| மெஜாரிடியை மீண்டும் நிரூபிக்க கவர்னர் கெடு : சவாலை சந்திக்க தயார் என எடியூரப்பா அறிவிப்பு| Dinamalar

மெஜாரிடியை மீண்டும் நிரூபிக்க கவர்னர் கெடு : சவாலை சந்திக்க தயார் என எடியூரப்பா அறிவிப்பு

Updated : அக் 13, 2010 | Added : அக் 12, 2010 | கருத்துகள் (38)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Advertisement

பெங்களூரு : கர்நாடக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. சட்டசபையில் மீண்டும் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி முதல்வர் எடியூரப்பாவுக்கு, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டுள்ளார். "இந்த சவாலை சந்திக்க தயார்' என, முதல்வர் எடியூரப்பாவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கர்நாடகா சட்டசபை வரும் 14ம் தேதி (நாளை)  மீண்டும் கூடுகிறது.


கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, அக்கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். இதையடுத்து, சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கும்படி, முதல்வர் எடியூரப்பாவுக்கு, கவர்னர் பரத்வாஜ் உத்தரவிட்டார்.நேற்று முன்தினம் மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக கர்நாடகா சட்டசபை கூடியது. நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன், பா.ஜ., அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் 11 பேரையும், சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஐந்து பேரையும் தகுதி நீக்கம் செய்வதாகவும், அவர்கள் ஓட்டெடுப்பில் பங்கேற்க முடியாது என்றும் சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார்.இதனால், சட்டசபையில் பெரும் ரகளை ஏற்பட்டது.  அமளியின்  நடுவே, குரல் ஓட்டெடுப்பு மூலம் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் போப்பய்யா அறிவித்தார். இதுகுறித்து காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், கவர்னர் பரத்வாஜை சந்தித்து முறையிட்டனர். இது சட்டரீதியான அணுகுமுறை அல்ல என்று கூறி,   பா.ஜ., அரசை கலைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு, கவர்னர் பரத்வாஜ் பரிந்துரை செய்தார்.


மீண்டும் ஓட்டெடுப்பு : இந்த பரபரப்பான சூழலில், நேற்று பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு, முதல்வர் எடியூரப்பா, டில்லி சென்றார். எதிர்க்கட்சிகளை அணிதிரட்டி கவர்னரின் ஆட்சிக்கலைப்பு முயற்சிக்கு எதிராக வியூகம் வகுப்பதில் பா.ஜ., ஈடுபட்டுள்ளது.  இந்நிலையில், பெங்களூரில் கவர்னர் பரத்வாஜ் நேற்று செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறியதாவது:எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசு, சட்டபையில் பெரும்பான்மையை நிரூபித்த முறை, சட்டத்திற்குட்பட்டதாக இல்லை. குரல் ஓட்டெடுப்பு மூலம் எத்தனை பேர் அரசுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர், எத்தனை பேர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர் என்ற விவரம் உறுதியாக தெரியவில்லை. எனவே, முதல்வர் எடியூரப்பாவுக்கு மெஜாரிட்டியை நிரூபிப்பதற்கு வரும் 14ம் தேதி  மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும். அப்போது, மீண்டும் சட்டசபையை கூட்டி, அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.இவ்வாறு கவர்னர் பரத்வாஜ் கூறினார்.


எடியூரப்பா சம்மதம் : இந்நிலையில், இந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. "நாளை நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயார்' என, முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கவர்னர் மாளிகை வட்டாரங்களும் இதை உறுதி செய்துள்ளன.


வழக்கு ஒத்திவைப்பு: கர்நாடகாவில் பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் 11 பேர் மற்றும் சுயேச்சை எம்.எல்.,க்கள் ஐந்துபேரை சபாநாயகர் போப்பய்யா பதவி நீக்கம் செய்ததை எதிர்த்து,  கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பான விசாரணை  துவங்கியது. தலைமை நீதிபதி கேகர்  மேலும் விசாரணையை வரும் 18ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார். குறிப்பாக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் கட்சித் தாவல் சட்டத்தில்  வருகிறார்களா என்ற விளக்கம் கிடைக்காத வரை, அவர்களின்   கதி  என்ன ஆகும் என்று தெரியவில்லை. மேலும், மத்திய அரசும்  நடவடிக்கை எடுப்பதில் பொறுமை காக்கிறது. 


Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஸ்ரீனிவாச தாத்தம் - ஸ்ரீவைகுண்டம்,இந்தியா
13-அக்-201023:10:20 IST Report Abuse
ஸ்ரீனிவாச தாத்தம் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி அரசு அமைவ அமைவதாக இருந்தால் அரசை ஆதரிக்கும் அனைத்து சட்டமன்ற வுருப்பினர்களும், ஆட்சியின் முழுப்பதவிக் காலத்திற்கும் ஆதரவு அளிக்கவேண்டும், இடையில் எந்தக் காரனத்திர்க்க்காகவும் ஆதரவை விலக்கிக்கொண்டால் சட்ட மன்ற உறுப்பினர் பதவியை இழக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும். அப்பட்டிசெய்தால் தான் இந்த அரசியல்வாதிகள் திருந்துவார்கள்., ஆட்சிக் கவிழ்ப்பும் ஏற்படாது.
Rate this:
Share this comment
Cancel
nallavan - savoodhiarebiyaa.,சவுதி அரேபியா
13-அக்-201022:00:24 IST Report Abuse
nallavan Congress don't like to let others earn.
Rate this:
Share this comment
Cancel
அக்கு லாலு - male,மாலத்தீவு
13-அக்-201021:52:18 IST Report Abuse
அக்கு லாலு எடியரபா இது ஒரு வாழ்க்கையாபா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X