யார் இவர்கள்...!

 

 

ராஷ் பிகாரி போஸ் (1886-1945): இந்தியாவின் புரட்சியாளர்களில் முக்கியமானவர். இந்தியர்களின் மீது அடக்குமுறையை கையாண்ட ஹார்டிங் பிரபு மீது 1912 ல் வெடிகுண்டு வீசிய வழக்கில், நால்வரை பிரிட்டிஷ் அரசு தூக்கிலிட்டது. இதை தொடர்ந்து ஜப்பானுக்கு தப்பிச்சென்றார் ராஷ் பிகாரி. இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானிடம் சரணடைந்த இந்திய வீரர்களை கொண்டு அங்கு விடுதலைப் படையினை அமைத்தார். பின்னர் சுபாஷ் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் உருவாக இது முக்கிய காரணமாக இருந்தது.