ஆசிய விளையாட்டு: இந்திய அதிகாரிகள் மீது குத்துச்சண்டை வீராங்கனை புகார்| Dinamalar

ஆசிய விளையாட்டு: இந்திய அதிகாரிகள் மீது குத்துச்சண்டை வீராங்கனை புகார்

Added : அக் 01, 2014 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இன்சியான்: ஆசிய விளையாட்டு போட்டியில் தனக்கு இந்திய அதிகாரிகள் யாரும் உதவி செய்யவில்லை எனவும், அவர்களுக்கு நாட்டின் மீது அக்கறை ஏதும் இல்லை எனவும் குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவி கூறியுள்ளார். ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில், நடுவர்களின் சதி காரணமாக, இந்திய வீராங்கனை சரிதா தேவியின் தங்கப்பதக்க கனவு தகர்ந்தது. வெறும் வெண்கலத்துடன் ஆறுதல் அடைந்தார். இந்நிலையில், இது தொடர்பாக தனியார் டிவிக்கு போன் மூலம் பேட்டியளித்த சரிதா தேவி, இந்த போட்டியில் இந்தியாவிலிருந்து வந்த அதிகாரிகள் யாரும் தனக்கு உதவி செய்யவில்லை. அவர்களுக்கு நாட்டை பற்றி கவலையில்லை. எனக்காக மற்ற நாட்டு வீராங்கனைகள் கவலைப்பட்டனர். குத்துச்சண்டை சங்கமும் இதுவரை என்னை தொடர்பு கொள்ளவில்லை. நாங்கள் தாமதாக அப்பீல் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது. அப்பீலில் தோல்வியடைந்தும் நாங்கள் அபராதம் கட்டினோம். எனது கணவர் 100 அமெரிக்க டாலர் அபராதம் கட்டினார். என்மீது குத்துச்சண்டை சங்கம் நடவடிக்கை எடுத்தால் அதை பற்றி கவலைப்பட போவதில்லை. கொரியா வீராங்கனைக்கு பதக்கம் கொடுத்ததை நாங்கள் ஏற்க வேண்டியதாகிவிட்டது என கூறினார். பேட்டியின்போது, சரிதா தேவி கண்ணீர் விட்டு அழுதார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jaga - cbe  ( Posted via: Dinamalar Android App )
01-அக்-201423:20:41 IST Report Abuse
jaga என் சகோதரி சரிதாதேவி இந்தியாவில் பிறந்ததற்கு நாம் பெருமை பட வேண்டும்.மாறாக அவர் மனம் புண்பட்டால் நாடு நாசமாகும்.ஒவ்வொரு இந்தியனும் இந்தியாவில் பிறந்ததுக்கு வெட்கப்பட நேரிட்டால்,நாடு கண்டிப்பாக அழிவை நோக்கி செல்லும்.இது திண்ணம்.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
01-அக்-201419:56:09 IST Report Abuse
K.Sugavanam வெட்கம் கெட்ட இந்திய பாக்சிங் அசோசியேஷன்..
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Leiden,நெதர்லாந்து
01-அக்-201419:48:18 IST Report Abuse
Dynamo சகோதரி, இந்தியாவில் பிறந்தது தான் உன் குற்றம். நம்மை வெளிநாட்டவர் மதிக்கும் அளவில் 1% கூட சக இந்தியர்கள் மதிக்க மாட்டார்கள். வாய்ப்பு கிடைத்தால் ஏறி மிதிக்க தயங்க மாட்டார்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X