யார் இவர்கள்...!

 21. ராஜிவ் (1944-1991): இந்தியாவின் இளம் பிரதமர் என்ற பெருமைக்குரியவர் ராஜிவ். தனது சகோதரர் சஞ்சய், தாய் இந்திராவின் மறைவுக்கு பிறகு அரசியல் ஆர்வம் இல்லாத ராஜிவ் அரசியலில் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அடுத்து வந்த 1984 தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. பஞ்சாயத்து ராஜ் திட்டங்களின் மூலம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கலாம் என நம்பினார். 1989 தேர்தலில் இவரது கட்சி தோல்வியை சந்தித்தது. 1991 தேர்தல் பிரசாரத்துக்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த இவரை விடுதலைப்புலிகள், மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்தனர்.