வரதட்சணை சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement


மங்களூரு :கணவர் மற்றும் அவரது உறவினர்கள் மீது, வரதட்சணை தடுப்புச் சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண் டாக்டர் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, மணிப்பால் கே.எம்.சி., மருத்துவ உதவி பேராசிரியர் டாக்டர் குருகாந்த் ராவுக்கும், டாக்டர் ரஞ்சிதாவுக்கும் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த 15ம் நாள், தாவணகரேயில் உள்ள, தன் பெற்றோர் வீட்டிற்கே போகலாம் என, ரஞ்சிதா, கணவரிடம் வற்புறுத்தி உள்ளார்.
இதற்கு, ராவ் மறுக்கவே, விவாகரத்து கொடுக்காவிடில், ஒரு கோடி ரூபாய் வரதட்சணை கேட்டதாக, பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். பின், ரஞ்சிதா, மங்களூரு, 'முல்லர்ஸ்' மருத்துவமனையில் உதவி பேராசிரியராக
பணியில் சேர்ந்தார்.இதையறிந்த கணவர் ராவ், நேரில் சென்று, தன்னுடன் சேர்ந்து வாழும்படி கேட்ட போது, அதற்கு மறுத்த ரஞ்சிதா, விவாகரத்து கேட்டுள்ளார்.
அதற்கு ராவ் மறுக்கவே, போலீசில், கணவர் குருகாந்த் ராவ், அவரது தந்தை டாக்டர் ராவ் ஆகியோர், தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்துவதாகவும், வரதட்சணை கொடுக்காததால், வீட்டை விட்டு
வெளியேற்றியதாகவும் புகார் கொடுத்தார்.ரஞ்சிதாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போது, அவர்களும், மகளுக்கு ஆதரவாக போலீசாரிடம் வாக்கு மூலம் அளித்தனர். டாக்டர் குருகாந்த் ராவ், அவரது பெற்றோர், உறவினர்களிடம் விசாரணை நடத்திய போது, ரஞ்சிதா கொடுத்துள்ள புகார் தவறானது; திருமண செலவு அனைத்தையும் குருகாந்த் வீட்டினரே ஏற்று கொண்டதும் தெரியவந்தது. உடல் ரீதியாக ரஞ்சிதாவை யாரும் கொடுமைப்படுத்தவில்லை
என்பதும் நிரூபணமானது. இதன் அடிப்படையில், ரஞ்சிதா தாக்கல் செய்த புகார், போலியானது என்பது தெரிந்ததால், போலீசார் வழக்கை தள்ளுபடி செய்தனர்.இதற்கிடையில், ரஞ்சிதா தொடர்ந்த வழக்கால், தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டதுடன், தன் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டதால், அவரை தண்டிக்க வேண்டும் என, மங்களூரு, ஜெ.எம்.எப்.சி., நீதிமன்றத்தில்,
குருகாந்த் ராவ் மனு தாக்கல் செய்தார். வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்திய குற்றத்துக்காக, விசாரணை நடத்த, ரஞ்சிதாவுக்கு சம்மன் அனுப்ப கோர்ட் உத்தரவிட்டது. இதற்கிடையில், அவர் பணியாற்றி வந்த முல்லர்ஸ் மருத்துவமனையிலிருந்து அவர் விலகிவிட்டதால், சம்மனை அவரால் பெற முடியவில்லை.பின், நீதிமன்றம், மங்களூரு பார்கே போலீஸ் ஸ்டேஷனுக்கு உத்தரவிட்டு, ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் ஜாமினில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பித்து, கைது செய்ய உத்தரவிட்டது.அதன்படி, தாவணகரே சென்ற மங்களூரு போலீசார், ரஞ்சிதாவையும், அவரது பெற்றோரையும் கைது செய்தனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arokiyapuram raman - ayothi,பெல்ஜியம்
23-செப்-201404:18:41 IST Report Abuse
arokiyapuram raman இந்திய நீதி மன்றம் சோடிக்கும் பொய் வழக்கு, divorce கொடுக்காமல் இருப்பதற்கு போடப்பட்ட பொய் வழக்கு, பெண்களுக்கு மற்றுமே பயன்படும் சட்டத்தை மாற்றாமல் நடிக்கும் மக்களுக்கு செருப்பை காட்டவேண்டிய நேரம் இது. மக்களை முட்டாள் என்று நெனைக்கும் நீதிபதிகளுக்கு நல்ல புத்தி கொடுமா மாரியம்மா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்