Where is Rs.1000 crore property belongs to palani temple | பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?

Updated : டிச 09, 2014 | Added : டிச 08, 2014 | கருத்துகள் (55)
Advertisement
பழநி கோவிலுக்கு பக்தர் வழங்கிய ரூ.1,000 கோடி சொத்து எங்கே?

பழநி தண்டாயுதபாணி கோவிலுக்கு, 11 ஆண்டுகளுக்கு முன், பக்தர் ஒருவர் தானமாக வழங்கிய 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், இன்னும் கோவில் கணக்கில் சேர்க்கப்படாமல் உள்ளன. இது குறித்து, அறநிலைய துறை ஆணையர் உத்தரவிட்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக இருப்பது ஏன் என, தணிக்கை துறை கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், அறநிலைய துறையின் அலட்சியத்தால் இந்த சொத்துகள் தற்போது ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம் என்ற ஐயமும் ஏற்பட்டுள்ளது.


கடிதம்:

பழநி கோவிலுக்கான மண்டல தணிக்கை அலுவலர், அறநிலைய துறை ஆணையருக்கு, சமீபத்தில் கடிதம் எழுதினார். அதில் குறிப்பிடப்பட்டதாவது: கொடைக்கானலைச் சேர்ந்த, வி.என்.ஏ.எஸ்.சந்திரன் என்பவர், 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகளை, பழநி முருகன் கோவிலுக்கு சேருமாறு உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலை, கொடைக்கானல் சார் - பதிவாளர் அலுவலகத்தில் 2003 மார்ச்சில் பதிவு செய்து, அதன் ஒரு பிரதியை அறநிலைய துறை ஆணையருக்கு அனுப்பி உள்ளார். உயிலின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுத்து, சொத்துகளை கோவில் கணக்கில் சேர்க்கும்படி ஆணையர் அலுவலகத்தில் இருந்து, மதுரை இணை ஆணையருக்கு, 2004 ஜனவரியில் கடிதம் அனுப்பப்பட்டதுமதுரை இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இந்த கடிதம், உரிய நடவடிக்கைக்காக, கோவில் இணை ஆணையருக்கு, 2004 ஏப்ரலில் அனுப்பப்பட்டது. உயில் ஆவணம் கிடைக்கப் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், அந்த சொத்துகள் இதுவரை கோவில் கணக்கில் சேர்க்கப்படவில்லை.இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


கேள்விகள்:

எழுதியவராலேயே ரத்து செய்ய முடியாத அளவுக்கு, பாதுகாப்பு செய்யப்பட்ட இந்த உயிலின் இப்போதைய நிலை என்ன, இதில் கோவிலுக்கு அளிக்கப்பட்ட சொத்துகளின் நிலை என்ன என்பது தொடர்பாக, தணிக்கை அதிகாரிகள் பல கேள்விகளை எழுப்பி உள்ளனர்.இவ்வாறு கிடைத்த உயிலை பாதுகாக்கக் கூட எவ்வித நடவடிக்கையையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவலும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்காக, ஒரு கோப்பு கூட உருவாக்கப்படவில்லை. இது போன்று எத்தனை உயில்கள், தானங்கள் வரப்பெற்று உரிய நடவடிக்கையின்றி கிடக்கின்றன என்பது தெரியவில்லை என, தணிக்கை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


சொத்துகள் விவரம்:


*கோவை மாவட்டம் வால்பாறை, கேரளாவில் மூணாறு ஆகிய இடங்களில் உள்ள இரு தேயிலை தொழிற்சாலைகள்.
*கொடைக்கானல் டவுன் பகுதியில், மூன்று வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட, 197 சென்ட் நிலங்கள்.
*வி.என்.ஏ.எஸ்., காலணி தயாரிப்பு நிறுவனத்தில் 90 சதவீத பங்குகள்.
*இத்துடன், உயில் ஆவணத்தில் குறிப்பிடப்படாத, அவர் பெயரில் உள்ள பிற சொத்துகள்.

அறநிலைய துறையில் இதுவரை கேள்விப்படாத வகையில் இந்த முறைகேடு அமைந்துள்ளது. பக்தர் கொடுத்த சொத்து என்ன காரணத்துக்காக கோவில் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்பதை, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை கொண்டு விசாரிக்க வேண்டும். இந்த காலதாமதத்தால் ஏற்பட்ட இழப்புகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பொறுப்பாக்க வேண்டும்.
டி.ஆர்.ரமேஷ்
செயல் தலைவர்,
ஆலயம் வழிபடுவோர் சங்கம்


-- நமது நிருபர் - -

Advertisement


வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thudupathi Chinnaiyan - Coimbatore,இந்தியா
08-டிச-201420:03:35 IST Report Abuse
Thudupathi Chinnaiyan இது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன ...கோவில் கணக்குகள் ,மற்றும் நடைமுறைகள் வருடா வருடம் தணிக்கை செய்யபடுவது இல்லையா..? ஆணையர் அலுவலகத்தில் இருந்து மேல் நடவடிக்கை எடுக்கும் படி மதுரை இணை ஆணையருக்கு ஜனவரி 2004 இல் கடிதம் அனுப்பபட்டு உள்ளது .கடிதம் கிடைத்து 3 மாதங்கள் கழித்து கோவில் இணை ஆணையருக்கு மேல் நடவடிக்கைக்காக கடிதம் அனுப்ப பட்டுஉள்ளது .எந்த அரசு அலுவலகதிலுமே தங்கள் கட்டுபாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலககளுக்கு உத்தரவு இட்ட பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது உத்தரவின் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டல் கடிதம் என்ன மேல் நடவடிக்கை எடுக்க பட்டு உள்ளது என்பது குறித்து கேட்டு கொண்டே இருப்பார்கள் .குறிப்பிட்ட நனைவூட்டல் கடிதங்களுக்கு பதில் இல்லாவிட்டால் ஆணையரே சொத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதால் நேரடியாக செயல் பட்டு இருக்க வேண்டும் .ஆனால்இத்தனை ஆண்டுகள் கழித்தும் எந்த மட்டத்திலும் எந்தவிதமான மேல் நடவடிகளும் எடுக்காதது மிக பெரிய சந்தேககளை ஏற்படுத்துகிறது .....
Rate this:
Share this comment
Cancel
skanda kumar - bangalore,இந்தியா
08-டிச-201419:15:19 IST Report Abuse
skanda kumar ஒரு முஸ்லிம் அல்லது கிறிஸ்து மத சொத்து விஷயத்தில் இது மாதிரி நடக்குமா? தி மு க மற்றும் ஆ தி மு க இரண்டும் இந்துக்களின் எதிரிகள். அவர்கள் இந்து வோட்டுகள் வாங்குகிறார்கள். ஆனால் இந்து கடவுள்களை கிண்டல் செய்கிறார்கள். ஒரு முஸ்லிம் மத சொத்து இந்த மாதிரி ஆனால் கருணாநிதி முதலில் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார். இந்துக்கள் என்றல் அவருக்கும், பிள்ளையார் சதுர்த்திக்கு வாழ்த்து கூறி வாபஸ் வாங்கிய ஸ்டாலினுக்கும் இது பற்றி அக்கறை இல்லை. இந்துக்கள் இது அறிந்து அடுத்த தேர்தலில் இத்தகைய போலி அரசியல் வாதிகளை மறுக்கவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மண்ணாந்தை - Raichur,இந்தியா
08-டிச-201418:56:26 IST Report Abuse
மண்ணாந்தை பதினோரு வருஷத்துக்கு முன்னாடி ஆறு கோடி மதிப்பு மக்களே. இப்போ என்ன இருக்கும். யோசிச்சு பாருங்கள். அப்பவே ஆக்ஷன் எடுக்கலையாம். இப்பமா எடுக்கப்போறாங்க மக்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X