படிப்போடு அறிவியல் சாதனை படையுங்கள்:கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அறிவுரை| Dinamalar

தமிழ்நாடு

படிப்போடு அறிவியல் சாதனை படையுங்கள்:கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் அறிவுரை

Added : அக் 19, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்தூர்:""மாணவர்கள் படிப்போடு அறிவியல் சாதனைகளையும் படைக்க வேண்டும் ,'' என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் தெரிவித்தார்.
கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். பெண்கள் கல்லூரியில் நடந்த நம்ம ஊரு விஞ்ஞானி நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புகளை ஆய்வு செய்து சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசு வழங்கிய அவர் பேசியதாவது:
இந்தியாவின் மங்கள்யான் விண்கலம் மூலம் செவ்வாய்கிரகத்தில் நீர் இருப்பதை கண்டு பிடித்துள்ளோம். இதன் மூலம் இந்தியர்கள் அறிவிலும், அறிவியலிலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை உலக்கு உணர்த்தப்பட்டுள்ளது. மாணவர்கள் படிப்பில் சிறந்தால் மட்டும் போதாது, சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகளை செய்து ஒழுக்கத்தால் சிறந்து அறிவியல் சாதனைகளையும் படைக்க வேண்டும் ,'' என்றார். தேசிய தொழில் நுட்ப ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி கழக இயக்குனர் டாக்டர் மோகன், நடிகர் தாமு பேசினர்.
சிவகாசி ஜேசிஸ் மெட்ரிக்., மேல்நிலை பள்ளி மாணவர் ஏ.ஆர்.ரித்திக் சசில் கண்டு பிடிப்பு முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டு அப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
இரண்டாம் பரிசுக்கு டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலை பள்ளி மாணவர் பொன்ராஜ், ஏ.சிவராமன், பாப்பையநாயக்கன்பட்டி எஸ்.கே.வி., மேல்நிலை பள்ளி மாணவர் வெங்கட்ராம், குருசுதாகரன் கண்டுபிடிப்பு தேர்வு செய்யப்பட்டு அவர்களது பள்ளிகளுக்கும் 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
கல்லூரி தலைவர் வி.பி.எம்.சங்கர் தலைமை வகித்தார். துணைத் தலைவர் தங்க பிரபு முன்னிலை வகித்தார். முதல்வர் ராஜசேகர் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை