மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க புது நீதிபதி நியமனம்| Dinamalar

மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க புது நீதிபதி நியமனம்

Added : அக் 28, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

லாகூர் : பாகிஸ்தானில் நடந்து வரும், மும்பை தாக்குதல் வழக்கை விசாரிக்க, புதிய நீதிபதி நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த 2008 நவம்பரில், மும்பை நகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், 166 பேர் பலியாயினர். இந்த தாக்குதல் சம்பவத்தில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் - இ - தொய்பா கமாண்டர் ஜாகிர் ரகுமான் லக்வி, அப்துப் வாஜித் உட்பட, ஏழு பேருக்கு தொடர்பு உள்ளதால், அவர்களுக்கு எதிராக பாக்., நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதுவரை, இந்த வழக்கை விசாரித்த ஏழு நீதிபதிகள் மாற்றப்பட்டுள்ள நிலையில், தற்போது, எட்டாவது நீதிபதியாக கவுசர் அப்பாஸ் சைதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வரும் 29ம் தேதி முதல், வழக்கு விசாரணையை தொடர்ந்து நடத்துவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை