரம், வயல்வெளிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்
படுத்துகின்றனர்.
இங்கு துப்புரவுப்பணி பல மாதங்களாக நடக்காததால் தெருக்களின்
நுழைவுப்பகுதியில் குப்பை குவிந்துள்ளது. கழிவுநீர் வாய்க்கால் பல ஆண்டுகளாக துார்வாராததால் நீர்தேங்கியுள்ளது.
குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து தொற்று நோய் பரவுகிறது. புதிய சுகாதார வளாகம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் திறப்பு விழா காணாமல் காட்சிப்பொருளாக உள்ளது. சேடபட்டி
ஒன்றியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைப்புகள் :


» மதுரை மாவட்டம் முதல் பக்கம்
» தினமலர் முதல் பக்கம்
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018