விடிஞ்சா பேச்சு - இயக்குநர் செந்தில் குமார் பேட்டி| Dinamalar

விடிஞ்சா பேச்சு - இயக்குநர் செந்தில் குமார் பேட்டி

Added : டிச 03, 2014
Advertisement
விடிஞ்சா பேச்சு - இயக்குநர் செந்தில் குமார் பேட்டி

''மதுரையை கண்ணகிக்குப் பின் நாங்கதான் டைட்டிலில் எரித்திரிருக்கிறோம்... ஆனால் படத்தின் கதையால் மதுரை மக்களின் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறோம். தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த பெண்ணை இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியுள்ளோம். இதை விட வேறு என்ன பெருமை வேண்டும்'' என படம் வெளியாகும் நாளை நோக்கி உற்சாகமாக காத்திருக்கின்றனர் 'மதுரை விடிஞ்சா போச்சு' படக்குழுவினர்.மதுரை செல்லூர் வி.பி.செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் ஏற்கனவே குறும்படமாக வெளிவந்துள்ளது. அவரேதான் டைரக்டர். அதன் வெற்றியை வைத்து இதை பெரிய பட்ஜெட்டில் படமாக்கியுள்ளார். அடுத்த படங்களின் ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த இயக்குனர் செந்தில்குமார், கதாநாயகி நிவேதாவிடம் பேசினோம்...செந்தில் குமார் : * படத்தின் போஸ்டர்களை பார்த்தால் ரத்தமும் அரிவாளும்தான் தென்படுகிறது. மதுரை கதை என்றால் இப்படித்தான் காட்ட வேண்டுமா?எனது இயக்கம் நகைச்சுவை, காதல், நட்பை மையமாக கொண்டுள்ளது. சில காட்சிகளில் அரிவாளை துாக்குவதைவிட வேறு வழியில்லை. படத்தின் ஆக்ரோஷத்திற்கு அது தேவையாக உள்ளது. 'சென்சார் போர்டில்' சென்ற போதும் இதேகேள்வியை அவர்கள் எழுப்பினார்கள்.* நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை கதாநாயகியாக்கியதற்கான கதை?மதுரையில் பல நடிகர்களின் படங்களை பார்க்க முதல் ரசிகர்களாக வருபவர்கள் இந்த சமூகத்தை சேர்ந்த மக்கள் தான். அதை இப்போதும் தியேட்டர்களில் பார்க்கலாம். சினிமா படம் எடுக்க முடிவு செய்த போது, அந்த சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்ணை கதாநாயகியாக்கி அவர்களுக்கும் ஒரு சமூக அந்தஸ்து கிடைக்க வேண்டும் என நினைத்தேன். அது மிகப்பெரிய போராட்டத்திற்கு பின் நிஜமாகியுள்ளது.* கதாநாயகி தேர்வுக்கா போராட்டம்?ஆமாம். மதுரையில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் யாரும் நடிக்க தயாராக இல்லை. பல மாவட்டங்களில் அலைந்து திருச்சி தேவராய நேரியில் வசிக்கும் அந்த மக்களோடு பல நாட்கள் பேசி, கடைசியாக பெற்றோர் தரப்பில் சம்மதித்தனர். அவர்கள் சமூகத்தை சேர்ந்த பலர்இப்படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தேன்.நிவேதா : * சினிமா கனவு நிறைவேறியதா?நாங்கள் சினிமா ரசிகர்கள். நான் நடிப்பேன் என கனவு காணவில்லை. முதலில் நடிக்க அழைப்பு வந்த போது நம்பவே இல்லை. கேமரா முன் நடிக்க முதலில் பயந்தேன். இப்போது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் நடிப்பேன்.* நடிகையான பின் உங்கள் சமூகத்தில் வரவேற்பு?படம் எப்போது வெளியாகும் என அனைத்து மாவட்டங்களில் உள்ள எங்கள் மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இப்படத்திற்காக பல எதிர்ப்புகளை நானும் சந்தித்து அதில் ஜெயித்துள்ளேன். அது போல் படமும் வெற்றி பெறும்.இயக்குனரோடு பேச 97905 89902

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X