Problem in delta district | குறுவையில் 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: போதிய மழையின்மையால் கவலை| Dinamalar

குறுவையில் 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: போதிய மழையின்மையால் கவலை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
குறுவையில் 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம்: போதிய மழையின்மையால் கவலை

தஞ்சாவூர் : மேட்டூர் அணையில் குறைவான தண்ணீரே இருப்பதால், டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடி யில், 3.30 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது.


1.15 லட்சம் ஹெக்டேரில்...


தமிழக நெல் தேவையில், 52 சதவீதத்தை உற்பத்தி செய்யும் பகுதியாக, டெல்டா மாவட்டங்கள் உள்ளன. மேட்டூர் அணை, ஜூன் 12ல், திறக்கப்பட்டு, தொடர்ந்து போதுமான அளவுக்கு நீர் வரத்து இருந்தால், தஞ்சாவூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய டெல்டா பகுதியில், குறுவை சாகுபடி, 1.15 லட்சம் ஹெக்டேரில் மேற்கொள்ளப்படும். இல்லையெனில், பம்ப்செட் வசதியுள்ள விவசாயிகள், 65 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்வர்.கடந்த, 2012ல், தண்ணீர் பற்றாக்குறையால், மேட்டூர் அணை செப்டம்பரில் திறக்கப் பட்டது. இதனால், 51 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டது. 2013ல், மேட்டூர் அணை, ஆகஸ்ட் 2ல் திறக்கப்பட்டதால், 69,471 ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.

நடப்பாண்டில், மேட்டூர் அணையில், 44.02 அடி நீர் மட்டுமே உள்ளதால், ஜூன், 12ம் தேதி, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே, பம்ப்செட் வசதியுள்ள, 60 ஆயிரம் ஹெக்டேரில் மட்டுமே, குறுவை சாகுபடி துவங்கி உள்ளது. இந்த பிரச்னையால், இந்த ஆண்டும், குறுவை சாகுபடியில் பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வேளாண் வல்லுனர் குழுவை சேர்ந்த, ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் கலைவாணன் கூறியதாவது:
இயல்பை விட, குறைவாகவே தென்மேற்கு பருவமழை பெய்யும் என, வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. பருவமழை பெய்து, அணையில் நீர்மட்டம் உயர்ந்தாலும் கூட, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் அணை திறந்தால் தான் பயனுள்ளதாக இருக்கும்.


ஆற்று பாசனம்


சமீபத்தில் பெய்த மழையை பயன்படுத்தி, பம்ப்செட் வசதிஉள்ள விவசாயிகள் மட்டுமே, நிலத்தை உழும் பணிகளை செய்து வருகின்றனர். மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படாததால், காவிரி ஆற்று பாசனத்தை மட்டும் நம்பியுள்ள, 55 ஆயிரம் ஹெக்டேரில், குறுவை சாகுபடி நடக்க வாய்ப்பில்லை. இதனால், ௩.௩௦ லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்படும் நிலை உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் பொருளாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறியதாவது:
37.4 டி.எம்.சி., நீர்: திருச்சி முக்கொம்பு முதல், தஞ்சாவூர் அணைக்கரை வரை, காவிரி ஆற்று பகுதியில் தடுப்பணை கிடையாது. மேலும், 36 கிளை ஆறு, வாய்க்கால், பிரிவு வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவை துார்வராமல் கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில், மேட்டூரில் திறந்து விடப்பட்ட, 37.4 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது. இந்த நீரை பயன்படுத்தி, 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருக்க முடியும். உபரி நீரை, சேமித்து வைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy naicken - Hamilton,பெர்முடா
25-ஜூன்-201402:03:37 IST Report Abuse
ramasamy naicken தமிழகத்தை ஆளும் காவேரி தந்த கலைச்செல்வி எப்படியாவது காவிரியில் தண்ணீர் கொண்டு வந்து விடுவார்.
Rate this:
Share this comment
Cancel
Ramakrishnan Natesan - mumbai,இந்தியா
24-ஜூன்-201413:15:34 IST Report Abuse
Ramakrishnan Natesan இதற்கும் கருணா தான் காரணம்
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
24-ஜூன்-201412:53:21 IST Report Abuse
P. SIV GOWRI எந்த பயமும் வேண்டாம். கடவுள் காப்பாத்துவார். நல்ல மழை வரும். நாடு செழிக்கும்
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
24-ஜூன்-201408:14:03 IST Report Abuse
SURESH SUBBU 37.4 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது... இது ஒரு அருமையான செய்தி ஒரு மாசத்திலேயே 37.4 TMC என்றால்.... மழை காலத்தில் கடலில் வெட்டியாக கலக்கும் தண்ணீரை, நதிநீரை இப்பவாவது சேமியுங்கள்... ப்ளீஸ் ப்ளீஸ்.. கோர்ட் கேசு, தீர்ப்பு, நதி நீர் ஆணையம் எல்லாம் இன்றைய நீர் பிரச்னையை தீர்க்காது...
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
24-ஜூன்-201408:08:04 IST Report Abuse
SURESH SUBBU 37.4 டி.எம்.சி., நீர்: திருச்சி முக்கொம்பு முதல், தஞ்சாவூர் அணைக்கரை வரை, காவிரி ஆற்று பகுதியில் தடுப்பணை கிடையாது. மேலும், 36 கிளை ஆறு, வாய்க்கால், பிரிவு வாய்க்கால், ஏரி, குளம் ஆகியவை துார்வராமல் கிடக்கின்றன. கடந்த ஆகஸ்ட்டில், மேட்டூரில் திறந்து விடப்பட்ட, 37.4 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது. இந்த நீரை பயன்படுத்தி, 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்திருக்க முடியும். உபரி நீரை, சேமித்து வைக்க முடியாத பரிதாப நிலையில் உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்...... இதை தானே நான் நேற்றும்,... சில தினங்களுக்கும் முன்பும் சொன்னேன்... எங்கே கோவை சுப்பு.... மழை காலத்தில் வெட்டியாக கடலில் கலக்கும் இந்த 37.4 TMC தண்ணீரை டாம் கட்டி சேமித்து வைத்து இருந்தா, இன்னைக்கு 1.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்து இருக்க முடியும்.... இதற்க்கு காரணம் யார். கேரளா அரசா, கர்நாடக அரசா... ஆந்திர அரசா.... இதற்க்கு முழுக்க முழுக்க காரணம் ... தமிழகத்தை ஆண்ட திமுகா, அதிமுகா அரசுகள் தான்.... என்னை என்ன வேண்டும் என்றாலும் திட்டுங்கள்.... தயவு செய்து சின்ன சின்ன டாம்கள் கட்டுங்கள்...ஏறி, குளம், குட்டை, வாய்க்கால் போன்றவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவற்றை சுத்தம் செய்து தூர்வாருங்கள்...அவைகளில் தண்ணீரை சேமியுங்கள்.... அது எனக்காக அல்ல... குடிநீருக்காக, ...அடுத்த தலைமுறையினருக்காக.... விவசாயத்திற்காக... நமது உணவிற்காக....உங்கள் கால்களில் விழுந்து கேட்கிறேன்... சின்ன சின்னதா டாம்கள் கட்டுங்கள்... நதிநீரை சேமியுங்கள்...ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்.....
Rate this:
Share this comment
Cancel
SURESH SUBBU - Delhi,இந்தியா
24-ஜூன்-201407:58:55 IST Report Abuse
SURESH SUBBU அம்மாவின் ஆட்சியில் குறுவை சாகுபடி கும்மி அடிக்குது....
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai Kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
24-ஜூன்-201407:50:05 IST Report Abuse
Tiruvannamalai  Kulasekaran தடுப்பணை கட்டுங்கள் ஏரி வாய்க்கால் தூர் வாருங்கள் கடலில் வீணாக கலக்கும் ஆற்றுநீரை சேமிக்க ஆவன செய்யுங்கள் செய்வீர்களா செய்வீர்களா செய்வீர்களா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.