விஷவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிப்பு| Dinamalar

விஷவாயுவில் இருந்து மின்சாரம் தயாரிப்பு

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

நொய்டா: கழிவுநீரில் இருந்து, அதிக அளவில் மீத்தேன், கார்பன் டை-ஆக்சைடு, சல்பர் டை-ஆக்சைடு, ஹைட்ரஜன் டை-ஆக்சைடு போன்ற வாயுக்கள் வெளியாகின்றன. இதன் காரணமாக, கழிவுநீர் கால்வாய்களில் இறங்கி சுத்தம் செய்பவர்கள், விஷவாயு தாக்கி, உயிரிழக்கின்றனர். உயிரிழப்பை தவிர்ப்பதற்காக, அந்த விஷவாயுவை பயன்படுத்தி, மின்சாரத்தை தயாரிக்கும் ஆய்வில், ஐ.ஐ.டி., மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஈடுபட்டனர்.


பரிசோதனை முறை:

சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, உத்தரபிரதேச மாநிலத்தின், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள நொய்டாவில், பரிசோதனை முறையாக, கழிவுநீர் குழாய்களின் முக்கிய இணைப்பு மீது, சிறிய எரிவாயு உற்பத்தி ஆலையை அமைத்து, அதில் இருந்து, மின்சாரத்தை தயாரித்து, தெரு விளக்குகளுக்கு பயன்படுத்தும் பணியில், மாணவர்கள் ஈடுபடுவர். ஒரு வார பரிசோதனைக்குப் பின், நகரில் உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில், எரிவாயு தயாரிப்பு ஆலை நிறுவப்பட்டு, அதிகளவில் மின்சாரம் தயாரிக்கப்படும். 'வரும் 2021ம் ஆண்டுக்குள் இந்தத் திட்டம், நொய்டா முழுவதும் விரிவாக்கப்படும்' என, ரூர்க்கி ஐ.ஐ.டி.,யின் திட்ட பொறியாளர் ஸ்ரீவத்சவா கூறியுள்ளார். இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் விரிவான அறிக்கை கிடைத்தபின், ஆய்வு செய்யப்பட்டு, உரிய அங்கீகாரம் வழங்கப்படும். நொய்டாவில் உள்ள, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின், மின் தேவைக்காக, ஆண்டுக்கு, 73 லட்சம் செலவிடப்படும் நிலையில், விஷவாயுவில் இருந்து தயாரிக்கப்படும் மின்சாரம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு பயன்படுத்தப்படும். 'புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, ஆண்டுக்கு, 43 லட்சம் ரூபாய் சேமிக்கப்படும். பின், படிப்படியாக, மற்ற பகுதிகளுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படும்' என, டி.சி.இ.ஓ., அதிகாரி விஜய யாதவ் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.