முப்பது ஆண்டுக்கு பின்பு குதூகலம்| Dinamalar

முப்பது ஆண்டுக்கு பின்பு குதூகலம்

Added : ஜூன் 21, 2014
Advertisement

ஒவ்வொருடைய பள்ளி வாழ்க்கையும் ஒரு "ஆட்டோகிராப்' தான். பக்கங்களை புரட்டுவது போல், நினைவுகளை அசை போடுவதற்காக 30 ஆண்டுகளுக்கு முன் பள்ளி வாழ்க்கையை நிறைவு செய்த மாணவிகள் ஒன்று சேர்ந்த நிகழ்வு சொக்கிகுளத்தில் நடந்தது.
1976 - 1983 ம் ஆண்டு சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவியர், திடீரென சந்தித்தால் எப்படி இருக்கும். ஒருவரை ஒருவர் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சாயலில் மாற்றங்கள். பெயர்களை சொல்லி சொல்லி தங்களை அறிமுகம் செய்த போது, மகிழ்ச்சியில் வயதையும் மறந்து சிலர் துள்ளிக் குதித்தனர்.

சுகந்தி படித்த பள்ளியிலே ஆசிரியர். ஆஷா வக்கீல், லதா, கீதா டாக்டர்கள் இப்படி ஒவ்வொரு அறிமுகமும் கரவொலியோடு நடந்தது. இந்த சந்திப்புக்காக சென்னை, பெங்களூரு, கோவை என தொலை தூரங்களில் இருந்தும் வந்திருந்தனர்.
மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் நடனம், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் வழங்கி, அடுத்த சந்திப்புக்கு நாள்குறித்து விடைபெற்றனர்.





Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X