ரூ.56,000 கோடிக்கு பொருட்கள் விற்பனை : சீன இணைய வர்த்தக நிறுவனம் சாதனை| Dinamalar

ரூ.56,000 கோடிக்கு பொருட்கள் விற்பனை : சீன இணைய வர்த்தக நிறுவனம் சாதனை

Added : நவ 13, 2014 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 ரூ.56,000 கோடிக்கு பொருட்கள் விற்பனை : சீன இணைய வர்த்தக நிறுவனம் சாதனை

ஷாங்காய் : சீனாவைச் சேர்ந்த பிரபல ஷாப்பிங் இணைய நிறுவனமான, அலிபாபா, நேற்று முன்தினம் ஒரே நாளில், 56,000 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
சீனாவில் பிரபலமான வர்த்தக நிறுவனம், அலிபாபா. இந்த நிறுவனம், இணையம் மூலமாகவும் பொருட்களை விற்பனை செய்கிறது. கடந்த, 2009லிருந்து, நவம்பர், 11ம் தேதியை, இளைஞர்கள் தினமாக அறிவித்து, விற்பனையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன்படி, நேற்று முன்தினத்தை, 'சிங்கில்ஸ் டே' என, அறிவித்து, அன்று இணையம் மூலமாக, பொருட்களை வாங்குவோருக்கு பல்வேறு சலுகைகளை வாரி வழங்கியது. குறிப்பாக, வாங்கும் பொருட்களின் விலைகளில், 50 சதவீதம் வரை தள்ளுபடி என்றும் அறிவித்தது. இதனால், விற்பனை துவங்கியதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்காக போட்டி போட்டு பதிவு செய்தனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிக அளவில் பொருட்களை வாங்கினர். இதனால், ஒரே நாளில், 56,000 கோடி ரூபாய்க்கு பொருட்கள் விற்பனையாகின. இணைய வர்த்தகத்தில் இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.இதற்கு முன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வர்த்தக நிறுவனம், கடந்தாண்டு, 'சைபர் மண்டே'என்ற ஒரு தினத்தை அறிவித்து, 32,000 கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்பனை செய்தது, சாதனையாக இருந்தது. இந்த சாதனையை அலிபாபா நிறுவனம் முறியடித்துஉள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்தாண்டை விட, இந்தாண்டு, 60 சதவீத விற்பனை அதிகரித்துள்ளது. முதலில், சீனாவில் உள்ள வாடிக்கையாளர்களை மட்டுமே குறிவைத்து செயல்பட்டோம். இப்போது, 217 நாடுகளில் இருந்து வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்காக எங்களிடம் பதிவு செய்துள்ளனர். ஒரு நொடிக்கு, 30 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பங்குச் சந்தையில் அலிபாபா நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு உயர்ந்தது.
'ப்ளிப்கார்ட்' சலுகை : இந்தியாவில் முன்னணியில் உள்ள இணைய வர்த்தக நிறுவனமான, 'ப்ளிப்கார்ட்'டும் சமீபத்தில் இதேபோன்ற அதிரடி விற்பனை திட்டத்தை அறிவித்தது. இந்த நிறுவனத்தில் பொருட்கள் வாங்குவதற்காக பதிவு செய்வோருக்கு, சிறப்பு பரிசகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஏராளமான வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்குவதற்காக பதிவு செய்தனர். அன்று ஒரு நாளில் மட்டும், 600 கோடி ரூபாய்க்கு, வர்த்தகம் நடந்துள்ளாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஸ்நாப்டீல்' நிறுவனமும், இதேபோன்ற சலுகை திட்டத்தை நேற்று முன்தினம் அறிவித்திருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tiruvannamalai KULASEKARAN - Melbourne  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-201404:09:57 IST Report Abuse
Tiruvannamalai KULASEKARAN 56000 கோடிக்கு ஒரேநாளில் விற்பனை செய்யப்பட்ட பொருட்கள் எது என்று தெரியவில்லையே ... நல்லவேளை அலிபாபா நிறுவனத்தி்ல் நாற்பது தி்ருடர்கள் நுழையவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X