யார் இவர்கள்...!

 

ஜூன் 12. மண்டேலா (1918-):

 

தென் ஆப்ரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடிய நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். இந்திய விடுதலைப்போராட்ட தலைவர்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்திருக்கும் இவர் காந்தியின் அறவழிப் பாதையை பின்பற்றி போராடினார். இவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்க மக்கள் பெரிதும் மதிக்கும் தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.