விநாயகர் பற்றி அவதூறு : பாலிவுட் இயக்குனருக்கு எதிர்ப்பு| Dinamalar

விநாயகர் பற்றி அவதூறு : பாலிவுட் இயக்குனருக்கு எதிர்ப்பு

Added : ஆக 30, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: விநாயகரை பற்றி, சமூக வலைதளத்தில் கிண்டலடித்தும், அவதூறாகவும் கருத்து தெரிவித்த, பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மாவுக்கு, கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.பாலிவுட்டின் பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. 'சத்யா, ரங்கீலா, சர்க்கார் ராஜ்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். விநாயகர் சதுர்த்தியான நேற்று, சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். விநாயகரை கிண்டலடித்தும், கேலி செய்தும், அவமதிக்கும் வகையிலும், பல கருத்துகளை தெரிவித்திருந்தார்.'விநாயகருக்கு, அவரின் தலையையே, அவரால் காப்பாற்ற முடியவில்லை. பக்தர்களை எப்படி காப்பாற்று வார். மற்ற கடவுள்களை விட, விநாயகர் அதிகம் சாப்பிடுவார் போலிருக்கிறது. அதனால் தான், குண்டாக இருக்கிறார். விநாயகரை வழிபட்டு, பலன் அடைந்த பக்தர்களின் பட்டியலை வெளியிட முடியுமா?' என்பது போன்ற பல சர்ச்சைக்குரிய விஷயங்களை அவர் தெரிவித்திருந்தார். விநாயகர் சதுர்த்தி அன்று, ராம்கோபால் வர்மா இவ்வாறு தெரிவித்துள்ளது, கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ''என் கருத்துகள் யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற் காக மன்னிப்பு கேட்கிறேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
30-ஆக-201407:20:02 IST Report Abuse
Sutha இது போல மற்ற மத கடவுள்களை பற்றி இவருக்கு விமர்சனம் செய்ய தைரியம் உள்ளதா. எனவே இவரைப் போன்ற கோழைகளை பிடித்து சிறையில் அடைப்பது, மக்களிடயே பிரச்சினைகள் வளராமல் இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை