சென்னையின் அடையாளம் அண்ணா மேம்பாலம்| Dinamalar

சென்னையின் அடையாளம் அண்ணா மேம்பாலம்

Updated : ஆக 20, 2014 | Added : ஆக 20, 2014 | கருத்துகள் (1)
Advertisement

சென்னையின் அடையாளங்களில், ஒன்று, அண்ணா மேம்பாலம் எனப்படும்,ஜெமினி மேம்பாலம்.
அண்ணாசாலை (அன்றும் இன்றும் மவுண்ட் ரோடு) நுங்கம்பாக்கம் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, ஜி.என்.செட்டி சாலை ஆகிய சாலைகளின் போக்குவரத்தை முறைப்படுத்த, 1250 அடி நீளம் மற்றும் 48 அடி அகலத்தில் 66 லட்சம் ரூபாய் செலவில், 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973, ஜூலை 1ம் தேதி, அண்ணா மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது.
அப்போது அந்த பகுதியில் ஜெமினி ஸ்டூடியோ இருந்ததால், அது ஜெமினி மேம்பாலம் என்று மக்களால் அழைக்கப்பட்டது, ஆனால் திறப்பு விழாவின்போது அண்ணா மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது.
பாலம் கட்டப்பட்ட ௧௯௭௨, ஜூலை மாதத்தில் எடுத்த பழைய படமும், இப்போதைய படமும் இங்கே இடம் பெற்று உள்ளன.

இந்த மேம்பாலத்தில் நாள் தோறும் லட்சத்திற்கும்அதிகமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.- எல்.முருகராஜ்


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X