அரசலாற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி : துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு| Dinamalar

தமிழ்நாடு

அரசலாற்றில் புதிய நீரொழுங்கி கட்டும் பணி : துணை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

Added : ஜூலை 04, 2010
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கும்பகோணம்: கும்பகோணம் அருகே சாக்கோட்டை அரசலாற்றில் 1.76 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படும் புதிய நீரொழுங்கியை துணை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1.76 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. நேற்று கும்பகோணம் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் சாக்கோட்டை அரசலாற்றுக்கு சென்று பணியை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது துணை முதல்வர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது:  தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவின் பேரில் டெல்டா மாவட்டங்களில் உள்ள பாசன ஆறுகள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 2 கோடி ரூபாய் மதிப்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கும்பகோணம் பகுதி சாக்கோட்டையில் அரசலாறு, நாட்டாறு தலைப்பில் நீரொழுங்கி 1903-ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது 1.76 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 40 ஆயிரத்து 198 ஏக்கர் பாசன நிலங்கள் சீரான பாசன வசதி பெறமுடியும். இப்பணியுடன் மூன்று மதகுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.

நீரொழுங்கி புதுப்பிக்கும் பணி ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விவசாயிகளுக்கான பாசன மேம்பாட்டு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி.மணி, மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம், பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன், மாவட்ட கலெக்டர் சண்முகம், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் சதாசிவம், திருவிடைமருதூர் ஒன்றியக்குழு தலைவர் இராமலிங்கம், கும்பகோணம் நகர்மன்ற தலைவர் தமிழழகன், சாக்கோட்டை அன்பழகன், கல்யாணசுந்தரம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ் உடன் இருந்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X