தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பம் வேளாண் அறிவியல் நிலையத்தில் பயிற்சி

Added : நவ 20, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஆலங்குடி: ஆலங்குடி அடுத்த வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், தீவனப் பயிர் சாகுபடி தொழில்நுட்பப் பயிற்சி மற்றும் தீவனப்பயிர் நடவு செய்து, செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.இப்பயிற்சிக்கு வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் ஞானமலர் தலைமை வகித்து, கால்நடைகளுக்கேற்ற தீவனப்பயிர்களின் முக்கியத்துவத்தைப் பற்றி துவக்க உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் மாரிமுத்து, தீவனப்பயிர் சாகுபடி பற்றி பேசியதாவது;தமிழகத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை, 2.5 கோடி எனவும், இவற்றுக்கு, 100 மில்லியன் டன்கள் பசுந்தீவனத் தேவை உள்ளது. தமிழகத்தில், 70 முதல், 80 சதவீதம் பசுந்தீவன பற்றாக்குறை உள்ளது. இத்தருணத்தில், தீவனப்பயிர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் தான், பால் உற்பத்தி அதிகரிப்பதோடு மட்டுமின்றி, தீவன செலவையும் குறைக்க முடியும். தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க வழிமுறைகளான புதிய உயர் விளைச்சல் ரகங்களை தேர்வு செய்து பயிரிடுதல், தரிசு நிலங்கள், புறம்போக்கு நிலங்கள், சாலையோர நிலங்கள், ஏரிக்கரை, வாய்கால் கரை, ஆற்றுப்படுகை போன்ற இடங்களில் நிலத்தின் தன்மைக்கேற்ப தீவனப்பயிர்கள் வளர்த்தல், ஒருங்கிணைந்த பயிர் உற்பத்தி முறைகளை கையாளுதல், கொழுக்கட்டை புல் மூன்று வரிசையிலும், வேலி மசால் ஒரு வரிசையில் என்ற விகிதத்தில், ஒரு எக்டர் நிலத்தில் பயிரிடுவதன் மூலம், 20 செம்மறி ஆடுகளையும், 23 வெள்ளாடுகளையும் பராமரிக்கலாம். தென்னை, மா, கொய்யா, எழுமிச்சை, போன்ற மரப்பயிர்களும் தீவனப்யிர்களான கம்புநேப்பியர் புல் கோ 4, கினியாபுல், வேலிமசால், தீவனத்தட்டைபயிர் கோ 8, தீவனசோளம் கோ.எஃப்.எஸ்29 ஆகிய தீவனப்யிர்களை ஊடுபயிர் செய்யலாம்.ஒரு எக்டரில், கம்புநேப்பியர்புல் கோ4 மற்றும் தட்டைப்பயிர் ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம், 25 கறவை மாடுகள் அல்லது எருமை மாடுகளை பராமரிக்கலாம். ஒரு நாளைக்கு, ஏழு லிட்டர் வரை பால் கறக்கும் மாடுகளுக்கு பசுந்தீவனமாக, 25 முதல், 35 கிலோ வரை இடுவதன் மூலம் பால் உற்பத்தியை அதிகரிக்கலாம்மேலும், கம்புநேப்பியர் புல், கினியா புல், கொழுகட்டைப்புல், வேலிமசால், குதிரைமசால் ஆகிய தீவனப்பயிர்கள் மற்றும் தீவன மரங்களான சுபாபுல் மற்றும் அகத்தி ஆகியவற்றைப் பற்றிய சாகுபடி தொழில்நுட்பங்களைப் பற்றி உதவிப் பேராசிரியர் விளக்கி கூறினார். பயிற்சியில், புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட கம்புநேப்பயிர் புல் கோ 4 தீவனப்பயிர், சொட்டுநீர் பாசன முறையில் நடவு செய்யும் முறை குறித்து அவர் கூறியதாவது;புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட, கம்புநேப்பயிர் ரகம் கோ4 பல்லாண்டு பயிர். இதன் தண்டு சிறுத்தும் ஒரு செடியில், 350 - 400 எண்ணிக்கை உள்ள இலைகளும், 30 - 40 எண்ணிக்கை உடைய கிளைகளும் உற்பத்தி செய்யும். இதனை ஏக்கருக்கு, 16,000 கரணைகள் நடவு செய்ய தேவைப்படுகிறது. இதனை வரிசைக்கு வரிசை, 50 செ.மீ மற்றும் செடிக்கு செடி, 50 செ.மீ இடைவெளியில் நடவு செய்தால், ஏக்கருக்கு ஒரு ஆண்டுக்கு, 140 முதல், 160 டன் வரை மகசூல் பெறலாம். மேலும், ஒரு ஏக்கரில் கரணை உற்பத்தி செய்தால், 4 லட்சத்து, 60 ஆயிரம் வரை லாபம் ஈட்டலாம், என்றார். பயிற்சியில் வேளாண்மை நிலைய விஞ்ஞானிகள் மற்றும் புதுகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X