தினமலர்

01. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்!

இந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நேரத்தில் நம்நாட்டின் ஒருசில பெருமைகளை அறிந்து கொள்வோம்.

* உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், பரப்பளவில் ஏழாவது பெரிய நாடாகவும் உள்ள இந்தியா, உலகின் மிகப்பழமையான நாகரிகத்தை கொண்டுள்ளது.

* எண்கணிதம் இந்தியாவில் தான் தோன்றியது. ஆர்யபட்டா ஜீரோவை கண்டுபிடித்தார். தசம முறை இந்தியர்களின் கண்டுபிடிப்பே. அல்ஜிப்ரா, கால்குலஸ், டிரிக்னாமெட்ரி போன்ற நவீன கணித முறைகளும் இந்தியாவில் தான் தோன்றின.

* நீர்வழிப்பயணங்கள் குறித்து இந்தியர்கள் 6 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெரிந்து வைத்திருந்தனர்.

* "பை' என்ற கணித அமைப்பை இந்திய கணித நிபுணர் புத்தாயனா 6ம் நூற்றாண்டில் கண்டறிந்தார். பிதாகரஸ் தேற்றத்தையும் அவரே முதலில் உருவாக்கினார்.

* உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்ட அமைப்பு இந்திய ரயில்வே. ஏறத்தாழ 10 லட்சம் பேருக்கும் அதிகமாக இதில் பணியாற்றுகின்றனர். உலகிலேயே இந்தியாவில்தான் தபால் நிலையங்களின் எண்ணிக்கை அதிகம்.

* ஆயுர்வேதம் உலகிலேயே மிகப்பழமையான மருத்துவமுறை. இது இந்தியாவில் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியது. முதன்முதலில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதர்.

* பிரிட்டன் படையெடுப்புக்கு முன்னர் உலகிலேயே மிகவும் பணக்கார நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தது. இந்தியாவுக்கு வழிதேடி கிளம்பிய கொலம்பஸ் தற்செயலாக கண்டுபிடித்தது தான் அமெரிக்கா.

* உலகிலேயே மிகப்பழமையான பல்கலைக்கழகம் கி.மு., 700ல் தட்சசீலத்தில் அமைந்தது. 4ம் நூற்றாண்டில் நாலந்தா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

* சூரியனை சுற்றிவர பூமி எடுத்துக்கொள்ளும் நேரத்தை முதன்முதலில் அறிந்து கூறியவர் பாஸ்கராச்சாரியா.

* வைரங்களின் சிறப்பை அறிந்து அதை முதலில் பயன்படுத்த தொடங்கியவர்கள் இந்தியர்களே. ஏறத்தாழ 3 ஆயிரம் ஆண்டுக்கும் அதிகமாகவே இந்தியாவில் வைரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

* அறிவுத்திறனை சோதிக்கும் செஸ் போட்டி இந்தியாவில் தான் தோன்றியது.

இன்று பொருளாதார ரீதியில் உலகில் மிகவேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் காரணமாக கடந்த சில நூற்றாண்டுகளில் இந்தியா உலக அரங்கில் தனக்கு உரிய இடத்தை பெற இயலவில்லை. எனினும் இழந்த பெருமையை நம்நாடு மீட்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.

top

முதல் பக்கம்
வாசகர் கடிதம் International Edition Font Help ? Advertisment Tariff

Dinamalar Publications
Copyright 2008 www.dinamalar.com. All rights reserved. Designed and Hosted by Web Division,Dinamalar  
coordinator@dinamalar.in and webmaster@dinamalar.in