வெடிகுண்டு வழக்கு : ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வெடிகுண்டு வழக்கு : ஐகோர்ட் உத்தரவு

Added : அக் 28, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை மதுரையை சேர்ந்தவர் தர்வீஸ் மைதீன்.இவர் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி செல்ல இருந்த பயணப் பாதையில், திருமங்கலம் அருகே ஆலம்பட்டி தரைப்பாலத்தில் பைப் வெடிகுண்டு கண்டறியப்பட்டது. திருமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். என்னை போலீசார் கைது செய்தனர். கோர்ட் ஜாமின் வழங்கியது.வழக்கு விசாரணையை சென்னை பூந்தமல்லி சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. அணுசக்தி சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டப்படி பதிவான வழக்குகளை மட்டுமே சிறப்பு கோர்ட்டிற்கு மாற்ற முடியும். என் மீது கொலை முயற்சி உட்பட சாதாரண பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு கோர்ட்டிற்கு மாற்றிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும், என குறிப்பிட்டார். மனுதாரர் தரப்பில் வக்கீல் லஜபதிராய் ஆஜரானார். தமிழக அரசு நவ.,5 ல் பதில் மனு செய்ய நீதிபதி எம்.வேணுகோபால் உத்தரவிட்டார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை