மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு : சாத்தூர் கோர்ட்டில் கைதி அட்டூழியம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு : சாத்தூர் கோர்ட்டில் கைதி அட்டூழியம்

Added : அக் 21, 2014 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
மாஜிஸ்திரேட் மீது மனித கழிவு வீச்சு : சாத்தூர் கோர்ட்டில் கைதி அட்டூழியம்

சாத்தூர் : சாத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட விசாரணைக் கைதி, உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட் மீது வீசினார்.விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே, மேலத்தாயில்பட்டியைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 38. இவர், விவசாயக் கிணற்றில் மோட்டார் பம்ப் திருடிய வழக்கில் விருதுநகர் சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக,நேற்று காலை, சாத்தூர் ஜே.எம்.2 கோர்ட்டில், மாஜிஸ்திரேட் மாரியப்பன் முன், பாக்யராஜை போலீசார் ஆஜர்படுத்தினர். எஸ்.ஐ., சதீஷ்பிரபு கோர்ட்டில் ஆஜராகாததால், வழக்கு விசாரணையை, 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகவும், பாக்யராஜை மீண்டும் சிறையில் வைக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அப்போது, பாக்யராஜ், ''என்னை உறவினர்கள் ஜாமினில் எடுக்கவில்லை. எனக்காக வாதாட வழக்கறிஞரும் இல்லை. வழக்கை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்,'' என, மாஜிஸ்திரேட்டிடம் வலியுறுத்தினார். இதற்கு மாஜிஸ்திரேட், ''இலவச சட்ட உதவி முகாமை அணுகி வழக்கறிஞர் ஏற்பாடு செய்து கொள்ளலாம்,'' என்றார்.
இதனிடையே, உள்ளாடையில், பிளாஸ்டிக் பையில் மறைத்து வைத்திருந்த மனிதக் கழிவை மாஜிஸ்திரேட்டை நோக்கி, பாக்யராஜ் வீசினார். இது, மேஜை மற்றும் மாஜிஸ்திரேட் உடையில் பட்டது. பாக்யராஜை, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்று, போலீசார் விசாரிக்கின்றனர்.கைதியை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போது, முழுமையாக சோதனையிட வேண்டியது போலீசாரின் கடமை. போலீசார், இதை பொருட்படுத்துவதில்லை. கைதிகள் வேறு பொருட்களை வைத்துள்ளனரா, என்பதை கண்டறிய வேண்டும். போலீசாரின் அஜாக்கிரதையால், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Capt JackSparrow - Madurai,இந்தியா
21-அக்-201420:58:28 IST Report Abuse
Capt JackSparrow என்னடா தம்பி.....உனக்கு வேற ஆயுதம் எதுவும் கிடைக்க வில்லையா? நீதிபதி ஐயாவுக்கு நாலு நாளைக்கு சோறு தண்ணி இறங்காது. உண்மையில் சொல்ல வேண்டுமானால், இவனுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும். திட்ட மிட்டு அவமதித்த நோக்கதிற்காக.
Rate this:
Share this comment
Cancel
Tamilan - Chennai,இந்தியா
21-அக்-201413:52:46 IST Report Abuse
Tamilan விருதுநகரில் எல்லா பகுதிகளிலும் மனித கழிவுகள் இருப்பது சகஜம்......
Rate this:
Share this comment
Cancel
xavier - thoothukudi,இந்தியா
21-அக்-201411:39:22 IST Report Abuse
xavier மோட்டார் பம்பைத் திருடிய வழக்கு ஜாமீன் எடுக்க ஆள் இல்லையாம். அரசியலில் நுழைய வேண்டியது தானே? ஜாமீனும் எடுத்து ஊர்வலமாக மலர் தூவி அழைத்தும் வருவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Thillainathan Seetharaman - Coimbatore,இந்தியா
21-அக்-201410:08:03 IST Report Abuse
Thillainathan Seetharaman போலீஸ் உங்கள் நண்பன் என்று தானே கூறுகிறார்கள், நண்பரை யாராவது செக் செய்யவர்களா ??? பாவம் நீதிபதி, நடைபெறும் சம்பவங்கள், மக்களுடைய நிலைப்பாட்டு, வரும் காலங்கள் -கவலை கொள்ள வைக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Sutha - Chennai,இந்தியா
21-அக்-201407:17:31 IST Report Abuse
Sutha நம் இந்திய ஜனநாயகத்தில் குற்றவாளிகளுக்கு சட்டத்தை கண்டோ,அல்லது காவல்துறையினர் மீதோ பயம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் வருங்காலத்தில் இதனால் நாட்டின் முன்னேறற்றம் மிகவும் கவலை உண்டாக்கும்.
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
21-அக்-201406:05:06 IST Report Abuse
JAIRAJ நான் திருடவும் செய்வேன். என்னை விசாரிக்கவும் கூடாது என்பது தற்காலத் திருடர்களின் வாதம். திருடுவதற்கு முன்பே, திருடினால் இப்படீல்லாம் தண்டனை கிடைத்தால் என்னசெய்வது என்று யோசித்து இருந்தால் .........எல்லாம் நம் அரசியல் வாதிகளின் ஊழல், லஞ்சம், ஸ்டேஷனுக்குச் சென்று அழைத்து வருதல் தான் காரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை