17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!| Dinamalar

17 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்!

Added : ஆக 21, 2014 | கருத்துகள் (1)
Advertisement

வரலாற்றில் தேடிப்பார்த்தால், தேவார மூவரில் ஒருவரான, திருநாவுக்கரசர், தமது வைப்புத் தலங்களில் ஒன்றாக, எழுமூர் என, எழும்பூரைத் தான் குறிப்பிடுகின்றார் என்பது ஆராய்ச்சியாளர்கள் கருத்து.

எலிஹூ யேல் என்ற ஆங்கிலேயர், சென்னையின் ஆளுனராக, 1720ம் ஆண்டு இருந்தபோது, எழும்பூர் கிராமத்தை, நவாப் சுல்பீர் கான் என்பவரிடம் இருந்து வாங்கினார்.


எழும்பூர் என்ற சொல் உச்சரிக்க கஷ்டமாக இருந்ததால், ஆங்கிலேயரின் வாயில், அது, 'எக்மோர்' ஆனது. இன்று வரை, நமக்கும் 'எக்மோர்' தான்.


கடந்த, 1908ம் ஆண்டு, 17 லட்சம் ரூபாய் செலவில், ராபர்ட் சிஸ்ஹோம் என்ற ஆங்கிலேயரால் வடிவமைக்கப்பட்டு, சாமிநாதப் பிள்ளை என்ற ஒப்பந்ததாரரால் இந்திய-மொகலாய கட்டடக் கலைகள் கலந்து கட்டப்பட்டதுதான், இந்த எழும்பூர் ரயில் நிலையம்.இந்தியாவில் கல்கத்தாவின் ஹவுரா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக எழும்பூர் ரயில் நிலையத்தில்தான், அந்த காலத்தில், ரயில் நிற்கும் இடம் வரை கார் போகும் வசதி இருந்தது. அகல ரயில் பாதை வந்த பின் அந்த வசதி அடிபட்டு போனது.


இங்கிருந்து தனுஷ்கோடி வரை ரயிலில் போய், பின் அங்கிருந்து கப்பலில் தலைமன்னார் சென்று திரும்பவும் வரும், 'போட் மெயில்' வசதி அப்போது இருந்தது. அதற்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வழங்கப்பட்டது. தனுஷ்கோடி, புயலால் அழிந்தபிறகு, இந்த ரயில் நிறுத்தப்பட்டது.

- எல்.முருகராஜ்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan - Madurai,இந்தியா
22-அக்-201408:55:54 IST Report Abuse
Loganathan கார் நிறுத்த வசதி இருந்த பொழுது கார் உள்ளே வருவதற்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது பிளாட்பாரம் டிக்கெட் போன்று.. VIP க்கள் அதிக தூரம் நடக்காமல் ரயில் பெட்டிகளில் ஏறுவதற்கு வசதியாக இருந்தது. ஆனால் பிளாட்பார்ம்களின் எண்ணிக்கை மூன்று தான்.
Rate this:
Share this comment
Cancel
Pasupathilingam - Chidambaram,இந்தியா
09-செப்-201409:17:21 IST Report Abuse
Pasupathilingam முக்கியமான ஒரு செய்தியை விட்டுவிட்டீர்களே. அந்த ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிராதிகள் யாவும் கடலூர் மாவட்டம் பரங்கிபேட்டையில் இயங்கிய தென்னிந்தியாவின் முதலாவது இரும்பு ஆலையில் தயார் செய்யப்பட்டவை ஆகும். இதற்க்கு சான்று தற்போதும் அந்த கிராதிகளில் காணலாம். ஆனால் துரதிருஷ்டம் பரங்கிபேட்டையில் இரும்பு ஆலைதான் இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை