OPS greets people for Aautha Pooja and letter to Modi | ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம்

Updated : அக் 03, 2014 | Added : அக் 01, 2014 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ஓ.பி.எஸ்., போட்டார் பிள்ளையார் சுழி: ஆயுத பூஜை வாழ்த்து, பிரதமருக்கு கடிதம்

சென்னை: தலைமைச் செயலகத்தில் நேற்று, முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஆயுத பூஜை மற்றும் விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்து, பணியை துவக்கினார். மேலும், மீனவர் பிரச்னை தொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.

புதிய முதல்வராக பதவி யேற்றுள்ள, ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை 11:30 மணிக்கு, தலைமைச் செயலகம் வந்தார். தான் ஏற்கனவே இருந்த, நிதி அமைச்சர் அறைக்கு சென்று பணிகளை துவக்கினார்.


வெற்றி நிச்சயம்:

முதல் பணியாக, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை ஒட்டி, பொது மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில் அவர்
கூறியிருப்பதாவது: பெண்மையை போற்றி வணங்கும் விழா, நவராத்திரி திருவிழா. இது, ஆன்மிக விழா மட்டுமல்ல; கைவினைஞர்களின் கைவண்ணத்திற்கு, பெருமை சேர்க்கும் விழா; உழைப்பின் உன்னதத்திற்கு மதிப்பளிக்கும் விழா.விஜயதசமி அன்று கல்வி, கலை, தொழில்கள் ஆகியவற்றை துவங்கினால், வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை, மக்களுக்கு அளிக்கும் திருநாள் விஜயதசமி.'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்' என்பது இயற்கை நியதி. வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு நாம் செயல்பட்டால், அதர்மம் என்னும் சூழ்ச்சி அகன்று, தர்மம் நிலைநாட்டப்படும். அனைவருக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, அவர் தெரிவித்துஉள்ளார்.

வாழ்த்து செய்தியைத் தொடர்ந்து, இலங்கை சிறையில் உள்ள, தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார்.


உரிய நடவடிக்கை:

கடிதத்தில் அவர் கூறிஇருப்பதாவது:ஜெயலலிதாவின் இடைவிடா முயற்சி காரணமாக, இலங்கை சிறையில் இருந்த, 76 மீனவர்களை, இலங்கை நீதிமன்றம் விடுதலைசெய்துள்ளது; அவர்களில் 72 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.மீனவர்களை விடுவிக்க, தங்கள் தலைமையில் இயங்கும், மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை பாராட்டுகிறேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக, 71 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசு இன்னமும் விடுவிக்கவில்லை.அதேபோல், ராமேஸ்வரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த 20 மீனவர்கள், இலங்கை சிறையில் உள்ளனர்.அவர்களை விடுவிக்கவும், 75 படகுகளை விடுதலை செய்யவும், மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, முதல்வர் தெரிவித்து உள்ளார்.

மேலும், பகல் 12:00 மணிக்கு, தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் செயலர்கள், முதல்வர் பன்னீர்செல்வம் அறைக்கு சென்றனர். அவர்களுடன், முதல்வர் முக்கிய ஆலோசனை நடத்தினார்; துறை செயலர்களும், முதல்வரை சந்தித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்செல்வன் - london,யுனைடெட் கிங்டம்
03-அக்-201400:19:35 IST Report Abuse
தமிழ்செல்வன் அம்மா உணவகம்..அம்மா சிமென்ட்...அம்மா தண்ணீர் இப்படி எல்லாம் அம்மா பேருல இருக்குன்னு கவலைபடாதிங்க தல...அம்மாவுக்கு முன்னாடி உங்க பேருல...பன்னீர் சோடா ...பன்னீர் 65...பன்னீர் பிரைட் ரைஸ் ...பன்னீர் பட்டர் மசாலா ..இப்படி நிறைய இருக்கு....
Rate this:
Share this comment
Cancel
Tamizhmagan - Singapore,சிங்கப்பூர்
02-அக்-201406:18:47 IST Report Abuse
Tamizhmagan அட பார்றா தலீவர.. டக்குனு செட்டாயிட்டாறு.. இப்பதான் அந்த பதவிக்கே ஒரு களை வந்திருக்கு தமிழ்நாட்டுல..
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
02-அக்-201406:15:29 IST Report Abuse
தங்கை ராஜா அப்டேட்ஸ்.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X