Tn files in supreme court | பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு| Dinamalar

பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு

Updated : அக் 16, 2014 | Added : அக் 16, 2014 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெரியாறு பகுதியில் கேரளா அத்துமீறல்: தமிழக அரசு வழக்கு

புதுடில்லி : 'கேரளாவில், முல்லைப் பெரியாறு அணைக்கு அருகில் உள்ள பகுதியில், கேரள அரசு செயல்படுத்த உள்ள, மெகா கார் பார்க் திட்டத்தை தடை செய்ய வேண்டும்; அந்த பகுதியில் மேற்கொண்டு எவ்வித அத்து மீறலிலும் கேரள அரசு ஈடுபடாமல் தடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு நேற்று முறையீடு செய்தது.

கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் பரா மரிப்பு மற்றும் நிர்வாகம் தமிழக அரசின் வசம் உள்ளது. அந்த அணையின் நீர் பரவும் இடம் ஒன்றில், கேரள அரசு, கார் தொழிற்சாலை துவக்கதிட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையில் வேகமாக இறங்கியது. கனரக இயந்திரங்களை கொண்டு, நீர் பிடிப்பு பகுதியை நிரப்பி வருகிறது. இதனால், அந்தப் பகுதியில் நீர் தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த தமிழக அரசு, அந்த பணியை நிறுத்த வேண்டும் என, கேரள மாநில அரசுக்கு பல முறை கடிதம் எழுதியும், கட்டுமான பணிகளை கேரள அரசு நிறுத்தவில்லை.

இதையடுத்து, கேரள அரசின் செயலை கண்டித்தும், கார் தொழிற்சாலை திட்டப் பணியை தடை செய்யக் கோரியும், தமிழக அரசு நேற்று, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.அதில், கேரள அரசின் செயல், கடந்த 1886ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்திற்கு எதிரானது.தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் சட்டவிரோத செயலாக கருதப்படும்.எனவே, கேரள அரசின் முயற்சிக்கு இடைக்கால தடையும், அத்துமீறலுக்கு நிரந்தர தடையும் விதிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Sugavanam - Salem,இந்தியா
16-அக்-201418:53:35 IST Report Abuse
K.Sugavanam மொதல்ல ரிசார்டுங்க ,அப்புறம் கார் பார்க்கிங்,இப்போ கார் தொழிற்சாலை..நாளைக்கி ..பீரங்கி கூட செய்ய ஆரம்பிச்சிடுவானுங்க சேட்டனுங்க..அரசு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-அக்-201415:17:37 IST Report Abuse
Sampath Kumar ஆரம்பித்து விட்டார்கள் அடுத்த கட்ட அக்கபோரை. நம்மவர்கள் வழக்கம் போல அம்மா வரட்டும் , அய்யா வரட்டும் ஐயப்பா வரட்டும் சொல்லி ஒரு ஆணியை கூட புடுங்க முடியாத இழி நிலை உள்ளான்
Rate this:
Share this comment
Cancel
NaaneAvan Das - Tirunelveli,இந்தியா
16-அக்-201414:43:45 IST Report Abuse
NaaneAvan Das எதுக்கு கோர்ட், கேஸ் என்று நேரத்தை வீணடித்துகொண்டு, பேசாமல் அணையின் நீர் மட்டத்தை உயர்த்துங்கள். அவர்களாகவே இடத்தை காலி செய்து விட்டு போவர்கள். இதை கூட யோசிக்க தெரியாத அரசு & அதிகாரிகள்.
Rate this:
Share this comment
Cancel
P. SIV GOWRI - Chennai,இந்தியா
16-அக்-201411:54:27 IST Report Abuse
P. SIV GOWRI அம்மா இல்லாததால் கேரளா அரசுக்கு குளிர் விட்டு போய் விட்டதா ?
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
16-அக்-201411:04:51 IST Report Abuse
Vaishnavi.Ne அம்மா இல்லாததால் கேரளா அரசுக்கு குளிர் விட்டு போய்விட்டதோ?
Rate this:
Share this comment
Cancel
Barakathulla - Singapore,சிங்கப்பூர்
16-அக்-201411:04:32 IST Report Abuse
Barakathulla அம்மா வரதுக்குள் எதாவது பண்ணிடலாம் என்று கேரளா நினைக்குதா ???
Rate this:
Share this comment
Cancel
Anand Rao.v - Chennai,இந்தியா
16-அக்-201410:29:14 IST Report Abuse
Anand Rao.v முல்லை பெரியாறு நீர் பிடிப்பு பகுதியையும், அதன் பகுதிக்கு தமிழ் நாட்டிலிருந்து சென்று வரும் பாதையையும் தமிழ் நாட்டுக்கு சேருமாறு எல்லைப்பகுதியை திருத்தி அமைப்பதொன்றே தீர்வு.
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
16-அக்-201410:00:01 IST Report Abuse
Rajasekaran Palaniswamy முட்டாள் அரசியல்வாதிகள். மலையாளி கொலையாளி என்ற வாசகத்தை இவர்கள் பலமுறை உண்மையாக்கி உள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Bangalore,இந்தியா
16-அக்-201408:40:38 IST Report Abuse
Raja தமிழக முதல்வர் அரசு வேலை எதையும் செய்யவில்லை என்றார்களே. அடுத்த மாநிலத்தின் மீது தைரியமாக வழக்கு தொடரும் அளவுக்கு இருக்கிறாரே? நேற்று கூட டெங்கு போன்ற கொசுக்களால் பரவும் கொடும் காய்ச்சல் வந்தால் அதற்கு என்ன செய்யவேண்டும், உள்ளாட்சி அதை எப்படி கண்காணிக்க வேண்டும், மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை என்ன செய்ய வேண்டும் என்று விரிவான ஒரு அரசு அறிக்கை வெளியிடப்பட்டதே. மேலும் ஆந்திர அரசுக்கு நிவாரண நிதி ஒதுக்கியது, தேவைப்படும் மின்சார உபகரணங்களை துரிதமாக அனுப்பியது போன்ற வேலைகள் பிறகு யார் செய்ததாம்?
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
16-அக்-201405:59:22 IST Report Abuse
அறிவா லயதாத்தா மத்திய அரசு தலையிட்டு சரி செய்ய வேண்டிய வேலையை கோர்ட் செய்ய வேண்டியுள்ளது எல்லாவற்றிக்குமே கோர்ட் என்றால் மத்திய அரசு எதற்கு ?
Rate this:
Share this comment
Raganz - Chennai,இந்தியா
16-அக்-201409:14:02 IST Report Abuse
Raganzதெருவ கூட்டுறதுக்கு.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை