international Tagore award planned:manmohan announced | தாகூர் பெயரில் சர்வதேச விருது:பிரதமர் மன்மோகன் அறிவிப்பு | Dinamalar

தாகூர் பெயரில் சர்வதேச விருது:பிரதமர் மன்மோகன் அறிவிப்பு

Added : மே 08, 2011
தாகூர் பெயரில் சர்வதேச விருது:பிரதமர் மன்மோகன் அறிவிப்பு

புதுடில்லி:"நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூர் பெயரில் சர்வதேச விருது ஏற்படுத்தப்படும்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.தேசிய கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் 150வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் டில்லியில் நேற்று துவங்கி வைத்தார்.அப்போது அவர் பேசியதாவது:நோபல் பரிசு பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பெயரில், சர்வதேச அளவிலான விருது வழங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. உலகளவில் சகோதரத்துவம் தழைக்க பாடுபடுபவர்களுக்கு இந்த சர்வதேச விருது வழங்கப்பட உள்ளது. முதல் விருது, 150ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் இறுதியில் வழங்கப்படும்.
விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுப்பதற்காக, என் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்படும்.பன்முகத்திறமை வாய்ந்தவர் கவிஞர் தாகூர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, தாகூரின் படைப்புக்களை அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக கொண்டு சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவரது படைப்புக்கள் மத்திய கலாசார துறை சார்பில் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படும். தாகூரின் ஓவியங்களும் டிஜிட்டல் மயமாக்கப்படும்.இவ்வாறு மன்மோகன் சிங் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X