ராம்ஜி நகர் விரைந்தது மதுரை தனிப்படை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராம்ஜி நகர் விரைந்தது மதுரை தனிப்படை

Added : அக் 18, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:மதுரையில், 10 ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு, கவனத்தை திசைதிருப்பி லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கும் கும்பலை பிடிக்க திருச்சி ராம்ஜி நகருக்கு போலீஸ் தனிப்படை விரைந்துள்ளது.கோவை சூலுாரைச் சேர்ந்தவர் வெடிமருந்து உற்பத்தி ஆலை மேலாளர் சவுந்திரராஜன்,42. வசூல் தொகை ரூ.3 லட்சத்துடன் மதுரை வக்கீல் புதுத்தெருவுக்கு காரில் வந்தார். மொபைல் போன் சர்வீஸ் செய்ய சென்றிருந்தபோது, 10 ரூபாயை கீழே சிதறவிட்டு அவரது கார் டிரைவரின் கவனத்தை திசைதிருப்பி பணம் மற்றும் லேப்டாப்பை ஒருவர் திருடிச்சென்றார்.அவரது உருவம் தெளிவற்ற நிலையில் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்நிலையில், நேற்றுமுன்தினம் டி.கல்லுப்பட்டியில் சிவகாசி பைனான்சியர் மணிவேலிடமும் இதே ஸ்டைலில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. திருச்சி ராம்ஜிநகரைச் சேர்ந்த சிலர், இதே ஸ்டைலில் திருடுவது வழக்கம் என போலீசார் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X