நெய்வேலியில் 10 நாள் புத்தகக் கண்காட்சி ஐகோர்ட் நீதிபதி நாளை துவக்கி வைக்கிறார் | நெய்வேலியில் 10 நாள் புத்தகக் கண்காட்சி ஐகோர்ட் நீதிபதி நாளை துவக்கி வைக்கிறார்| Dinamalar

தமிழ்நாடு

நெய்வேலியில் 10 நாள் புத்தகக் கண்காட்சி ஐகோர்ட் நீதிபதி நாளை துவக்கி வைக்கிறார்

Added : ஜூன் 30, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நெய்வேலி : நெய்வேலியில், 10 நாள் புத்தகக் கண்காட்சி, நாளை மாலை 5 மணிக்கு, பிளாக் 10, லிக்னைட் அரங்கத்தில் துவங்குகிறது. என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, தலைமை தாங்குகிறார். சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் துவக்கி வைக்கிறார். 10 நாட்கள் நடக்க உள்ள புத்தகக் கண்காட்சியில், ஒவ்வொரு நாளும் என்.எல்.சி., சார்பில், ஒரு எழுத்தாளர், பதிப்பகத்தார் கவுரவிக்கப்படுவர். தினமும் புதிய நூல் வெளியிடப்படும். நெய்வேலி படைப்பாளிகளின் நல்லதோர் வீணை, அகில், தெரிந்தும் தெரியாமலும் உள்ளிட்ட, 10 குறும் படங்கள் திரையிடப்பட உள்ளன. இலக்கிய உரைகள், மாயாஜாலம், மெல்லிசை, பட்டிமன்றம், நகைச்சுவை நாடகங்கள், பரதநாட்டியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., வினித்தேவ் வான்கடே, கலெக்டர் அமுதவல்லி, எஸ்.பி., பகலவன், சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் ஜவகர் மன்னன், அண்ணாமலைப் பல்கலைக் கழக துணைவேந்தர் ராமநாதன், தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன், திரைப்பட இயக்குனர் பிரபு சாலமன், என்.எல்.சி., விஜிலன்ஸ் துறை ஏ.டி.ஜி.பி., பாலசுப்ரமணியன், என்.எல்.சி., இயக்குனர்கள் சரத்குமார் ஆச்சார்யா, கந்தசாமி, சேகர், மகிழ்செல்வன், செயல் இயக்குனர் சிவஞானம் உள்ளிட்ட உயர்அதிகாரிகள், ஒவ்வொரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். என்.எல்.சி., சார்பில் சிறப்பு பஸ் வசதிகளும், இ-மெயில் மற்றும் தொலை தொடர்புக்காக, பி.எஸ்.என்.எல்., சார்பில், சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X