நீச்சல் குளத்தில் மூழ்கி ஐ.பி.எஸ்., அதிகாரி பலி| Dinamalar

நீச்சல் குளத்தில் மூழ்கி ஐ.பி.எஸ்., அதிகாரி பலி

Added : ஆக 30, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: ஐதராபாத்தில் விருந்து நிகழ்ச்சி யில் பங்கேற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி மனு முக்த் முனவ், எதிர்பாராத விதமாக நீச்சல் குளத்தில் மூழ்கி, பரிதாபமாக இறந்தார். அரியானாவைச் சேர்ந்த இவர், ஐதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். பயிற்சி முடித்தவர்களுக்கு, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் நேற்று முன்தினம் இரவு விருந்து கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கிருந்த நீச்சல் குளத்தில், மனு முக்த் முனவ் எதிர்பாராதவிதமாக விழுந்தார். மீட்பதற்குள், பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை