இனி பாலைவனமாகும் பூமி!| Dinamalar

இனி பாலைவனமாகும் பூமி!

Added : அக் 20, 2014 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
இனி பாலைவனமாகும் பூமி!

நம் நாட்டைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் உள்ள மழைக் காடுகளில் தான் பல்லுயிரியம் செழித்துக் காணப்படுகிறது.தமிழகத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட பாலுாட்டி வகைகள், 400-க்கும் மேற்பட்ட பறவை வகைகள், 160-க்கும் மேற்பட்ட ஊர்வன வகைகள், 12,000-க்கும் மேற்பட்ட பூச்சி வகைகள், 5,000-க்கும் மேற்பட்ட தாவர வகைகள், 10,000-க்கும் மேற்பட்ட சங்கு, சிப்பி, கடல் வாழ் உயிரின வகைகள் உள்ளன.

தேவைக்கு இயற்கையைப் பயன்படுத்தாமல் பேராசைக்கு இயற்கையைச் சுரண்ட ஆரம்பித்த பிறகுதான், உணவைக் கொஞ்சமாகவும், மாத்திரைகளை அதிகமாகவும் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உருவானது. இயற்கை ஒரு சிலந்தி வலையைப் போன்றது. ஒரு இழையைத் தட்டினாலும், மொத்த இடத்திலும் அதிர்வுகள் எதிரொலிக்கும்.உலகெங்கும் பல்லுயிரியத்தைக் காக்க பல்வேறு அமைப்புகள் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. பல்லுயிரியப் பகுதிகள் என அறிவிக்கப்பட்டு அதிமுக்கியத்துவம் தரப்படுகிறது. ஐ.யு.சி.என்., எனும் அமைப்பு, ஆண்டுதோறும் அழியும் நிலையில் உள்ள உயிரிகளைப் பற்றி 'ரெட் டேட்டா' எனும் புத்தகத்தை வெளியிடுகிறது.வெப்ப நாடான இந்தியாவின் சிறப்பே 'பல்லுயிரியம்' என்கிற 'பயோடைவர்சிட்டி' தான். மரங்கள், செடி கொடிகள், பாலுாட்டிகள், ஊர்வன, பறப்பன, நீர்வாழ்வன, நீர்-நிலை வாழ்வன, பூச்சிகள், வளர்ப்புப் பிராணிகள் போன்ற பல்வேறு உயிரினங்களும் வாழத் தகுதியான பூமி நம்முடையது.நம்மைச் சுற்றி நன்மை மட்டுமே செய்யும் நண்பர்களைப் பற்றி தெரிந்து கொண்டால் தான், எதிர்கால சந்ததியினராவது அவற்றை காப்பாற்ற முன்வருவர்.


பாம்புகள் :

பூமியில் 3000 வகை பாம்புகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள 275 இனங்களில், நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகியவை மட்டுமே விஷத்தன்மையுடையன. நமது சுற்றுப்புறச்சூழலின் உணவுச்சங்கிலியில் முக்கிய இடம் வகிப்பவை பாம்புகள். மண்புழுவைப் போலவே விவசாயிகளின் நண்பர்கள்.விவசாயிகளின் வயலில் விளைந்தவற்றை அழிப்பது எலிகள் தான். ஒரு ஜோடி எலிகள் மூலம் ஆண்டுக்கு 800க்கும் மேற்பட்ட குட்டிகள் உருவாகின்றன. இவற்றை பாம்புகள் பிடித்து உண்பதால், பயிர்ச்சேதம் தவிர்க்கப்படுகிறது.


தேனீக்கள் :


தேனீக்கள் காணாமற் போனால் என்ன குடி முழுகிபோய்விடும் என்று கேட்பவர்கள், அடிப்படை அறிவியலை பள்ளிக்கூடத்திலேயே தவற விட்டவர்களாகத் தானிருக்க முடியும். மகரந்தச் சேர்க்கை மூலம்தான் இனப்பெருக்கமும், பயிர்கள் விளைவதும் நடக்கின்றன. மகரந்தச் சேர்க்கையின் 'மன்மத துாதர்கள்' தேனீக்கள்தான். விவசாயத்தில் மூன்றில் ஒரு பங்கு பயிர்வகைகள் தேனீக்கள் வந்து, மகரந்தச் சேர்க்கையை செயல்படுத்துவதையே நம்பியிருக்கின்றன.தேனீக்கள் அழிந்து கொண்டிருப்பது அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா என்று மேலை நாடுகளில் மட்டுமல்ல. விவசாயத்தையே நம்பியிருக்கக்கூடிய இந்தியாவிலும்தான். இவற்றின் எண்ணிக்கை குறைந்து போனால், அயல் மகரந்த சேர்க்கையும் குறைந்து போகும். உணவு உற்பத்தி குறைந்து மனித இனமும் அழியத் துவங்கும். சத்தில்லாத உணவுகளால் உடல்நலம் பாதிக்கும். தொற்றுநோய்கள் மனிதர்களை எளிதாகத் தாக்கும். பிறகு மானிட குலத்தின் கதி?தேனீக்கள் மட்டும் மண்ணிலிருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது என்கிறார், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். தேனீக்கள் மட்டுமல்ல, இந்தியாவின் பெரு நகரங்கள், சிறு நகரங்களிலும் சிட்டுக்குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இவை அழிவதற்குக் காரணம், பயிர்களைப் பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சிமருந்துகள் தான்.சிட்டுக்குருவிகள் போன்ற பறவையினங்கள் இருந்தாலே, பயிர்களை அழிக்கும் பூச்சியினங்களை உண்டு, அவற்றைக் கட்டுப்படுத்திவிடும். ஆனால் பறவைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி, நம் வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.


கொசுக்களின் எமன் :


தண்ணீர்ப் பூச்சிகள், வவ்வால், தட்டான், தலைப்பிரட்டைகளின் தலையாய பணி என்ன தெரியுமா? சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்களின் லார்வாக்களை உணவாகக் கொள்வது தான். பூச்சிக்கொல்லிகள் நமக்கு கெடுதல் தரும் பூச்சிகளை மட்டுமல்ல... நன்மை செய்யும் பூச்சிகளையும் அழிப்பது தான், சுற்றுச்சூழலுக்கு தீங்காகிறது.தரையிலும் தண்ணீரிலும் வாழக்கூடிய இயல்பு படைத்த தவளைகள் குறைந்து போனதே, கொசுக்கள் பெருகுவதற்கு காரணம். தண்ணீர் தேங்கும் இடங்களில் தான் கொசுக்கள் முட்டையிட, அவற்றை தலைப்பிரட்டைகள் உணவாக்கிக் கொள்கின்றன. கொசுக்கள் பிறப்பதற்கு முன்பே அவற்றின் கருவை அழிக்கும் தவளைகள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் நிற்கின்றன.


வவ்வால்கள் :


மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் பூச்சி, கொசு, வண்டு மற்றும் ஈக்களை வவ்வால்கள் உணவாக உட்கொள்கின்றன. சிறிய பழுப்பு நிற வவ்வால்கள், ஒரு மணி நேரத்தில் 600 கொசுக்கள் வரைப் பிடித்து உண்ணும். வாழை, மாம்பழம், கொய்யா, பேரீச்சை, அத்தி ஆகியவற்றை உண்பதன் மூலம் அயல் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகிறது. இவற்றின் கழிவுகளில் மிக அதிக நைட்ரஜன் மற்றும் பாஸ்பரஸ் உள்ளதால், சிறந்த உரமாகிறது. பல நாடுகளில் வவ்வால் கழிவுகள் சேகரிக்கப்பட்டு உரம் தயாரிக்கப்படுகின்றது.வவ்வால்களில் சில வகைகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக உயிர் வாழ்கின்றன. காடுகள் அழிக்கப்படுவதாலும் உலக அளவில் தற்போதுள்ள பருவநிலைக் கோளாறுகளினால் கோடிக்கணக்கான எக்டேர்களில் ஏற்படும் காட்டுத்தீயாலும், வவ்வால் இனங்கள் அழிவை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றன.''இந்த உலகம் மனிதனுடையது மட்டும் அல்ல. மனிதன் இயற்கையின் ஓர் அங்கமே. அதைச் சார்ந்துதான் மனிதன் வாழ முடியும்''. இந்த மகத்தான வாழ்வியல், வலையாகப் பின்னப்பட்டிருக்கிறது. இந்த வலையை மனிதன் பின்னவில்லை. மனிதன் இந்த வலையில் உள்ள சிறிய நுாலிழை மட்டுமே. மனிதனின் பேராசைமிக்க செயல்கள், வெறும் புதைகுழிகள் நிறைந்த பாலைவனமாக, ஒருநாள் பூமியை மாற்றிவிடும்.
-எம்.ராஜேஷ்,
உதவி பேராசிரியர்,
அமெரிக்கன் கல்லுாரி,
மதுரை, 94433 94233.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajarajan - Thanjavur,இந்தியா
23-அக்-201417:08:36 IST Report Abuse
Rajarajan நல்லது. இதை விளைநிலத்தை அழித்து, பட்டா நிலமாக மாற்றும், கேடுகெட்ட அரசாங்கத்திடம் தெரியபடுத்துங்கள் ப்ளீஸ்.
Rate this:
Share this comment
Cancel
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
20-அக்-201416:22:17 IST Report Abuse
Dr.  Kumar This was great article. Educative, informative and caution for the greedy and for the society today. Thank you Professor Raju. Dinamalar, Thanks for this article. As I have no opportunity to learn and use Tamil here, Dinamalar is my school. I read every page of this paper.
Rate this:
Share this comment
Cancel
Sathiyamoorthi Madhavan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-201415:49:06 IST Report Abuse
Sathiyamoorthi Madhavan வணங்குகிறேன் ஐயா. மிகவும் அருமையான பதிவு. இந்த பதிவு ஒரு நிகழ்ச்சியாக எல்லா சேனல்களிலும் காண்பிக்க வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thailam Govindarasu - Manama,பஹ்ரைன்
20-அக்-201415:16:11 IST Report Abuse
Thailam Govindarasu நான் ஓட்டுனராக பணிபுரிகிறேன். காலையில் தினமும் 500 பறவைகளுக்கு (சிட்டு, புல் புல் ,மணிப்புறா) உணவு,நீர் திறந்த வெளியில் கொடுக்கிறேன்.தேனீ வளர்க்கிறேன் அதன் உணவுக்கு பூச்செடிகள் வளர்க்கிறேன்.சிட்டுகுருவிக்கு துளசிப்பூவின் விதைகள் ரொம்ப பிடிக்கும். சுற்றுப்புறத்தை பாதி சுத்தப்படுத்தி கொண்டு இருந்தேன். மோடியின் அறிவிப்பிலிருந்து முழு சுத்தம் செய்கிறேன். இது எனது ஆத்மா சுத்தத்துக்காக. இதில் எனக்கு சம்பளம் கிடைக்காது, அன்பும், இனம்புரியா சந்தோசமும் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
20-அக்-201414:55:17 IST Report Abuse
Snake Babu நன்றி தினமலருக்கு மற்றும் ராஜேஷ் அவர்களுக்கும், இயற்கை விழிப்புணர்வை விரிவு படுத்துவோம். இதை துண்டு பிரசுரமாக வினியோகித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும், அது எங்களுடைய வேலை, நாங்கள் செய்கிறோம். நன்றி. வாழ்க வளமுடன்.
Rate this:
Share this comment
Cancel
P Ananda Kumar - Bangalore,இந்தியா
20-அக்-201414:10:27 IST Report Abuse
P Ananda Kumar We will do better from our side to improve the nature to the right path. And we will be part of this. Once again thanks to you for this help full information sir.
Rate this:
Share this comment
Cancel
Yuvi - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
20-அக்-201414:02:54 IST Report Abuse
Yuvi நினைத்துப் பார்த்தால், பயமாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Faithooraan - Thondamaan Puthukkottai,இந்தியா
20-அக்-201413:37:32 IST Report Abuse
Faithooraan I sauté Professor E. Rajesh. What a great environment theme rich article. Thanks to Dinamalar for publishing.
Rate this:
Share this comment
Cancel
sivakumar - bodinayakanur,இந்தியா
20-அக்-201412:57:18 IST Report Abuse
sivakumar நல்ல கருத்து அனைவரும் ஏற்றுக்கொண்டு நாமும் இதே விவரங்களை நம்மால் முடிந்த ஏனைய நபர்களுக்கு விளக்கி கூறினால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...............
Rate this:
Share this comment
Cancel
Kanagasabapathi Karuppiah - Chennai,இந்தியா
20-அக்-201412:32:52 IST Report Abuse
Kanagasabapathi Karuppiah மனிதனின் பேராசையால் மானுடமே அழிந்து விடும் போல் உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை