வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்| Dinamalar

வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்

Added : அக் 26, 2014 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
வட்டார வழக்கியலும் வள்ளுவர் வரலாறும்

இலக்கியம், வரலாறு, பழக்கவழக்கங்கள், கல்வெட்டு, இடப்பெயர் ஆய்வுகளில் உலக பொதுமறையாம் திருக்குறளை தந்த திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. முட்டத்தை அடுத்த திருநாயனார்குறிச்சியில் பிறந்து, கொற்கையில் பாண்டிய மன்னன் வழுதியின் அவையிலே தாம் இயற்றிய திருக்குறளை அரங்கேற்றி, அதை தமிழ் வளர்த்த மதுரையில் அறிமுகம் செய்து பின் சென்னை மயிலை சென்று மறைந்தார் என்பது ஆய்வுகளின் முடிவு.

திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மண் என்பதை தமிழக அரசின் மாவட்ட குறிப்பேடு மற்றும் தமிழரசு பத்திரிக்கை வெளியிட்டுள்ளன. வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் வரலாற்றை ஆய்வு செய்ததில் இந்த ஆய்வு உறுதிபடுத்தப்பட்டுள்ளது.வட்டார வழக்கியலில் பேச்சு வழக்கு முன்னிலை வகிக்கிறது. வட்டார பேச்சு வழக்குகளை திசை மொழிகள் என்றும் கூறுவர். ஓர் இடத்தார் அல்லது ஓர் இனத்தார் அல்லது ஒரு கூட்டத்தை சார்ந்தவர்கள் தமக்குள் தங்குதடையின்றி இயல்பாக பேசும் மொழியே திசை மொழி. வட்டாரம் தோறும் மொழிவேறுபாடுகளை காணலாம். இதுகுறித்த ஆய்வை திசை வழக்கியல் என்பர். ஒருவன் பேசும் மொழியை வைத்து அவன் எப்பகுதியை சேர்ந்தவன் என கூறலாம். இந்த அடிப்படையில் எழுந்தது தான், 'உன் பேச்சே உன்னை காட்டி விடும்' என்ற பைபிள் வாக்கு. இதே கருத்தை திருவள்ளுவரும், 'நிலத்தில் கிடந்தமை கால் காட்டும், குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல்,' என குறிப்பிட்டுள்ளார்.'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்,' என்பது குறள். அதில் 'தாழ்' என்ற சொல் குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளது.கடலுக்கு அடியில் முத்தெடுக்கும் வழக்கம் தென்பாண்டி நாட்டில் உண்டு. இதை முத்துப்படுகை என்பர். கன்னியாகுமரியிலும், கொற்கையிலும் எடுத்த முத்துக்கள் தான் உலகளவில் பிரசித்தி பெற்றவை என்கிறார் குமரகுருபரர். மூச்சை அடக்கி முத்து எடுப்பதை முத்துக்குளியல் என்பர். அதை திருவள்ளுவர், 'களித்தானை காரணம் காட்டுதல் கீர்நீர்க் குளித்தானை தீத்துரீ இயற்று,' என்றார். 'குறியாளிகளை' தான் திருவள்ளுவர் 'குளித்தானை' என்றார்.


குறளில் மீனவர் சொற்கள் :

முட்டம் மீனவர்கள் எலும்பை 'எல்' என்பர். 'எல்' என்ற சொல்லை திருவள்ளுவர், 'என்பு' என்கிறார். அன்புடை அதிகாரத்தில் 'என்பு' என்ற சொல்லை திருவள்ளுவர் நான்கு இடங்களில் பயன்படுத்தி இருக்கிறார். 'அன்பு இலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' 'அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆரூயிர்க்கு, என்போது இயைந்த தொடர்பு' என அறியலாம். மீனவர்கள் பயன்படுத்தும் பல சொற்கள் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன. கடல் அடியில் காணப்படும் பாறை போன்ற நிலத்தை 'பார்' என மீனவர் குறிப்பிடுவர். இதை 'இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும் பார் தாக்கப்பட்டு விடும்' என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.நெடுந்தூரகடலை மீனவர்கள் 'சேல்' என்பர். 'சிறுமை நமக்கொழியச் சேட் சென்றார் உள்ளி, நறுமலர் நாணிககண்' எனவும் 'ஒரு நாள் எழுநாள் போல் செல்லும் சேட் சென்றார், வருநாள் வைவத்து ஏங்குபவர்களுக்கு' எனவும் குறிப்பிடுகிறார் திருவள்ளுவர்.'மேவல்' என்ற சொல் விரும்புதல் என்ற பொருளிலும், 'மேவன' என்ற சொல் விரும்பியன என்ற பொருளிலும், 'மேவார்' என்ற சொல் விரும்புவோர் என்ற பொருளிலும், 'மேவற்க' என்ற சொல் விரும்பாது விடுக என்ற பொருளிலும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளன.


நெய்தல் தொழில் செய்தாரா :

அப்பா வரும்... அம்மா பேசும்... என்பது குமரி மாவட்ட மக்களின் பேச்சு வழக்கு. இந்த அடிப்படையில் 'இதனை இதனால் இவன் முடிக்கும்,' என குறளில் குறிப்பிட்டுள்ளார் திருவள்ளுவர்.கன்னியாகுமரி மீனவர்கள் மீன் பிடிக்க பயன்படுத்தும் தூண்டிலில் ஜரிகையை இணைப்பது வழக்கம். இதை திருவள்ளுவர் 'தூண்டிற்பொன்' என கூறுகிறார்.திருவள்ளுவர் நெய்தல் தொழில் செய்து வந்தார் என்ற கட்டுக்கதை உண்டு. வட்டார வழக்கியல் நோக்கில் திருவள்ளுவர் வரலாறை ஆராய்ந்தால், அவர் நெய்தல் தொழில் செய்யவில்லை. நெய்தல் நிலத்தில் வாழ்ந்தார் என அறியலாம்.


உழவுக்கு முன்னுரிமை :

உழவு, கடல் தொழிலுக்கு வள்ளுவர் முக்கியத்துவம் கொடுத்தாலும், பல்வேறு தொழில்களை குறளில் குறிப்பிடுகிறார். எவ்வளவோ தொழில்களை குறிப்பிடும் திருவள்ளுவர் நெசவு தொழில் பற்றி பாடவே இல்லை. உடுக்கை, உடுப்பது என்ற சொற்களை திருவள்ளுவர் பயன்படுத்தியுள்ளதால், அவர் காலத்தில் நெசவு தொழில் சிறப்புற்று விளங்கியது என அறியலாம். ஆனால் அத்தொழிலை பற்றி அவர் எங்கும் கூறவில்லை. உழவு தொழிலுக்கு முக்கியத்துவம் கொடுத்தது போல, வேறு தொழில்களுக்கு திருவள்ளுவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்' மற்றும் 'உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்' என்பதிலிருந்து அறியலாம். 'உழவு' என்ற சொல்லை ஆறு இடங்கள், 'ஏர்' என்ற சொல்லை மூன்று இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.


பத்து இடங்களில் கடல் :

கடல் என்ற சொல்லை திருவள்ளுவர் பத்து இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.திருவள்ளுவர் பிறந்த திருநயினார்குறிச்சியின் ஒரு பக்கம் முட்டம் கடல் பகுதி; நெய்தல் நிலம். மறுபக்கம் பெரிய குளம் நீர்பாசனம்; மருத நிலம். வள்ளுவ நாட்டில் நெய்தலும், மருதமும் இணைந்த பகுதியில் திருவள்ளுவர் வாழ்ந்துள்ளார்.குறிஞ்சி, முல்லையும் இணைந்த கிடந்த கூவைமலை பகுதிக்கு திருவள்ளுவர் அடிக்கடி சென்று வந்தார். இந்த நிலப்பகுதி தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறளில் குறிப்பிடுகிறார்.


நால்வகை நிலங்கள் :

திருக்குறளில் யானை எட்டு இடங்களில் இடம் பெற்றுள்ளது. புலி, மான், நரி, முயல், மயில் ஆகியவற்றையும் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். நால்வகை நிலங்களில் உள்ள தொழில்நுட்பங்களை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். தமிழகத்தில் நால்வகை நிலங்களும் உள்ள பகுதி குமரி மாவட்டம்.திருவள்ளுவர் குமரியில் பிறந்து வள்ளுவ நாட்டின் மன்னராக திகழ்ந்து, மகாவீரர், புத்தர் போல துறவியாகி நாட்டையும் வீட்டையும் துறந்து தென்பாண்டி நாட்டின் தலைநகரான கொற்கையில் திருக்குறளை அரங்கேற்றி, மதுரையில் அறிமுகம் செய்து, சென்னை மயிலை சென்று இலுப்பை மரத்தடியில் சமாதியானார் என்பது தான் வரலாறு. இவ்வாறு திருவள்ளுவரின் வரலாறு இன்றைய தமிழகத்தின் தென் எல்லையையும், வட எல்லையையும் இணைத்து நிற்கிறது.வட்டார வழக்கியல் அடிப்படையில் திருவள்ளுவர் பிறந்தது கன்னியாகுமரி மாவட்டம், மறைந்தது மயிலை என்பதை உறுதி செய்யலாம்.
-முனைவர் எஸ்.பத்மநாபன்,
வரலாற்று ஆய்வாளர்,
பத்திரிகையாளர்,
பொது செயலாளர்,
கன்னியாகுமரி வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வு மையம்,
நாகர்கோவில்
94432 75641

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
27-அக்-201419:30:04 IST Report Abuse
Sivagiri நல்ல கற்பனை . . திருக்குறளை உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அறிஞர்கள் அக்கு வேறு ஆணிவேராக ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் . . . ஒன்றிரண்டு வார்த்தைகளை வைத்து ரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சரித்திரத்தை கதை திரைக்கதை டைரக்சன் செய்து காண்பிப்பது . . . தான் மட்டும்தான் திருக்குறளை படித்திருப்பவர் போல கருத்துக்களை திணிக்கக்கூடாது . . . material witness இருக்க வேண்டும் . . . .
Rate this:
Share this comment
Cancel
Dynamo - Leiden,நெதர்லாந்து
27-அக்-201414:31:20 IST Report Abuse
Dynamo நல்லவேளை திருவள்ளுவர் "நாடார்" இனத்தை சேர்ந்தவர் அல்லது "வேளாளர்" இனத்தை சேர்ந்தவர் என்று சொல்லாமல் விட்டார்கள்.. சொல்லிருந்தால் திருவள்ளுவரை ஜாதி சங்க தலைவராக அறிவித்துவிடும் என் தமிழினம்..
Rate this:
Share this comment
Cancel
Anand - Tirunelveli,இந்தியா
27-அக்-201412:01:59 IST Report Abuse
Anand நம்பிக்கையூட்டும் உங்கள் ஆராய்ச்சி முடிவுகள்......... தொடரட்டும்... வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
JAIRAJ - CHENNAI,இந்தியா
27-அக்-201411:45:39 IST Report Abuse
JAIRAJ இனிமேல் என்ன ..............அவர் பிறந்த ஊரில் ஒரு பெரிய சிலை அமைத்து அதற்கு பூஜை வகைகள் செய்து அதில் வரும் வருமானத்தால் பிற்காலத்தில் பதற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இவர் சொல்வது மாதிரி இன்னொரு ஆய்வாளர், என்பு என்பதற்கும், தாழ் என்பதற்கும் விளக்கம் கூறி அதன் காரணமாக திருவள்ளுவர் எங்கள் ஊரில் பிறந்தவர் என்று அவர் வாதத்தை முன் வைப்பார். அரை குறை அறிவாளிகள், தாழ் என்பது எங்கள் ஊருக்கே சொந்தம் சந்தேகம் என்றால் பதிவுசெய்த வகைகளைக்கூட காட்டத் தயார் என்று சொல்லி ( TOKEN ADVANCE) முன் பணத்திற்கு முன்பணமாக இதோ பார், என்று சொல்லி," மணிசித்திர தாழ் " என்ற படத்தின் பெயரைக்காட்டி, தாழ் என்பது எங்கள் வட்டார மொழி ஆகையால் திருவள்ளுவர் சொன்னது எங்கள் மொழிதான். அவர் எங்களுக்கே சொந்தம் என்று உரிமை கொண்டாடுவார்கள். உண்மையும் அது தான். ஆரல் வாய் மொழி தாண்டியும் கேரளா எல்லை தானே................ ஒருகாலத்தில். மேலும், வட்டார மொழிஎல்லாம் இக்காலத்தில் எடுபடாது. மக்கள் எல்லோரும் எல்லா இடத்திலும் கலந்து விட்டார்கள். மக்கள் பேச்சு மொழியே மாறிவிட்டது. வயல்களெல்லாம் கட்டடமாக மாறுவதற்கு முன்பாக, அதுவும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பாக வேண்டுமானால், நாம் அறிந்த வட்டார மொழியை வைத்து ( கிராமப் பஞ்சாயத்து நடப்பதுபோல், வேலையில்லா மனிதர்கள் ஊர்வம்பு பேசுவதுபோல் ) வாதாடலாம். இன்று, அது போன்று வட்டார மொழிகள் வழக்கொழிந்து மரணித்து விட்டது. மிகச் சிறு உதாரணம் சொல்லவேண்டும் என்றால் கூட..........( ஏல பாண்டி நீயாலே .....................என்று சீவலப்பேரி பாண்டியில் அழைப்பது போலும், ஏலே, யாரு மவன்லே நீ .........அம்பி நீரு எங்கிருந்தீறு ..................ஆளையே காங்கலையே என்று சாதாரண பேச்சு வழக்கே ஒழிந்து விட்டது ) நடைமுறை வழக்காகக் காட்ட முடியாது. பள்ளி மாணவர்கள் சொல்லும் ' சார்வாள் ' கூட வழக்கொழிந்து போய்விட்டது. சுமார் 50 வருடத்திற்கு முன்னால் குமரி மாவட்டத்து மக்கள் தங்கள் குழந்தைகள் வகுப்பில் தேறிய செய்தியை சொல்கையில், ' மவன் ஜெயிச்சுட்டான் ' என்று சொன்னதுபோல் யாரும் தற்காலத்தில் சொல்வது இல்லை. சமீபகாலத்துக் கதையே இவ்வாறு இருக்கையில், திருவள்ளுவர் வாழ்ந்ததாகச் சொல்லும் காலத்தில் சொல்வழக்கு, எழுத்து வழக்கு வகைகள் எப்படி இருந்ததோ? மேலும், உங்கள் எண்ணப்படி திருவள்ளுவர் நீங்கள் சொல்லும் இடத்திலேயே பிறந்திருந்தாலும், ஒரு சில மலையாள வழக்குச் சொல்லாவது அவரு குரலில் ( குறளில் ) இருந்திருக்கும். நான் கண்டவரை இல்லையே .....? ஆகவே, நீங்கள் கண்டதை, கேட்டதை, அறிந்து கொண்டதை, ஆராய்ச்சி செய்து படித்ததை முன்வையுங்கள். படித்த சான்றோர்கள், தமிழ் பண்டிதர்கள், கல்வெட்டை படித்து தனக்குத்தோன்றியதை சொல்லும் விற்பனர்கள் ஆகியவர்களுடன் கலந்து உறுதி செய்து வெளிக் கொண்டு வாருங்கள். அதன் பிறகு பார்க்கலாம். இறுதியாக ஒன்று, அதற்குமுன்பாக மற்றொன்று ...................... கன்னியாகுமரி கோவில் கோபுரத்திற்கு நேராக ஒரு குளம் உண்டு. சுமார், 60 வருடங்களுக்கு முன்பே அது வற்றிப் போன குளம் தான் என்றாலும், ( கிணத்தை காணோம் என்பதை போல ) அந்த குளத்தைக் காணோம். எங்கு போயிற்று ? எப்படி எந்நாளில் போயிற்று ? தற்பொழுது அது எங்கே உள்ளது ? அல்லது அது இருந்த இடத்திலிருந்த படியே மறைந்தது என்றால், மறைத்தது யார்? தற்பொழுது அதன் இருப்பிடத்தில் இருப்பது என்ன ? என்பது பற்றி ஆராய்ந்து வெளியிடுங்கள். அது சமீபத்திய காலத்து நிகழ்ச்சிதானே. இன்றைக்கு தங்கள் வயதை 80 ஆகக் கொண்டாலும், அன்று தங்களின் வயது 20 லிருந்து 22க்குள் இருக்குமா.............தங்களுக்கும் இது தெரிந்திருக்குமே. அத்துடன், நாகர் கோவில் பாதை இலிருந்து ( இந்த பாதை என்பது குமரி வாழ் மக்களின் பேச்சுதான் ) பஞ்சலிங்கபுரம் தாண்டி, பழத்தோட்டத்தையும் கடந்து, கன்னியாகுமரிக்குள் நுழையும் பொழுது வலது கை பக்கம் ஒரு குளம் உண்டு. ( அதை ராணி குளம் என்று சொல்வார்கள் ) இன்றுவரை அதை ஒருவரும் அபகரிக்க வில்லை. அதன் தற்பொழுதைய நிலை என்ன ? அதை யாரும் அபகரிக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக இருக்க என்னசெய்யலாம் என்று ஆராய்ந்து எழுதுங்கள் நல்லது. அதே குளத்திலிருந்து திரும்பி வரும் பொழுது இரண்டு கொத்தளங்கள் உண்டு. (காவல் தளம் அல்லது SENTRY TOWER / WATCH TOWER ) இதெல்லாம் சரித்திர சான்றுகள். அது அழிந்த விதம் பற்றி ஆராய்ந்து எழுதுங்கள். இது சமீபத்திய காலத்து சுலபமான செயல் தானே.............? இறுதியாக மும்பையில் முன்பெல்லாம் மட்கா என்ற சூதாட்டம் உண்டு. அதன் முடிவுகள் ஒரு சின்ன பேப்பரில் வெளிவரும். ( ரேஸ் புக் போன்று ) அது வந்தவுடன், ஆர்வலர்கள் பலவிதமாகக் கூட்டிக் கழித்து இப்படித்தான்............இல்லை இப்படித்தான் ...........என்று மாறுபட்டக் கருத்துகளுடன் விவாதிப்பார்கள். இதில் எதுவுமே சரியாக இருக்காது. அது போன்றது தான் உங்கள் ஆராய்ச்சியும். தொடர்ந்து ஆராய்ந்து சரியான முறையில் வெற்றிபெற்று ' நீங்கள் சொல்வது சரிதான். அருமையான் ஆராய்ச்சி ' என்று, சொல்லி அரசாங்கம் ஏற்றுக் கொண்டு அதை தக்க அரசாங்க முறையில் பதிவு செய்து வெளியிட்ட பின்பு, அதை நான் படிக்க நேர்ந்தால், படித்த பின்பு தங்கள் இடம் தேடிவந்து, இவர் ஆராய்ச்சிக்கு எதிராக நான் இவ்வாறு என் கருத்துக்களைச் சொன்னேன். ஆனால், அறிஞர்கள் சொற்படி அரசாங்கம் இவர் கூற்றை ஏற்று இவர் சொல்வது சரிதான் என்று பதிவு செய்துள்ளது. இவர் ஆராய்ச்சி பற்றி நான் தவறாகக் கருத்துச் சொன்னதற்காக என் தவற்றை உணர்ந்து, நான் இங்கு கூடியிருக்கும் மக்கள் முன்னிலையில் பகிங்கரமாக மன்னிப்பு கேட்கிறேன். என்றுசொல்லி, அத்துடன் நில்லாமல் , நம் தமிழ் நாட்டிலுள்ள சிலர்போல் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்து எனது இந்த கருத்தை திரும்பப் பெறுகிறேன்.
Rate this:
Share this comment
Christ Raj Tony - kumari ,இந்தியா
27-அக்-201413:43:47 IST Report Abuse
Christ Raj Tonyமலையாளம் வந்து 500 வருடங்கள் தன ஆகுது....
Rate this:
Share this comment
Cancel
Kovai Subbu - Coimbatore,இந்தியா
27-அக்-201411:30:20 IST Report Abuse
Kovai Subbu தெய்வப்புலவர் திருவள்ளுவரை பற்றியும் அவரது உலக பொதுமறையாம் திருக்குறள் பற்றியும் பல புதிய விபரங்களை தெரிந்து கொள்ள உதவிய இந்த பதிப்பை எழுதிய முனைவர் பத்மநாபன் அவர்களுக்கும், வெளியிட்ட தினமலருக்கும் மிக்க நன்றி.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
27-அக்-201410:58:56 IST Report Abuse
ganapati sb நல்ல சுவாரஸ்யமான ஆராய்ச்சி கட்டுரை. திருவள்ளுவர் உலக மக்கள் நன்மைக்கு பல விஷயங்கள் கூறினார் தன்னைப்பற்றி குறிப்பாக எதையும் கூறவில்லை ஆகையால் ஒவ்வொரு பகுதி மக்களும் தன வட்டார பேச்சு வழக்கு குறளில் உள்ளதா என ஆராய்ந்து இது போன்ற கட்டுரைகளை படைக்கலாம். அதில் எது மிகவும் பொருந்துகிறது என சீர்துக்கிப்பார்க்கலாம். கன்னியாகுமரியில் வள்ளுவர் பிறந்திருக்கலாம் ஏனெனில் அங்கே இயல்பாக வானளாவிய வள்ளுவர் சிலை அமைந்து விட்டதே.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
27-அக்-201409:29:31 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் குமரி மாவட்டத்தில் சாவியை தாக்கோல் (தாழ் + கோல் ) என்று அழைப்பார்கள். அதையே தாழ் என்று வள்ளுவர் தமது குறளில் கூறுகிறார். மேலும் இளநீரை கருக்கு என்று குமரி மக்கள் அழைப்பர்..திருக்குறளிலும் இச்சொல்லே இடம் பெற்றுள்ளது..இது போன்ற திருக்குறளில் இடம் பெற்றுள்ள பல வட்டார வழக்குகள் இன்றும் குமரி மக்கள் பயன்படுத்துவதாகவே உள்ளது..கும்ரித்தந்தை வள்ளுவர் அவர்கள் பிறந்த மாவட்டத்தை சார்ந்தவன் என்று கூறிக்கொள்வதில் உவகையுறுகிறேன்..அருமையான பதிவைத்தந்த முனைவர். பத்மநாபன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
Rate this:
Share this comment
Anandhiselva - Madurai,இந்தியா
27-அக்-201423:09:53 IST Report Abuse
Anandhiselvaமேலும் "அங்கணத்துள் உற்ற அமிழ்தற்றால் ...............கோட்டி கொளல்" இதில் வரும் அங்கணம் மற்றும் கோட்டி போன்ற வார்த்தைகளும் நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்ட வழக்கு சொல்லாகும்....
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
27-அக்-201403:02:46 IST Report Abuse
Anantharaman அருமையான பதிவு...முனைவர் பத்மநாபன் அவர்களுக்கும்...தினமலருக்கும் நன்றி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை