எடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெயலலிதா : அமைச்சர்கள் திரும்ப உத்தரவு - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

எடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெ., : அமைச்சர்கள் திரும்ப உத்தரவு

Added : அக் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 எடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெ.,

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் காத்திருந்த தமிழக அமைச்சர்களை சென்னை திரும்பும்படி, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து எல்லா அமைச்சர்களும் நேற்று இரவே சென்னை திரும்பினர்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததை அடுத்து எல்லா அமைச்சர்களும் பெங்களூரு விரைந்தனர். சிறை வாசலில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர்.மாலை, 3:00 மணியளவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் சந்திக்க ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தார். அவர் மட்டும் சென்று ஜெயலலிதாவை பார்த்து பேசி விட்டு திரும்பினார்.சில நிமிடங்களில், 'இங்கே யாரும் இருக்க வேண்டாம்; அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக சென்னை திரும்புங்கள்' என ஜெயலலிதா உத்தரவிட்ட தகவல் கிடைத்தது.ஏற்கனவே, முதல்வர் பன்னீர்செல்வத்தை, 'பெங்களூரு வர வேண்டாம்; சென்னையில் இருந்து நிர்வாகத்தை பாருங்கள்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதையடுத்தே நேற்று பெங்களூரு செல்லும் திட்டத்தை ஓ.பி.எஸ்., கைவிட்டுள்ளார். -நமது சிறப்பு நிருபர்-

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை