உண்ணாவிரதத்தை தொடரும் சர்மிளா : கோர்ட் விடுவித்தும் வீட்டிற்கு செல்ல மறுப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

உண்ணாவிரதத்தை தொடரும் சர்மிளா : கோர்ட் விடுவித்தும் வீட்டிற்கு செல்ல மறுப்பு

Added : ஆக 22, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கோல்கட்டா : ''ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை, அரசு வாபஸ் பெறும் வரை, என் உண்ணாவிரதம் தொடரும். அதுவரை, என் வீட்டிற்கு செல்லப் போவதில்லை; தாயாரையும் பார்க்கப் போவதில்லை,'' என, சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா தெரிவித்து உள்ளார்.ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம்மணிப்பூரில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ளது. 2000ம் ஆண்டில், இம்மாநிலத்தில் உள்ள மலோம் கிராமத்தில், பாதுகாப்புப் படையினரால், பொதுமக்களில், 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ், தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, பாதுகாப்புப் படையினர் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.அதனால், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, அந்த ஆண்டு முதல், சமூக ஆர்வலர் இரோம் சானு சர்மிளா உண்ணாவிரதம் இருந்து வந்தார்.தொடர்ந்து, ஆண்டு முழுவதும் உண்ணா விரதம் இருந்து வந்ததால், ஒவ்வொரு ஆண்டும், அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது, தற்கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டது.மேலும், கைது செய்தாலும், அவர் உண்ணா விரதத்தை தொடர்ந்ததால், மணிப்பூரில், அவர் சிகிச்சை பெற்று வந்த, ஜவஹர்லால் நேரு மருத்துவ அறிவியல் நிறுவன மருத்துவமனையின் அறையே, சிறையாக மாற்றப்பட்டது. போலீஸ் காவலில் இருந்த அவருக்கு, டியூப் வழியாக உணவு வழங்கப்பட்டது.இதற்கிடையில், தன்னை விடுதலை செய்யக் கோரி, கோர்ட்டில், சர்மிளா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், அவரை விடுதலை செய்யும்படி, சமீபத்தில் கோர்ட் உத்தரவிட்டது. அதனால், மருத்துவமனை யில் உள்ள அறையிலிருந்து, சர்மிளாவை போலீசார் விடுதலை செய்தனர்.ஆனாலும், 42 வயதான சர்மிளா, வீட்டிற்கு செல்லாமல், அந்த மருத்துவமனையின் வளாகத்திலேயே, சிறிய கூடாரம் ஒன்றை அமைத்து, அதில், தன் உண்ணாவிரதத்தை தொடர்கிறார்.திட்டவட்டம்ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை, அரசு ரத்து செய்யும் வரை, தன் வீட்டிற்கு செல்லப் போவதில்லை என்றும், தாயைப் பார்க்கப் போவதில்லை என்றும் கூறியுள்ளார்.சர்மிளா உண்ணாவிரதத்தை தொடரும், மருத்துவமனை வளாகத்தில் இருந்து, சில மீட்டர் தூரத்திலேயே, அவரின் வீடு உள்ளது. அங்கு சர்மிளாவின் தாயாரும், சகோதரரும் தங்கி உள்ளனர் என்பது, குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X