சங்கர நேத்ராலயா அகடமிபுதிய பயிற்சி துவக்கம்| Dinamalar

சங்கர நேத்ராலயா அகடமிபுதிய பயிற்சி துவக்கம்

Advertisement

சென்னை : சங்கர நேத்ராலயா அகடமி மூலம், கண் மருத்துவ சேவைக்கு ஏற்ப தனிப் பாடதிட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. லயோலா இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன், அசோசியேசன் ஆப் பிரிட்டிஷ் டிஸ்பென்சிங் ஆப்டிசியன்ஸ், கார்ல் ஜெய்ஸ் மற்றும் அல்கான் நிறுவனங்களுடன் இணைந்து கான்டாக்ட் லென்ஸ் பற்றிய சர்ட்டிபிகேட் மற்றும் பெல்லோஷிப் படிப்புகளை துவங்கியுள்ளது.இத்துடன், விஷன் தெரபி மற்றும் கான்டாக்ட் லென்ஸ் சான்றிதழ் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இப்பயிற்சியில் ஆறு வாரங்கள் ஆன்-லைன் மூலமாக பயிற்சியும், இரண்டு வாரங்கள் நேர்முக பயிற்சியும் வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு "ஒருங்கிணைப்பாளர், சங்கர நேத்ராலாயா அகடமி, 18, கல்லூரி சாலை, சென்னை.6' என்ற முகவரியிலும், தொலைபேசியில் 044-4227 1825 எண்ணிலும், மொபைல் போனில் 93821 47796 என்ற எண்ணிலும் இ.மெயிலில்   mahali@snmail.org   என்ற முகவரியில் தொடர்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement