ஜெயலலிதாக்கு எதிரான தீர்ப்பில் பா.ஜ.,விற்கு தொடர்பில்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி - Jayalalitha | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெ.,க்கு எதிரான தீர்ப்பில் பா.ஜ.,விற்கு தொடர்பில்லை : பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Added : அக் 01, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பா.ஜ.,விற்கு தொடர்பில்லை :

பொன்னேரி: தமிழகத்தில், புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான துவக்கமாக, தற்போதைய சூழல் அமைந்துள்ளது,'' என, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், நேற்று முன்தினம் இரவு, சென்னை அடுத்த தேவதானம் கிராமத்தில் உள்ள, ரங்கநாதர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டார்.பின்னர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:தமிழகத்தில், புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுவதற்கான ஒரு துவக்கமாக, தற்போதைய சூழ்நிலை அமைந்து உள்ளது. முன்னாள் முதல்வர், நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக, பதவியை தொடர முடியாத ஒரு நிலை. புதிய முதல்வராக பன்னீர்செல்வம் பதவி ஏற்றுள்ளார்.புதிய முதல்வருக்கு முதல் பணியாக இருப்பது, சட்டம் ஒழுங்கை சீர் செய்வது தான். கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் நடந்துள்ள சம்பவங்கள், தமிழக காவல் துறைக்கு மிகப்பெரிய தலைக்குனிவாக அமைந்திருக்கிறது.
ஒவ்வொரு கட்சிக்கும், தங்களது தலைவர்கள் மீது அபரிமிதமான பக்தி ஏற்படுவது இயற்கையான ஒன்று. ஆனால், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையில், மக்களுக்கு எந்தவிதமான பிரச்னைகளும் ஏற்படாமல் காக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அ.தி.மு.க.,விற்கு இருக்கிறது.புதிய முதல்வர் இதில் கவனம் செலுத்தி, சூழ்நிலையை சீர் செய்ய வேண்டும்.நடந்து முடிந்த வழக்கிற்கும், வழங்கப்பட்ட தீர்ப்பிற்கும், பா.ஜ.,விற்கு எந்த வகையிலும் சம்பந்தம் கிடையாது. நீதிமன்றம், முழுக்க முழுக்க தன் சொந்த கருத்தின் அடிப்படையில், சுதந்திரமாக செயல்பட்டு நீதி வழங்கி இருக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை