வாணியாறு அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாணியாறு அணையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு

Added : அக் 27, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த சேர்வராயன் மலையில், ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள வாணியாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.இந்த அணை, 65 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையின் மூலம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள வெங்கடசமுத்திரம், மோளையானூர், கோழிமேக்கனூர், பாப்பிரெட்டிப்பட்டி, தேவராஜபாளையம், மெணசி, ஆலாபுரம், பூதநத்தம், தென்கரைக்கோட்டை, அலமேலுபுரம், அதிகாரப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, கவுண்டம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட, 17 கிராமங்களில் உள்ள, 10 ஆயிரத்து, 500 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது.இந்த அணையில், தண்ணீர் தேங்கினால், சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் விவசாய கிணறுகளில், நீர்மட்டம் உயர்வதோடு, அப்பகுதிகளில் விவசாயம் செழிக்கும். தற்போது, பருவமழை பெய்யத்துவங்கி உள்ளதால், அணைக்கு, 16 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், தற்போது அணையில் வெறும், 23 கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கியுள்ளது. இந்த அணையின் மூலம், விவசாய செய்ய காத்துக்கொண்டிருந்த விவசாயிகள், அணை குறையாக நிரம்பியுள்ளதால், பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவில், பாக்கு, மஞ்சள், கரும்பு, நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த காலங்களில், போதிய மழை இல்லாததாலும், அணையில் இருந்து தண்ணீர் வராததாலும், நெல், கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களின் பயிரிடும் பரப்பளவு குறைந்துவிட்டது. இதனால், பல ஏக்கர் நிலங்கள், தண்ணீரின்றி தரிசு நிலமாக காட்சி அளிக்கிறது.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:வாணியாறு அணை கட்டி முடித்து, 28 ஆண்டுகளில், இந்த ஆண்டு மழை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வாணியாறு அணைக்கு, தண்ணீர் வரத்து இல்லாமல் உள்ளது. இந்த அணையை நம்பி, விவசாயம் செய்ய காத்திருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வாணியாறு அணை நிரம்பாததால், இது, ஆடு, மாடு மேய்க்கும் தரிசு நிலமாக காட்சியளிக்கிறது. இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X