வரலாறு வாழும் தமிழகம்| Dinamalar

வரலாறு வாழும் தமிழகம்

Added : நவ 12, 2014 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
 வரலாறு வாழும் தமிழகம்

'இந்தியர்களுக்கு வரலாற்று உணர்வு இல்லை' என்று மேனாட்டு அறிஞர்கள் ஒரு சிலர் சொல்லிச் சென்றுள்ளனர். அது உண்மை தான். ஏனெனில் எத்தனையோ வரலாற்று சின்னங்களை வடித்து வைத்த நம் கலை வல்லுனர்கள் அவற்றை உருவாக்கிய தொழில் நுட்பத்தை வருங்கால சந்ததியினர் அறியும் வகையில் எவ்விதத்திலும் பதிவு செய்ய தவறிவிட்டனர். அதனால் தான் விண்முட்டும் விமானம் கொண்ட தஞ்சை பெரிய கோயில் அமைப்பின் நுட்பம் நமக்கு விளங்கவில்லை. அக்கோயிலில் பொறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் எத்தனையோ வரலாற்று செய்திகளை, சமூக பிரச்னைகளுக்கான தீர்வுகளை நமக்கு சொல்லாமல் சொல்லுகின்றன. நமது மக்கள் மெய்க்கீர்த்தி என்ற பெயரிலே மன்னர்களின் வரலாற்றை ஒரு குளிகையில் (மாத்திரையில்) அடைத்தது போல் எழுதி வைத்திந்தார்கள். அதனை நாமும் அறிந்திருக்கவில்லை. அயலவருக்கும் அறிவிக்கதெரியவில்லை. எனவே தான் அவர்கள் நம்மை பார்த்து வரலாற்றுணர்வு அற்றவர்கள் என்று வக்கனை பேசுகின்றனர்.தமிழ் வளர்த்த மதுரையை சுற்றிதான் எத்தனை வரலாற்று சின்னங்கள். ஆதித்தமிழன் பேசிய தமிழ் மொழிக்கு எழுத்து வடிவம் கொடுத்தவர்கள் மதுரை மக்களே என்பதைத்தான் மாங்குளம், அரிட்டாபட்டி, ஆனைமலை, அழகர்கோயில், திருவாதவூர் மலைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
கோயில்களே பள்ளிகள் : நமது நாட்டில் ஊரெங்கும் கோயில்கள், அவையெல்லாம் ஏதோ நம்மக்களை மூடர்களாக்கும் மூலதனங்கள் என்று சிலர் எண்ணிக் கொண்டுள்ளனர். இல்லை. அவையெல்லாம் நமது ஆண்ட பரம்பரையின் அறிவுத்தேடல்கள். கோயில்களே ஒரு காலத்தில் நமது பள்ளிகள். நீதிமன்றங்கள், வங்கிகள், வேலைவாய்ப்பு மையங்கள், ஓதுவார் சாலை என்னும் மருத்துவமனைகள், ஆதரவற்றோரை அரவணைத்த ஆஸ்ரமங்கள், அனைவருக்கும் வேண்டியவற்றை செய்த அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், கலைக் கருவூலங்கள், அருங்காட்சியகங்கள். ஒன்றிலே எல்லாமாக செய்யப்பட்ட கோயில்கள் என்னும் பாரம்பரிய சின்னங்கள் தான் நமது வலிமை. நமது வரலாறு, நமது வாழ்வு.
உன்னத கலைப்படைப்பு : 'தென்னக எல்லோரா' என்னும் வகையில் கழுகுமலையில் கலைக்கோயில் ஒன்று கண்டான் பாண்டிய பெருவேந்தன். வடக்கே அஜந்தா என்றால், தெற்கே ஒரு சித்தன்ன வாசல். பனைமலை என ஒன்றுக்கு இரண்டாக ஓவியக்கலைக்கு ஒப்பற்ற சான்றுகள். நுண்கலைகளின் நேரிய வளர்ச்சிக்கு சான்றாக ஆனைமலை, அரிட்டாபட்டி, கீழவளவு ஓவியங்கள். அதற்கும் மேலாக 4,000 வருட பழமைவாய்ந்த ஓவியங்களுக்கும் பஞ்சமில்லை. செந்தவரை, கீழ்வாலை, உடையாள் நத்தம், மல்லப்பாடி, சிறுமலை, கிடாரிப்பட்டி, திருமலை, கருங்காலக்குடி என எங்கெங்கு காணினும் நம் பழங்குடி மக்களின் கலைப்படைப்புகள் தான்.
வாழும் வரலாறுகள் : நீதிபதிகளுக்கு, வக்கீல்களுக்கு என்னென்ன தகுதிகள் என்பதை வரையறுத்திச் சொல்லும் மானூர் (நெல்லை) கல்வெட்டை சுப்ரீம் கோர்ட்டில் வைத்து போற்றுகின்றனர். ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் வரையறுத்த சட்டமும் நீதியும் இது. ஒரு கோயில் இருந்தால் அது ஊர். நான்கு கோயில்கள் இருந்தால் அது நகரம். பல கோயில்கள் இருந்தால் மாநகரம். காஞ்சியே 'தமிழ்நாட்டின் முதல் மாநகரம்' என கல்வெட்டுகள் சொல்கின்றன. நாடெல்லாம் பொள்ளலாகச் சிலைவடித்த காலத்தில் தமிழகத்தில் மட்டும் உள்ளீடு முழுவதும் செம்பொன்னால் சிலைவடித்தவர்கள் தமிழர்கள். ஆடவல்லான், அர்த்தநாரீசுவரர், ரிசபாந்தியர், கல்யாணசுந்தரர் என எத்தனை உன்னதமான கலை வடிவங்கள் நம் கோயில்களில் உள்ளன. கொடிய மனம்கொண்ட சிலர் இவற்றை கோடிகளுக்கு விலைபேசி அயலவருக்கு விற்பதும் பின் பெரும் பாடுபட்டு நாம் மீட்பதும் செய்திகள்.மண்ணை வெட்டினால் வரலாறு. ஆற்றை தோண்டினால் காசுகள், கல்லை தட்டினால் இசை, என்று எங்கெங்கு காணினும் வரலாறாகவே வாழ்கிறது தமிழகம். இவற்றையெல்லாம் இனிவரும் தலைமுறை செய்ய முடியுமா? செய்யத்தயாராக இருக்கிறோம். எனவே தான் இருப்பதையேனும் காக்க வேண்டிய கட்டாயக் கடமையில் நாம் இருக்கிறோம்.
பாதுகாக்கும் கடமை : தொல்லியல் மரபுச் சின்னங்களை பாதுகாக்க பல சட்டங்கள் உள்ளன. 300 மீ., வரை ஆக்கிரமிப்புகள் கூடாது. சட்டங்கள் வலுவிழந்து வேடிக்கை பார்க்கும் நிலைதான் உள்ளது. ஒரு கூட்டம் பாரம்பரிய சின்னங்களை பங்குபோட துடிக்கின்றது.இதற்கு என்ன தான் வழி. மக்களின் மனமாற்றம் விழிப்புணர்வு, நாமிருக்கும் நாடு நமதே என்ற எண்ணம், நமது வரலாற்று சின்னங்களை நமது தந்தையர் வாழ்ந்த வீடுகளாக, நமை ஈன்ற தாயார் வாழ்ந்த கோயில்களாக கருத வேண்டும். கற்பனையாக எழுதப்பட்டவையல்ல நமது வரலாறுகள். அவற்றிற்கெல்லாம் அடிப்படை ஆதாரங்கள் ஊர்களிலே உள்ளன என்பதை நாம் உணர வேண்டும். எதிர்கால சந்ததியினருக்கு உணர்த்த வேண்டும். -சொ.சாந்தலிங்கம்தொல்லியல் அறிஞர், மதுரை. 98946 87358

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
18-செப்-201516:58:59 IST Report Abuse
JeevaKiran தூக்கு தண்டனை வேண்டுமா வேண்டாமா என்ற விவாதமே வேண்டாம். சட்டத்தை மதிக்காத அரசியல் வியாதிகளை, அரசு அதிகாரிகளை, கண்காணிக்க வேண்டிய ஆளுநர்களை முதலில் தூக்கிலிடுங்கள். பிறகு பாருங்கள் நாட்டில் ஒரு குற்றம் / ஆக்கிரமிப்பு நடக்கிறதா என்று?
Rate this:
Share this comment
Cancel
Anantharaman - Porur, Chennai,இந்தியா
13-நவ-201403:41:20 IST Report Abuse
Anantharaman உலகில் உள்ள எந்த மனித இனமும் காணாத அருமையான நாகரீகத்தை / கலைத்துவத்தை நமக்கு கொடுத்தவர்கள் தான் சேர/சோழ/பாண்டியர்கள்.... அவையெல்லாம் காலப்போக்கில் புதிய அரசியல் வியாதிகளால் மாற்றப்பட்டு இன்று வேறு வெத்து/மனிதநேயம் இல்லாத நாகரீகத்தை நோக்கி நம் புதிய தலைமுறையை கொண்டுபோகிறார்கள்....இதை சரிசெய்ய என்னைக்காவது/எங்காவது ஒரு சோழ/பாண்டிய ரத்தத்திலிருந்து ஒருத்தன் வரமாட்டனா?
Rate this:
Share this comment
skanda kumar - bangalore,இந்தியா
19-நவ-201418:38:22 IST Report Abuse
skanda kumarஇந்த கேள்வியை செந்தமிழ் மாநாடு நடத்தியபோது யாரும் கேட்கவில்லை....
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
12-நவ-201421:19:40 IST Report Abuse
Mohan Ramachandran வரலாறு ஹா ஹா ஹா டாஸ்மாக்கில் வரலாறு காண்போம் .காலம் கட்டாயம் நம்மை நினைவில் வைக்கும் .தமிழர்கள் டாஸ்மாக்கில் அழிந்தார்கள் என்று
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Tamil Nadu,இந்தியா
12-நவ-201416:05:03 IST Report Abuse
Thamizhan சேர,சோழ ,பாண்டிய மன்னர்களின் முழு வரலாறு யாருக்கும் தெரியாது. மேலும் அவர்கள் என்ன சாதியை சேர்ந்தவர்கள் என்றுகூட தெரியாது. இதுதான் உண்மையும்கூட. இப்படி இருக்கையில் முகலாயர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் அவர்களை எதிர்த்து போரிட்டவர்களை காட்டிகொடுத்து,அவர்களிடம் சன்மானம் பெற்றவர்களே பிறகு தங்களை தாங்களே அரச வம்சம் என்று பொய் சொல்லிக்கொண்டு பொய்யாக வரலாரும் எழுதி விட்டார்களே. அதையும் இந்த உலகம் பொறுத்துக்கொண்டுதானே இருக்கின்றது. ராஜ வம்சத்தில் வந்தவனுக்கு சாதியின் பெயரில் தன்னை மேல்நிருத்தவேண்டிய கட்டாயம் எப்பொழுதுமே தேவை இல்லை.ஏனென்றால் அவனின் செயல்கள் போதும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உள்ள வரலாறு அடியோடு அழிக்கப்பட்டு பொய்யான வரலாற்றைத்தானே நாம் இன்று படிக்கின்றோம் ,பார்த்துக்கொண்டிருக்கிறோம்.உண்மைகள் ஒருநாள் வெளியில் வரும் ,அது இயற்கையாகவே நடக்கும்.பொய்யாக தங்களை தாங்களே உயர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கூட்டம் பல உண்மைகளை மறைத்து ஒரு பெரிய பொய்யான வரலாற்றைப்படைத்து விட்டார்கள் என்பது மட்டும் உண்மை .உண்மை இப்படி இருக்கையில் யாருக்கும் எதுவும் தெரிய வாய்ப்பில்லை .வீணாக பழையதை தோண்டி எடுக்கிறோம் என்று சொல்லி மீண்டும் மீண்டும் பொய்யான பல உண்மைகள் வந்துகொண்டுதான் இருக்கும் அதுதான் ஆரியர்கள் சொல்லிகொடுத்த ரகசியம் .
Rate this:
Share this comment
skanda kumar - bangalore,இந்தியா
12-நவ-201417:50:16 IST Report Abuse
skanda kumarகோவில்கள் என்றாலே அவைகளை சுரண்டி, அந்த சொத்துகளை அழித்த தி மு க இதற்கு மூல காரணமாகும். செந்தமிழ் மாநாட்டில் கம்பர், தேவார திருவாசகம் பாடிய தமிழ் பெரியோர்கள் முற்றிலும் மறைக்கபட்டனர். எனவே தமிழர் வரலாறை பெருமளவு சிதைத்து வைத்தது குடும்ப அரசியல் தி மு க தான்....
Rate this:
Share this comment
Cancel
Kadambur Srinivasan - Chennai,இந்தியா
12-நவ-201413:41:25 IST Report Abuse
Kadambur Srinivasan மிக்க நன்று, மிக அழகான சான்றுடன் உள்ள கருத்துகள்.
Rate this:
Share this comment
Cancel
நீலகண்டன் - Chennai,இந்தியா
12-நவ-201406:58:17 IST Report Abuse
நீலகண்டன் உண்மை உண்மை தங்களது வேண்டுகோளுக்கு மக்கள் செவி மடுக்க வேண்டும். வரும் தலைமுறையினர் நம் வரலாற்று சின்னங்களை பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் அரசியல் கலப்புயின்றி அனைவரும் இதில் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
12-நவ-201405:42:50 IST Report Abuse
Ootai Vaayan தமிழ் காத்த கழக மணிகள் ராமர் எங்கு இன்ஜினியரிங் காலேஜில் படித்தார் என்று கேட்பார். இந்த பாரம்பரியமிக்க கோயில்களையும் கடவுளை நிந்தித்தே அரசியல் வாழ்வில் ஆதாயம் தேடியவர்கள் ஆயிரக்கணக்கில் இருகிறார்கள். கடவுள் இருந்தால் பரவாயில்லை என்று சொல்லியே கோடிகளில் புரளும் அறிவு ஜீவிகளும் இங்கேயே தான் இருக்கிறார்கள். 4000 ஆயிரம் வருட ஓவியங்கள் இருந்தும் மாக்ஸ் முல்லர் சொன்ன ஆரிய திராவிட சரித்திரம் தான் எல்லோரும் பேசுகிறார்கள். பண்டை காலத்தில் தமிழ் நிலத்தை ஆண்டவர்கள் பாரம்பரியமான எல்லா கலைகளும் வளர்த்தார்கள். ஆனால் இப்போது..... நீங்களே இந்த வாக்கியத்தை முடித்துக்கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
skanda kumar - bangalore,இந்தியா
12-நவ-201417:56:54 IST Report Abuse
skanda kumarஇப்போது சாமானியர்கள் என்ற பெயரில் குடும்ப பிசினசை வளர்த்துகொண்டு அரசியல் செய்பவர்கள், கோடி கோடி சொத்து வைத்து மாட்டிகொண்டு பெயிலில் வெளியே வுள்ளவர்கள் இவர்கள் பிடியில், டாஸ்மாக் பிடியில் மக்கள். பெரியார் அன்று சொன்ன "முட்டாள்களே முட்டாள்களே" இன்றும் பொருந்தும். அன்று சுரண்டியவர்கள் வேறு இன்று அவர்களை பழித்து அனால் அவர்கள் செய்த அதே சுரண்டலை தமிழன் மீது செய்து கொண்டு இருக்கும் இப்போதைய போலி தமிழின தலைவர்களை எப்போது பெரியார் வழியில் தமிழன் கண்டு கொள்வான்?...
Rate this:
Share this comment
Cancel
Tiruvannamalai KULASEKARAN - Melbourne  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201403:48:09 IST Report Abuse
Tiruvannamalai KULASEKARAN ALL IN ONE..ஆலயங்களில் எல்லாம் அடக்கம் பள்ளி நீதி்மன்றம் உட்பட அனைத்தும் நமது கோவிலுக்குள் அடக்கம்தான் அந்த கலை அறிவு வாழையடி வாழையாக வராமல் போனது எப்படி என புரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை