தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்: ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
தமிழக நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் 20 லட்சம்:  ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும் எண்ணிக்கை

சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளை, மாவட்ட நீதிமன்றங்களில் உரிமையியல், குற்றவியல் வழக்குகளின் தேக்கம் கடந்த, 2013ல், 18 லட்சத்தை தாண்டிய நிலையில், 2014 ஆகஸ்ட் வரை, 20 லட்சமாக அதிகரித்துள்ளன.


வழக்குகளின் எண்ணிக்கை :

தமிழகத்தில், சென்னையில், 113, பிற மாவட்டங்களில் 855 என, மொத்தம், 988 நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. தமிழக சட்டசபையில், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் நடந்த நீதிமன்றங்கள் மற்றும் சிறைத்துறை மானியக் கோரிக்கையின் போது, வெளியான கொள்கை விளக்க குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்ட தகவலின் படி, நடப்பு, 2013 மார்ச் வரை, 18 லட்சத்தை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற முதன்மை ஆணையத்தில் வழக்குகளின் தேக்க விவரம்:கடந்த, 2012ல், 3,23,241 உரிமையியல் வழக்குகள் நிலுவையாக இருந்த நிலையில், 1,31,320 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 1,23,939 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்ட போதிலும், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 3,30,622 ஆக உயர்ந்தன.குற்றவியல் வழக்குகளை எடுத்துக் கொண்டால், கடந்த, 2012ல், 41,834 நிலுவையில் இருந்த நிலையில், 51,228 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 48,646 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால், வழக்குகளின் எண்ணிக்கை, 44,416 ஆக உயர்ந்தன. இதுவே, 2013ல், 54,795 புதிய வழக்குகள் இணைந்த நிலையில், 56,313 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 42,898 ஆக அதிகரித்தது.


மதுரை:

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளின் தேக்க விவரம்: நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 92,595 ஆக உயர்ந்தன. 2012ல், உரிமையியல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 92,595 என்ற நிலையில், 58,905 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 45,053 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 1,06,447 ஆக உயர்ந்தன.கடந்த, 2013ல், 66,197 புதிய வழக்குகள் இணைந்தன. 49,417 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதால், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 1,23,227 ஆக உயர்ந்தன.குற்றவியல் வழக்குகளில், கடந்த, 2012ல் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 16,066 இருந்த நிலையில், 31,385 வழக்குகள் புதிதாக இணைந்தன. இதில், 28,562 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 18,889 ஆக உயர்ந்தன.

கடந்த, 2013ல், 31,770 புதிய வழக்குகள் இணைந்தன. 56,313 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 24,198 ஆக உயர்ந்தன. சென்னை, மதுரை உயர் நீதிமன்ற கிளைகள், மாவட்ட சார்நிலை நீதிமன்றங்களில், 2013 டிச., 31 வரை, 18,45,794 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நடப்பாண்டில் ஜனவரி துவங்கி, ஆகஸ்ட் வரையிலான, எட்டு மாதங்களில் இரண்டு லட்சம் வழக்குகள் தேங்கி உள்ளதால், நீதிமன்றங்களில் தேக்கம் அடைந்துள்ள வழக்குகளின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டி விட்டதாக நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்குகளின் தேக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி, செப்டம்பர் முதல் வாரத்தில், தமிழக சிறைகளில் நீதிபதிகள் நேரடியாக சென்று லோக் அதாலத் நடத்தி, ஒரே வாரத்தில், 5,000க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கியதோடு, 2,800 பேரை விடுவித்தனர்.இது போன்ற லோக் அதாலத்தை வரும், டிசம்பர் மாதத்திலும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி நடத்துவதற்கு, தமிழக நீதித்துறை, காவல் துறை திட்டமிட்டு வருகிறது.

- நமது சிறப்பு நிருபர் --

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (15)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mahalingam Laxman - Chapel Hill,யூ.எஸ்.ஏ
20-அக்-201400:51:00 IST Report Abuse
Mahalingam Laxman The Editor, It is waste of time to fix who is responsible for 3 crore cases pending whether, judiciary, advocates, government, plaintiff, defendant. tem, or law. Every body has contributed to this not in small measure. What corrective actions are needed. First the law should be amended that no more three adjournment to be given either plaintiff or defendant whether it is individual, group or government. Case must be decided on the facts of the case on the fourth hearing. Any one who file the case should file with all supporting documents. The advocate should certify that it is done so. The cases should be grouped more than ten year old, 5 to 10 year , 3 to 5 years old and Time should be fixed for each group. Separate court to deal with the old cases The justice delayed is justice denied . There may be cases where plaintiff/ defendant may not alive and the heirs have to carry on the cases one more chance given to them. It is waste of public money in carrying on the cases endlessly. There may be cases some body may suffer in jail because final verdict in appellate cases pending. All new cases filed must be disposed off in three months time. It is equally applicable appellate courts also. Laxman.
Rate this:
Share this comment
Cancel
christ - chennai,இந்தியா
19-அக்-201413:40:14 IST Report Abuse
christ ஒரு வழக்குக்கே 18 வருடங்களா வாய்தா வாங்கும் (கொடுக்கும் ) போது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகள் எப்படி குறையும் ?
Rate this:
Share this comment
Cancel
Rajasekaran Palaniswamy - georgia,யூ.எஸ்.ஏ
19-அக்-201409:29:27 IST Report Abuse
Rajasekaran Palaniswamy தேங்கும், அதிகரிக்கும் வழக்குகளைப்பற்றி நீதி துறைக்கு சிறிதும் கவலை இல்லை.அப்படி இருந்திதிருந்தால் பிரிட்டிஷ் காலத்து நடைமுறையான கோடை விடுமுறை,, குளிர்கால விடுமுறை என்று ஆண்டின் பாதி நாட்களை வீணடிக்கமாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
krishnamoorthy - chennai,இந்தியா
19-அக்-201409:19:47 IST Report Abuse
krishnamoorthy சமிபத்தில் ஜூலையில் நடந்த லோக் அதாலத்தில் தமிழகத்தில் சுமார் 3 லட்சம் வழக்குகள் முடிவுக்கு வந்ததாக தகவல் வந்ததே, அப்பா அது உண்மையில்லையா? வெறும் விளம்பரமா?' உண்மையெனில், தகவல் ஏன் சரிசெய்யப்படவில்லை.?
Rate this:
Share this comment
Cancel
arokiyapuram raman - ayothi,பெல்ஜியம்
19-அக்-201406:18:02 IST Report Abuse
arokiyapuram raman நீதிமன்றத்தின் பொறுப்பற்ற நிலை, வக்கீல் சுயநலம், நீதிபதிகளின் அக்கறை இன்மை, அரசின் கவனம் இல்லாமை, மொத்தத்தில் இந்திய சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
19-அக்-201405:27:10 IST Report Abuse
Kovai Subbu Over 3 crore cases pending in courts in India. Mar 7, 2013 Over three crore cases are pending in various courts across the country and this "unaccep level" can be reduced by appointment of more judges and modernisation, law minister Ashwani Kumar said today. "Without doubt, it is true that a large number of cases are pending in courts. The number is over three crore. This is a matter of deep concern. This situation needs to be addressed. The unaccep level should be reduced," he said in the Lok Sabha during Question Hour. He claimed that several steps were being taken to deal with this challenge, including expediting the appointment of judges, establishment of e-courts, computerisation of court records, fast track courts and other administrative mechanisms. The minister said all the high courts and about 11,000 lower courts have been computerised. "A silver lining has been that the Supreme Court has disposed of a large number of cases," Kumar said, adding that 66,569 cases were pending in the apex court as on January 31, 2013. Of these, 21,862 matters are up to one year old and are thus not arrears. - PTI
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201411:37:43 IST Report Abuse
Kasimani Baskaranமானமில்லாதவர்கள் வழக்குப்போடும் பொழுது மற்றவர்கள் வழக்குப்போட தயங்கமாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
19-அக்-201405:25:22 IST Report Abuse
Kovai Subbu தமிழ்நாட்டில் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகள் 20 லட்சம். இந்தியா முதுவதும் நீதிமன்றங்களில் 3 கோடிக்கும் அதிகமான வழக்குகள் தேங்கி இருக்கின்றனவாம். இதில் பலர் சிறைகளில் விசாரணை கைதிகள் என்று பல வருடங்களாக வாடுகிறார்கலாம். மத்திய அரசின் ஒரு ஆய்வு கூறுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
19-அக்-201403:36:33 IST Report Abuse
Sekar Sekaran பின்னே இருக்காதா..ஏதாவது ஓர் தொண்டர் பிளக்ஸ் போர்டு வைத்து விட்டால்..அதனை கூட பெரிதாக்கி திமுக ஆதரவு வழக்கறிஞர்கள் என்கிற போர்வையில் அதனை அவசர வழக்காக எடுத்துகொண்டு பெரிதாக்கி காட்டுகின்ற முனைப்பு..இப்படியே செய்துகொண்டிருந்தால்..வழக்கு எண்ணிக்கைகள் கூடாமல் என்னாகும். இதுபோன்ற பொதுநல வழக்குகள் என்கிற பெயரில் விளம்பரம் தேடுகின்ற ஒரு சிலரின் செயல்கள் இறுதியில் கோர்ட்டின் மீது பழிவிலும். பொதுநல வழக்கு தொடர்வோருக்கு எப்படி பணம் வருகின்றது என்கிற மூலத்தை ஆராய்ந்து கண்டித்தால்..நிலுவையில் உள்ள வழக்குகள் குறைய நேரிடும்..செய்யுமா கோர்ட்..?
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201406:06:41 IST Report Abuse
Kasimani Baskaranஉங்களுக்கே வழக்குதொடர பணம் இருக்கும் பொழுது பொதுநல வழக்குதொடருபவனுக்கு பணம் இருக்காதோ?...
Rate this:
Share this comment
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201406:22:09 IST Report Abuse
Kasimani Baskaranஊழலுக்கெல்லாம் வழக்குப் போடமுடியாதபடி சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும். குறிப்பாக அதிகபட்சமாக ஒரே ஒரு நீதிபதி விசாராணை நடத்தலாம். விவரங்களின் ரகசியத்தை காத்தால் வழக்குக்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும்....
Rate this:
Share this comment
Moo.Devi7402 - Chennai Iruppu Kodanaadu,இந்தியா
19-அக்-201412:52:30 IST Report Abuse
Moo.Devi7402சொமபு சேகரு. அரசின் செயல்பாட்டை விமர்சனம் பன்னுறவன்களே இருக்கக்கூடாதுன்னு எல்லார் மேலயும் மான நஷ்ட வழக்கு போடும் மூடர் கூட்டமும் ஒழியும் வரை இந்த தேக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படி எதுக்கெடுத்தாலும் மானமே இல்லாத போது அது வேற போச்சு போச்சுன்னு வழக்கு போடுறவங்கள புடிச்சு உள்ள பட சொல்லுமா கோர்ட்டு.செய்யுமா?செய்யுமா?...
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
19-அக்-201401:30:54 IST Report Abuse
Ab Cd அதை பற்றியெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை, எங்கள் ஜாமீன் வழக்கை மட்டும் அவசர அவசரமாக விசாரித்தால் போதும்
Rate this:
Share this comment
Moo.Devi7402 - Chennai Iruppu Kodanaadu,இந்தியா
19-அக்-201412:54:18 IST Report Abuse
Moo.Devi7402நன்னா சொன்னேள் போங்கோ....
Rate this:
Share this comment
Moo.Devi7402 - Chennai Iruppu Kodanaadu,இந்தியா
19-அக்-201412:55:39 IST Report Abuse
Moo.Devi7402நன்னா சொன்னேள் போங்கோ. அவா அவாளுக்கு அவா அவா அவசரம். அதை அவா அவா நன்னா செஞ்சு தருவா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.