இந்து மக்கள் கட்சி புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து மக்கள் கட்சி புகார்

Added : செப் 30, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்: தசரா விழாவை கொச்சைப்படுத்திய கிறித்துவ மதபோதகர் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்து மக்கள் கட்சி மகளிர் அணி மாநில செயலாளர் ஜெயகாந்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் தசரா திருவிழா நடக்கிறது. தென் மாவட்டங்களில் உள்ள தமிழர்கள் குலசேகரபட்டிணம் ஸ்ரீ முத்தாரம்மன் கோவிலில் கூடி விரதமிருந்து விழாவை கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி கிராமத்தை சேர்ந்த கிறித்துவ மதபோதகர் மோகன் சி லாரன்ஸ் என்பவர், தனது பத்திரிக்கையில் தசரா விழா பக்தர்களின் மத உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையில் எழுதியுள்ளார். இதையடுத்து, தமிழகத்தில் அவர் நடத்தும் மத பிரசார கூட்டங்களை தடை செய்து, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அவரை கைது செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X