இறந்தவரின் உடல் தானம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறந்தவரின் உடல் தானம்

Added : ஜூலை 10, 2014


மதுரை :மதுரை கனகவேல்காலனியைச் சேர்ந்த முன்னாள் ராணுவவீரர் நீலமேகம் பிள்ளை, 92. இவர் சில ஆண்டுகளுக்கு முன், மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு தன் உடலை தானம் செய்வதாக ஒப்பந்தப் பத்திரத்தில் எழுதி கொடுத்திருந்தார். நேற்று முன்தினம், அவர் இயற்கை மரணம் அடைந்ததால், அவரது மருமகள் பூமா, நீலமேகத்தின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினார்.இதுகுறித்து, கல்லூரி துணைமுதல்வர் சந்தானலட்சுமி கூறுகையில்,''முதலாண்டு மருத்துவ மாணவர்கள் உடற்கூறு இயல் பாடம் படிப்பதற்கு, இறந்த உடல்கள் தேவை. எனவே, உடல்தானம் செய்வதற்கு மருத்துவக் கல்லூரியை அணுகலாம்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X