ஜூன் 24. கண்ணதாசன் (1927-1981):
சினிமா பாடல்கள் வழியாக அனைவரது உள்ளத்தையும் கொள்ளை கொண்ட இவர் கவியரசர் என அனைவராலும் போற்றப்பட்டார். முதலில் பகுத்தறிவு கருத்துக்களில் ஆர்வம் காட்டினாலும் பின்பு ஆன்மிகத்தில் முழுவதும் ஒன்றி பாடல்கள், கட்டுரைகள் எழுதினார். "கலங்காதே மனமே' என்ற பாடலுடன் சினிமா பாடலாசிரியராக பயணத்தை தொடங்கிய இவர் "கண்ணே கலைமானே' பாடலுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டார்.