Why congress loss in election? | காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை| Dinamalar

காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை

Added : நவ 01, 2014 | கருத்துகள் (18)
Advertisement
காங்கிரஸ் தொடர் தோல்விக்கு காரணம் என்ன? மூத்த தலைவர்களுடன் ராகுல் தீவிர ஆலோசனை

புதுடில்லி : தேர்தல்களில், காங்கிரசுக்கு தொடர் தோல்வி தோல்வி ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து, கட்சியின் மூத்த தலைவர்களுடன், துணை தலைவர் ராகுல், ஆலோசனை நடத்தியுள்ளார். இதையடுத்து, விரைவில், கட்சியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லோக்சபா தேர்தலிலும், அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் நடந்த சட்டபை தேர்தலிலும், காங்கிரஸ் படு தோல்வி அடைந்தது.அதிலும், மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் பா.ஜ.,விடம் ஆட்சியை பறிகொடுத்தது. இந்நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து, காங்., துணை தலைவர் ராகுல், கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆசாத், ஜெய்பால் ரெட்டி, அம்பிகா சோனி, மணிசங்கர் அய்யர் ஆகியோருடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.ராகுல் விசுவாசிகளான ஜெய்பால் ரெட்டி, சச்சின் பைலட், மீனாட்சி நடராஜன் ஆகியோரும் இதில் பங்கேற்றனர். அப்போது, தோல்விக்கான காரணம் குறித்து, ஒவ்வொருவரிடமும், ராகுல் காரணம் கேட்டார்.

அப்போது, அவர்கள் கூறியதாவது:
ஆளுங்கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் வீசிய அலை தான், தோல்விக்கு முக்கிய காரணம். இதுதவிர, தேர்தலின்போது நிலவிய உட்கட்சி பூசலும் தோல்விக்கு வழி வகுத்து விட்டது.பா.ஜ., தரப்பில், நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தது போல், நம் கட்சியிலும் உறுதியான தலைவர் ஒருவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருக்க வேண்டும்.கட்சியின் கொள்கை குறித்தும், மதச்சார்பின்மை குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், இதற்கான விளக்கம் பலருக்கு தெரியவில்லை. எதிர்காலத்தில், இதுகுறித்து மக்களுக்கு விளக்க வேண்டும்.காங்கிரசை, தொண்டர் பலம் வாய்ந்த கட்சியாக மாற்ற வேண்டும். சமுதாய பணிகளில், நம்மை அதிகம் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். ஜவகர்லால் நேரு காலத்தில், காங்., கட்சியினர் இலவச உணவு, இலவச கல்வி போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டனர். அதுபோன்ற நடவடிக்கைகளை தற்போதும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர்கள் ஆலோசனை கூறியதாக காங்., வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, விரைவில், கட்சியில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samuelmuthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
01-நவ-201408:39:14 IST Report Abuse
samuelmuthiahraj தேர்தல் மூலமே வட்டம் மாவட்டம் மாநிலம் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமேவொழிய உங்களுக்கு ஆமாம் சாமி போடுபவர்களை நியமிக்கக்கூடாது அடுத்து உங்களுக்கு நிறைய ஆதரவு இருக்கிறது என்ற பகல் கனவை விடவேண்டும் உங்களது ஊழல்கார்களுக்கு நீங்கள் உடனாளியாக இருப்பதை விடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
E.Manoharan - madurai,இந்தியா
01-நவ-201408:05:48 IST Report Abuse
E.Manoharan போலி மதவாத கும்பலுக்கு, போலி மதசார்பின்மை கும்பலுக்கு, ஊழல் கும்பலுக்கு, ஆட்சி அலங்கலதுக்கு, அந்நிய சக்திகளுக்கு, தேச விரோத கும்பலுக்கு, அதுதான் காங்கிரஸ் கும்பலுக்கு கிடைத்த மரண அடி.இதோடு துண்டை காணோம். துணியைக் காணோம் என்று ஓடி விடுங்கள்.இல்லையேல் இனி உங்கள் ஆடைகள் உரியப்படும். பாரத் மாதாகி ஜே. ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
E.Manoharan - madurai,இந்தியா
01-நவ-201407:51:50 IST Report Abuse
E.Manoharan உங்களை தோற்கடித்தது பெரும்பான்மை மக்களை கிள்ளுக் கீரைகளாக நினைத்து அவர்களை அகதிகளை போல் நடத்தியது, வீணாய்ப்போன போலி மதசார்பின்மையும்,அளவுக்கதிகமான ஊழல் பெரும்புள்ளிகளை கூட்டணி சேர்த்துக்கொண்டு 10 ஆண்டு காலம் ஆட்சி என்ற பெயரில் அடித்த கூத்துகள். ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக சட்ட திருத்தம் கொண்டு வர அரும்பாடு பட்ட காங். ஐ மக்கள் மறக்க முடியுமா? கட்சியை கலைத்து விட்டு குடும்பத்துடன் இத்தாலிக்கு ஓடி விடுங்கள். அதுதான் நாட்டிற்கும் மக்களுக்கும் நல்லது ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
01-நவ-201407:13:20 IST Report Abuse
அறிவா லயதாத்தா அரசு ஊழியர் மீது புகார் இருந்தால் அவர் சஸ்பெண்டு செய்யபப்ட்ட பிறகே விசாரணை செய்வர். ஆனால் சோனியா ராகுல் இன்னும் பதவியில் ஒட்டிக்கொண்டு காரணம் தேடுகின்றனர் ஆளுக்கு ஒரு நீதியா?
Rate this:
Share this comment
Cancel
Sutha - Chennai,இந்தியா
01-நவ-201406:54:47 IST Report Abuse
Sutha காங்கிரசின் குடும்ப அரசியலின் விளைவுதான் இதற்க்கெல்லாம் காரணம். இது தெரியாமல் மண்டயப் போட்டு குழப்புவதால் பலனில்லை. காங்கிரசில் இருந்த மூத்த,நரசிம்மராவு போன்றவர்களை ஓரம் கட்டி,தன கும்பத்தினரே பதவியில், அதிகாரத்தில் சுகம் காண, சோனியா குடும்பத்தினர் போட்ட ஆட்டமும் பெரிய காரணங்கள்.
Rate this:
Share this comment
Cancel
ramalingam - chennai,இந்தியா
01-நவ-201406:19:21 IST Report Abuse
ramalingam உங்கள் குடும்பம் தலைமை தான் காரணம், ஊழல். ஊழல் . மகா ஊழல் தான் காரணம், நாட்டை கொள்ளை அடிப்பதிலே குறியாக இருந்துவிட்டு. இப்போ என்ன ஆராய்ச்சி. உங்கள் குடும்பம் அரசியலை விட்டு விலகினால் தான் காங்கிரஸ் ஏதோ கொஞ்சம் நஞ்சம் என இருக்கும். இல்லை எனில் சுத்தமா அழிந்துபோகும்.
Rate this:
Share this comment
Cancel
suresh kumar - singapore,சிங்கப்பூர்
01-நவ-201406:05:55 IST Report Abuse
suresh kumar ஒரு இனத்தையே அழித்த பாவம் சும்மா விடுமா.....எவ்வளவு பேர் கதறினார்கள் ....
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
01-நவ-201406:05:46 IST Report Abuse
nimmi எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், சுமார் 60 ஆண்டுகளாக பார்த்து வருபவன் என்ற முறையில் கூறுகிறேன், காங்கிரஸின் தொடர் தோல்விகளுக்கு காரணம், இவர் வந்து கட்சியில் கோலோச்சியதற்கு பின்னர் நடைபெற்ற இவரது "Deeds and Misdeeds" தான். வேறென்ன சொல்ல. பத்தாண்டுகளுக்கு முன்பு, சோனியாவின் கட்டுப்பாட்டில் கட்சி இருந்த போதுகூட, நெடுங்காலம் கழித்து மத்தியில் ஆட்சியை பிடித்து பத்தாண்டு காலம் நாட்டை ஆள முடிந்தது.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
01-நவ-201406:05:18 IST Report Abuse
Subburamu Krishnaswamy only reason is corruption + Sonia and Rahul leadership
Rate this:
Share this comment
Cancel
kanak raja - tuticorin ,இந்தியா
01-நவ-201402:00:28 IST Report Abuse
kanak raja Really
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை