யார் இவர்கள்...!

 

நேரு (1889-1964): நவீன இந்தியாவை நிர்மாணித்தவர் என புகழப்படும் நேரு, இந்திய அரசின் முதல் பிரதமர் என்ற பெருமைக் குரியவர். நாட்டின் சுதந்திரத்துக்காக காந்தியடிகளுக்கு துணை நின்ற இவர் செல்வ வளமிக்க குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறையில் பல்வேறு துன்பங்களை அனுபவித்தார். விடுதலைக்கு பின் நாடு வளர்ச்சி பெறுவதற்கு வேண்டிய ஐந்தாண்டு திட்டங்களை உருவாக்கியவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. அணிசேரா கொள்கை வகுக்கப்பட காரணமாக இருந்த இவர், குழந்தைகள் மீது அளவற்ற பாசம் கொண்டிருந்தார்.