அரசு பண்ணையில் ரூ. 32 லட்சத்தில் செடிகள் விற்பனைக்கு இலக்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பண்ணையில் ரூ. 32 லட்சத்தில் செடிகள் விற்பனைக்கு இலக்கு

Added : ஆக 09, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த, திம்மாபுரத்தில் அமைந்துள்ள, அரசு தோட்டக்கலை பண்ணையில் இந்தாண்டு, 32 லட்ச ரூபாய் மதிப்பில் செடிகள் உற்பத்தி செய்து, விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே, திம்மாபுரத்தில் 1952ம் ஆண்டு அரசு தோட்டக்கலை பண்ணை அமைக்கப்பட்டது. 9.69 ஹெக்டரில் அமைந்துள்ள இப்பண்ணையில், தற்போது, மா உயர்ரக ஒட்டு செடிகளான ஜகாங்கீர், ஹீமாயுதின், இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, பஞ்சவர்ணம், செருகு போன்றவைகள் தனித்தனியாக வைக்கப்பட்டு, ஒட்டு வைக்கப்படுகிறது. மேலும் இங்கு புளி, நெல்லி, மாதுளை, பலா மற்றும் வீட்டு தோட்டங்களுக்கு தேவையான கருவேப்பிலை, முருங்கை மற்றும் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.செடி வளர்க்கும் பணியில், 39 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் செடிகள், தனியார் நர்சரி கார்டனில் உற்பத்தி செய்யப்படும் செடிகளை காட்டிலும் தரம் வாய்ந்ததாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் தமிழகத்தில் கோவை, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், காவேரிப்பட்டணத்திற்கு வந்து செடிகளை வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும், 35 ஆயிரம் உயர்ரக ஒட்டு மா செடிகளும், 6,500 புளியஞ்செடிகளும், 3,500 சப்போட்டா செடிகளும், 3,000 கொய்யா செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உரிகம் ரக புளியஞ் செடிகள் கடல் ஓரம் உள்ள நிலத்தை தவிர, மற்ற அனைத்து வகை நிலங்களிலும் செழித்து வளர்ந்து அதிக லாபம் தரும் என்பதால், அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.
திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கூறியதாவது: இந்த பண்ணையில் உற்பத்தி செய்யப்படும், அனைத்து செடிகளும் தரமானதாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் பல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் இங்குவந்து செடிகளை வாங்கி செல்கின்றனர். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள இந்த பண்ணையில், காரில் வருவோரும் செடிகளை வாங்கி செல்கின்றனர்.கடந்தாண்டு 30 லட்சம் ரூபாய்க்கு செடிகள் விற்பனை நடந்துள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் செடிகள், அரசு தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. இதற்கான விலையை அந்தந்த துறையில் இருந்து நாங்கள் பெற்றுக் கொள்கிறோம். இந்தாண்டு, 32 லட்ச ரூபாய்க்கு செடிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செடிகள் உற்பத்தி செய்து வைக்கப்பட்டுள்ளது. செடிகள் தேவைப்படுவோர், 84894-57185 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X