Tuticorin District News | விமான நிலையத்திற்கு வீரன்சுந்தரலிங்கம் பெயர் சூட்ட மக்கள் முன்னேற்ற கழககூட்டத்தில் தீர்மானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விமான நிலையத்திற்கு வீரன்சுந்தரலிங்கம் பெயர் சூட்ட மக்கள் முன்னேற்ற கழககூட்டத்தில் தீர்மானம்

Added : ஆக 02, 2011 | கருத்துகள் (2)
Advertisement

கோவில்பட்டி : தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வீரன்சுந்தரலிங்கம் பெயரை வைக்க வலியுறுத்தி கோவில்பட்டியில் நடந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தமிழக மக்கள் முன்னேற்ற கழக தூத்துக்குடி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் கோவில்பட்டியில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்பிரின்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வாசன், அகில இந்திய தேவேந்திரகுல வேளாளர் முன்னேற்ற சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதிராஜசேகரன், மாவட்ட மகளிரணி தலைவர் ரஞ்சிதமணி, செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர் அய்யாச்சாமி வரவேற்றார். தொடர்ந்து நடந்த கூட்டத்தில் தமிழகமக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். அப்போது கழகத்தின் சார்பில் மாவட்டம் தோறும் கூட்டங்கள் நடந்து வருவதாகவும், அனைத்து கூட்டங்களிலும் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையை வலியுறுத்தி வருவதாகவும், வலுவான உறுப்பினர் சேர்க்கை மூலம் பிற கட்சிகளை ஆச்சரியப்படுத்த வேண்டும் என்றும், இதற்கு மாவட்ட ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் முழுவீச்சில் செயல்பட வேண்டுமென பேசினார். மேலும் மாநில அமைப்பு செயலாளர் நெல்லையப்பன் பேசினார். இதனடிப்படையில் ஆதிதிராவிடர் ஆணையை ரத்து செய்து தேவேந்திரகுல வேளாளர்கள் என தனியினமாக அறிவிக்கவும், தாமிரபரணியில் உயிர்நீத்த 17 தியாகிகளுக்கு அவ்விடத்தில் நினைவுத்தூண் எழுப்பவும், ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் சமச்சீர் கல்வியை அரசியல் வெறுப்பின்றி உச்சநீதிமன்ற ஆணைப்படி அமல்படுத்தவும், பட்டியல் இனமக்கள் பயன்பெறும் வகையில் நிரப்பப்படாத பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பவும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படாத நிலுவைத் தொகையை உடனே வழங்கவும், தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வீரன் சுந்தரலிங்கம் பெயரை வைக்கவும் வலியுறுத்தி ஆறு அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் கடந்த மாதம் ரயில் விபத்தில் இறந்த ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலாளர் தனத்தின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவில்பட்டி நகர செயலாளர் ஜோதிபாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X