ஜெயலலிதாக்கு ஜாமின் கிடைக்காததால் கதறி அழுத அ.தி.மு.க.,வினர் - Jayalalitha | Dinamalar

ஜெ.,க்கு ஜாமின் கிடைக்காததால் கதறி அழுத அ.தி.மு.க.,வினர்

Updated : அக் 01, 2014 | Added : அக் 01, 2014 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஜெ.,க்கு ஜாமின் கிடைக்காததால் கதறி அழுத அ.தி.மு.க.,வினர்

பெங்களூரு :தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜாமின் கிடைக்காததால், அ.தி.மு.க.,வினர் தரையில் உருண்டு, புரண்டு அழுதனர்.பரப்பன அக்ரஹாரா மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, ஜாமினில் வெளியாவார் என்று அ.தி.மு.க., தொண்டர்கள் சிறை வளாகத்தில் குவிந்தனர். ஆனால், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு, விசாரணை அக்., 7 க்கு தள்ளிவைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், பல பெண்கள் மார்பிலும், வயிற்றிலும் மாறி, மாறி அடித்து கொண்டு கதறி அழுதனர்.மூதாட்டி ஒருவர் இரு கைகளையும் மேலே தூக்கி சிறை இருந்த திசையை நோக்கி வணங்கி, கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. நேரம், செல்ல செல்ல தொண்டர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பினர். இதனால் சிறை வளாகத்தின் முன் வெறிச்சோடி காணப்பட்டது.தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் நேற்று காலையில் வருவதாக, அ.தி.மு.க.,வினர் தெரிவித்திருந்தனர். ஆனால், ஜாமின் விசாரணை எதிர்பார்த்தபடி அமையாததால் அவரது வருகை தள்ளிப்போடப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dinesh Babu - Coimbatore,இந்தியா
03-அக்-201402:27:28 IST Report Abuse
Dinesh Babu எல்லாம் காசு கொடுத்து நடிக்க சொன்னது தான்...அடுத்த தேர்தலில் ஜெயிக்க வேண்டாமா..
Rate this:
Share this comment
Cancel
Jeyakumar - London,யுனைடெட் கிங்டம்
03-அக்-201401:45:28 IST Report Abuse
Jeyakumar இவங்களுக்கெல்லாம் உண்மையிலேயே முளை இருக்கா? அல்லது இல்லாததுமாதிரி நடிகிராஙங்களா?, இலவச எலும்புத்துண்டுகளை போட்டு என்னமா குறைக்க வைத்துவிட்டார் ஜெயலலிதா. தமிழ் நாட்டில் தான் இதெல்லாம் நடக்கும்,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X