NSG bans Karunanidhi to come outside | வெளியே வர வேண்டாம்!'கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி.,| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளியே வர வேண்டாம்!'கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி.,

Updated : அக் 03, 2014 | Added : அக் 01, 2014 | கருத்துகள் (7)
Advertisement
வெளியே வர வேண்டாம்!'கருணாநிதிக்கு தடை போட்ட என்.எஸ்.ஜி.,

ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருவதால், 'எந்த நிகழ்ச்சிகளிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டாம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, தேசிய பாதுகாப்பு படை அதிகாரி (என்.எஸ்.ஜி.,) ஆலோசனை கூறியுள்ளார்.

சென்னை, கோபாலபுரம் இல்லத்தில், கருணாநிதியை நேற்று முன்தினம் மதியம், என்.எஸ்.ஜி., படையின் எஸ்.பி., சந்தித்து, 'தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்துக் குவிப்பு வழக்கில், தண்டனை பெற்று, சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. அதனால், நிலைமை சீரடையும் வரை, நீங்கள் பொது நிகழ்ச்சிகளை தவிர்க்க வேண்டும்; வெளியே வர வேண்டாம்' என, கேட்டுக் கொண்டதாக, தி.மு.க., வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.மேலும், கருணாநிதிக்கு அளிக்கப்படும் என்.எஸ்.ஜி., பாதுகாப்பு ஏற்பாடுகளையும், அவர் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்னை காரணமாக, கடந்த ஆறு நாட்களாக, கருணாநிதி அறிவாலயம் வரவில்லை. கோபாலபுரம் வீட்டில் தான் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் இரவு தான், அவர், சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு போனார் என்றும், தி.மு.க., தரப்பில் கூறுகின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரத்தில் மேலும் கூறியதாவது:கடந்த, 25ம் தேதி நடந்த, கறுப்புச் சட்டை போராட்டத்தில், கருணாநிதி, கலந்து கொண்டதோடு சரி. அதன்பின் அவர், எந்த நிகழ்ச்சியிலும், கலந்து கொள்ளவில்லை. ஆறு நாட்களாக, அறிவாலயம் கூட செல்லாமல், கோபாலபுரம் வீட்டில் தான் இருந்தார்.அவரை, அவரது துணைவியார் ராஜாத்தி, நேற்று முன்தினம் மதியம் கோபாலபுரம் வந்து, பார்த்துச் சென்றுள்ளார். நேற்று மதியம், ராஜாத்தியும் கனிமொழியும், கருணாநிதிக்கான மதிய உணவை, சி.ஐ.டி., காலனி வீட்டில் இருந்து, எடுத்து வந்தனர்.நேற்று இரவு தான் அவர், கோபாலபுரம் வீட்டை விட்டே வெளியே வந்தார். சி.ஐ.டி., காலனி வீட்டுக்கு சென்றார். ஜெயலலிதா ஜாமின் வழக்கில் முடிவு தெரியும் வரை, இந்த சூழ்நிலை நீடிக்கலாம்.இவ்வாறு, தி.மு.க., வட்டாரம் தெரிவித்தது.

நமது சிறப்பு நிருபர்

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thangaraj - ,இந்தியா
02-அக்-201404:49:05 IST Report Abuse
Thangaraj கட்சிக்காரர்களை தூண்டிவிட்டு கலவரத்தை உருவாக்கி கவர்னர் ஆட்சி கொண்டு வந்து அ.தி.மு.க ஆட்சியை கலைக்க பல பேர் முற்சித்தார்கள் ஒன்றும் வேகவில்லைஒரிரு நாள் முன்னரே தளபதி தமிழ் நாட்டில் ஆட்சிமாற்றம் 27ம் தேதிக்கு பிறகு வரும் என்று சொல்கிறார் அதற்கு பொருள் என்ன???-
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
02-அக்-201404:39:27 IST Report Abuse
Ramasami Venkatesan தமிழ் தலைவரின் நிலை - ஹவுஸ் அர்ரெஸ்ட் என்று சொல்லுவார்களே - அந்த நிலையில் அல்லவோ ஆகிவிட்டது. சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாதபடி.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-அக்-201402:13:14 IST Report Abuse
Ramesh Rayen இதுவும் ஒரு தண்டனைதானே
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
02-அக்-201401:45:42 IST Report Abuse
Ab Cd ரவுடிகளை அடக்க காவல் துறைக்கு துப்பு இல்லை என்பதையே கட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
02-அக்-201401:40:51 IST Report Abuse
Kovai Subbu தினம் பல அறிக்கைகளை விடும் கருணாநிதி அவர்கள் ஜெயலலிதா வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு குறித்து கூட எந்த கருத்தும் கூறவில்லையே. Common Enemy தொலைந்தார் என்று சிறிய கட்சி தலைவர்கள் கூட அறிக்கை விடும் போது பிரதான எதிர்கட்சியான திமுகாவில் இருந்து கருணாநிதி உட்பட யாரும் ஒரு கருத்து கூட சொல்லவில்லையே ஏன்? இதில் திமுகாவிற்கு சந்தோஷம் இல்லையா? அல்லது முன்னால் தமிழக முதல்வர் சிறைக்கு சென்றதில் வருத்தமா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
02-அக்-201401:22:55 IST Report Abuse
தமிழ்வேல் என்ன ஒற்றுமை .. அவருதான் ஜெயிலில் இருக்கின்றார் என்றால் ... ஐவரும் வீட்டு ஜெயிலில் உள்ளார்..
Rate this:
Share this comment
Cancel
elumalaiyaan - Chennai,இந்தியா
02-அக்-201400:34:18 IST Report Abuse
elumalaiyaan கடந்த 5 நாட்களாக கேள்வியும் நானே -பதிலும் நானே இல்லை.J ,நீதித்துறையினரால் சிறை.மு.க வீட்டுச்சிறை.இரண்டும் ஒன்றே.இருவருக்கும் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. "பாலுக்கு சக்கரை இல்லை என்பார்க்கும் மோருக்கு உப்பு இல்லை என்பார்க்கும் கவலை ஒன்றே"
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை