தோஷம் கழிக்க பெண்ணிடம் அத்துமீறல்: சில்மிஷ அ.தி.மு.க., பிரமுகர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தோஷம் கழிக்க பெண்ணிடம் அத்துமீறல்: சில்மிஷ அ.தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஜூன் 17, 2014 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
தோஷம் கழிக்க பெண்ணிடம் அத்துமீறல்: சில்மிஷ அ.தி.மு.க., பிரமுகர் கைது

தேவிபட்டினம்: தோஷம் கழிக்க கடற்கரைக்கு வந்த பெண்ணிடம், பாலியல் ரீதியாக அத்துமீறி அடாவடியில் ஈடுபட்டபோது, தட்டிக் கேட்டவரை தாக்கியதாக, அ.தி.மு.க., பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் வடக்குத்தெருவை சேர்ந்தவர், கணேசமூர்த்தி, 34; அ.தி.மு.க., ஜெ., பேரவை நகர செயலர். தேவிபட்டினம் பூசாரிகள் சங்க உறுப்பினராகவும் உள்ளார். நவபாஷன கடற்கரைக்கு, தோஷம் கழிக்க வரும் பக்தர்களிடம், கட்டணம் வசூலிப்பதில் ஈடுபட்டிருந்தார். இவரது உறவினர், கட்டணம் வசூலிக்க டெண்டர் எடுத்துள்ளார். கடந்த, 14ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, நவபாஷன தலத்திற்கு, திருப்பத்தூரில் இருந்து ஒரு பெண், குழந்தைகளுடன் தோஷ பரிகாரம் செய்ய வந்திருந்தார். தோஷம் கழிப்பதாக அவரிடம் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கணேசமூர்த்தி மீது புகார் கூறப்பட்டது. இதுகுறித்து, யாத்ரீக பணியாளர் கற்பூரசுந்தரத்திடம், பெண் முறையிட்டார். அவர், கணேசமூர்த்தியை கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கணேசமூர்த்தி, நேற்று முன்தினம் கற்பூரசுந்தரத்தை தாக்கினார். இதுகுறித்து, கற்பூரசுந்தரம் புகார் கொடுத்தார். தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து, கணேசமூர்த்தியை கைது செய்துள்ளனர். பரிகார பூஜைகள் செய்யவும், தோஷம் கழிக்கவும், வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள், தேவிபட்டினம் கடற்கரைக்கு தினமும் வருகின்றனர். அவர்களிடம், புரோக்கர்களே பரிகாரம் செய்வதாக ஏமாற்றி, அடாவடி வசூலில் ஈடுபடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரியுள்ளனர். பரிகார பூஜைகளுக்கு கட்டண நிர்ணயம், குறிப்பிட்ட காலநிர்ணயம், பூஜை செய்வோருக்கு அடையாள அட்டை போன்றவற்றை வழங்க, அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sudheer - Padmanabhapuram / K.K.Dt /,இந்தியா
18-ஜூன்-201405:51:18 IST Report Abuse
Sudheer அந்த நாய்களை அங்கிருந்து விரட்டுங்கள். மனிதர்களை ஏமாற்றும் காரியத்திற்கு மனிதர்களிடமே கட்டணம் வசூல். இந்த நாடு என்று தான் வல்லரசு ஆகுமோ?
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
18-ஜூன்-201405:31:58 IST Report Abuse
Ray வேறு எந்த அண்டை மாநிலத்திலும் இந்த மாதிரியான மூடத்தனம் நடக்க முடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை